Saturday, 28 September 2019

Enthan Yesu Enaku Nallavar எந்தன் இயேசு எனக்கு நல்லவர்

Enthan Yesu Enaku Nallavar
எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர்

கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால்

அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரை
துதிக்கப் படத்தக்கவரே

புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அனுதினம் என்னை வழி நடத்தும்

எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன்

Engum Pugal Yesu Rajanuke எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

Engum Pugal Yesu Rajanuke
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ உண்மை வேதங்காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்.

1.ஆயிரத் தொருவர் ஆவிரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி ஏசுவுக்கிதயம் தந்திடுவீர்

2.கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண் திறக்கவே
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்

3.தாழ்மை சற்குணம் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி
பாழுந்துற்குணமும் பாவச் செய்கை யாவும்
பறந்தோட பாற்பதுங்கள் பாரமன்றோ

4.சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே துயன் வீரரே
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்

Friday, 27 September 2019

Mana Valvu Puvi Valvinil Valvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

Mana Valvu Puvi Valvinil Valvu
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
                                     சரணங்கள்
1. துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது - நல்ல --- மண

2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா,
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? - நல்ல --- மண

3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல --- மண

4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறை  மே தாவி
அன்றியிப் பூவி லமிர்த   சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல --- மண

Aseervathiyum Karthare Aanantha ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த

Aseervathiyum Karthare Aanantha
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்

2. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே

3. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன்

4. ஞான விவாகம் எப்பொதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே

Aananthame Jaya Jaya ஆனந்தமே! ஜெயா! ஜெயா!

Aananthame Jaya Jaya 
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே

1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே

2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே

3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்
தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே

Adenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம்

Adenil Aathi Manam
1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே

2. இப்போதும் பக்தி யுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்

3. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணை
கொடுக்க வாருமே

4. இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே

5. மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே

6. நீரும் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்கியம் ஈந்திடும்

7. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்

Puthik Ketatha Anbin புத்திக் கெட்டாத அன்பின்

Puthik Ketatha Anbin
1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.

2. ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்.

3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.