Tuesday, 17 September 2019

Kalmithikum Desamellam கால் மிதிக்கும் தேசமெல்லாம்



Kalmithikum Desamellam
கால் மிதிக்கும் தேசமெல்லாம்  – என்
காத்தருக்கு சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்

1.பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி
அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் 
 அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

2.எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் 
அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று 
அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

3.செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை 
அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

4.திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள்
அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள் 
அல்லேலூயா  --- கால் மிதிக்கும்

Manthayil Sera Aadugale மந்தையில் சேரா ஆடுகளே

Manthayil Sera Aadugale

எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை

2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

Monday, 16 September 2019

Nadaka Solli Tharum நடக்கச் சொல்லித் தாரும்



Nadaka Solli Tharum
நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே [2]
தனித்துச் செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்

1. இருள் நிறைந்த உலகமிதில்
துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி
அன்பு கொண்ட தெய்வமே

2. அடம் பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே
அழைத்துச் செல்லும் இயேசுவே

Sunday, 15 September 2019

Enakoththaasai Varum Parvatham எனக்கொத்தாசை வரும் பர்வதம்



Enakoththaasai Varum Parvatham
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்

1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்

2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே

3. என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே

4. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்

Ennai Marava Yesu Natha என்னை மறவா இயேசு நாதா

Ennai Marava Yesu Natha
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே   --- என்னை

2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை  --- என்னை

3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே  --- என்னை

4. என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே.  --- என்னை

Enthan Jeba Velai எந்தன் ஜெபவேளை

Enthan Jeba Velai
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்

1.சோராது ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம் பாதம் வந்தேன்

2.உம்மோடு எந்நாளும்
உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேன்

3.நம்பிக்கை இல்லாமல்
அழிகின்ற மாந்தர்தனை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா

Thooyathi Thooyavare தூயாதி தூயவரே

Thooyathi Thooyavare
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்  (2)
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி

4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி