Kalvari Mamalai Mel
1.கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் இயேசு தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை (2)
2.அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் (2)
3.கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே (2)
Inba Yesu Rajavai Naan
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் (2)
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)
1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு (2)
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)
2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு (2)
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)
Nee Iraivanai Thedi Kondiruka
நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார் (2)
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார் (2)
1. அழுகையில் அவரை அழைத்திடுங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பார்
நீதியைப் பூவினில் இறைத்திடுங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்
நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்
வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார்
நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்