Monday, 23 September 2019

En Yesu Rajan Varuvar என் இயேசு ராஜன் வருவார்

En Yesu Rajan Varuvar
என் இயேசு ராஜன் வருவார்
எண்ணிலடங்கா தூதரோடு
என்னை மீட்ட இயேசு ராஜன்
என்னை ஆளவே வருவார்

1.அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு
அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி
அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு
அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி

2.உலகில் நடப்பவை எல்லாம்
அவர் வருகைக்கு உண்மையைக் கூறும்
அவர் வருகை மிகவும் சமீபம்
அவர் வரவை சந்திக்க  ஆயத்தமா

3.வானில் ஓர் பேரொளி தோன்றும்
விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும்
மேற்கும் கிழக்கும் நடுங்க
மேகங்கள் மீதே வருவார்

Saturday, 21 September 2019

Megangal Naduve Vali Pirakkum மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

Megangal Naduve Vali Pirakkum
1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் (2)

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவிலோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் (2)

Mega Meethil Yesu Rajan மேகமீதில் இயேசு ராஜன்

Mega Meethil Yesu Rajan
மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வாராரே
ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்க
அவரே வாராரே

1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாராரே
மீண்டவரோ மேலோகமே செல்ல
மேதினியை விடுவார் – மேகமீதில்

2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
கிளம்பியே யெழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே – மேகமீதில்

3. பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
கூவியே கொடுத்திடுவார் – மேகமீதில்

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார்
ஆண்டவரே யறிவார் – மேகமீதில்

5. ஆயிரம் வருஷம் ஆளுகை செய்வார்
ஆண்டவர் இயேசு தாமே
நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்
ஜோதியின் ஆளுகையில் – மேகமீதில்

6. அல்லேலூயா கீதமே பாடி
அகமகிழ்ந்தாடிடுவோம்
வல்லவர் வரும் வேளையுமிதோ
மெல்லவே நெருங்கிற்றே – மேகமீதில்

Devan Varugitrar Vegam Irangi தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

Devan Varugitrar Vegam Irangi
1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்
           
                       பல்லவி
இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்தக் கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே

2. தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதவரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்

3. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்

4. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம்
சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
ஆவி மணவாட்டி வாரும் என்றே
ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்

Friday, 20 September 2019

Alinthu Pogintra Aaththumaakalai அழிந்து போகின்ற ஆத்துமாக்களை

Alinthu Pogintra Aaththumaakalai
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்

தெய்வமே தாருமே
ஆத்ம பாரமே

1.இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்

2.திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்

3.எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்

4.கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்

5.ஊதாரி மைந்தர்கள்
உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும்
விருந்து நடக்கட்டும்

Yesuvukkaai Thondu Seithidave இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே

Yesuvukkaai Thondu Seithidave
இயேசுவுக்காய்  தொண்டு செய்திடவே
ஏகமாய் எழும்பிடுவீர் சபையே
நாசமின் னானிலத்தில்  வருதே

1. தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி
தளராமல் பாடுகள் சகித்தவரை
நோக்கியே நாம் ஓடிடுவோம்
தாங்கியே காப்பாரே கடைசி  வரை   --- இயேசு

2. பாவத்தில் மா ஜனம் அழிகிறது
 லோகத்தின் ரட்சிப்பைக் கருதியே நாம்
நள்ளிரவோ  நடுப்பகலோ
நருங்குண்ட  ஆவியில் ஜெபித்திடுவோம்     --- இயேசு

3. மேகத்தில் இயேசு தான் தோன்றிடும் நாள்
வேகத்தில் நெருங்கிடும் காலமிதில்
பரிசுத்தத்தைக்  காத்துக்கொண்டே
பரமனுக்காய் கடும் சேவை  செய்வோம்   --- இயேசு

Ekala Satham Vanil எக்காள சத்தம் வானில்

Ekala Satham Vanil
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்

1.அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள

2.வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்குதாம் மாறிடாதே
தேவதூதர் பாடல் தொனிக்க
தேவன் அவரையே தரிசிப்போமே – எக்காள

3.கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

4.கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள்  யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள

5.கள்ளர்கள் பரவி அங்கு மிங்கும்
கர்த்தரின் வார்த்தையைப் புரட்டுகிறார்
கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்
கருத்துடன் நாம் விழித்திருப்போம் – எக்காள