Wednesday, 11 September 2019

Adaikalame Umathadimai Naane அடைக்கலமே உமதடிமை நானே

Adaikalame Umathadimai Naane
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம்  நித்தம் நான் நினைப்பேனே

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை

3. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை

4. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை

Tuesday, 10 September 2019

Thanthaanai Thuthipomae தந்தானைத் துதிப்போமே

Thanthaanai Thuthipomae    தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே

விந்தையாய் நமக்கா னந்த னந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை

3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை

4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்துக் கரத்திலேந்தி
தூரம் திரிந்த சீயோனே
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை

5. சிங்காரக் கன்னிமாரே – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
சிங்காரக் கன்னிமாரே
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை

Anpe Pirathanam அன்பே பிரதானம்

Anpe Pirathanam

அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

1.பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்  --- அன்பே

2.பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே  --- அன்பே

3.என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை  --- அன்பே

4.சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள  --- அன்பே

5.புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா   --- அன்பே

6.சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது   --- அன்பே

7.சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்   --- அன்பே

Marida Em Maa Nesarae மாறிடா எம் மா நேசரே

Marida Em Maa Nesarae

1. மாறிடா எம் மா நேசரே – ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

2. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு

3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு

4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க — ஆ! இயேசு

Monday, 9 September 2019

Puthiya Padal Padi Yesu புதிய பாடல் பாடி பாடி இயேசு

Puthiya Padal Padi Yesu 

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1. கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே  (2)
திடன் தந்தார் ஆவியாலே – எனக்கு  (2)   --- புதிய பாடல்

2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்  (2)
புவிதனில் தருபவரே – தினமும் (2)   --- புதிய பாடல்

3. அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா  (2)
வரங்களின் மன்னவனே – எல்லா  (2)  --- புதிய பாடல்

Yesu Raja Vanthirukirar இயேசு ராஜா வந்திருக்கிறார்

Yesu Raja Vanthirukirar

இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார்  --- கொண்டாடுவோம்

2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே (ளே)   --- கொண்டாடுவோம்

3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்   --- கொண்டாடுவோம்

Sunday, 8 September 2019

Santhosham Ponguthey சந்தோஷம் பொங்குதே

Santhosham Ponguthey

சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே – சந்தோஷம்

2. சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே – சந்தோஷம்

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில்
நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு
என்றும் வாழுவேன் – சந்தோஷம்