Saturday, 17 August 2019

Thiruppaatham Nambi Vanthen திருப்பாதம் நம்பி வந்தேன்

Thiruppaatham Nambi Vanthen

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டைந்தேன்
தேவ சமூகத்திலே

1.இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்குத் தங்கிடுவேன்     --- திருப்பாதம்

2.என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே     --- திருப்பாதம்

3.மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்    --- திருப்பாதம்

4.என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே    --- திருப்பாதம்

5.உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே     --- திருப்பாதம்

6.சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே      --- திருப்பாதம்

7.விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரபாதைக் காட்டினீரே
மலர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்       --- திருப்பாதம்

8.பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமலே காத்திருப்பேன்        --- திருப்பாதம்

Friday, 16 August 2019

Aanantham Aanantham Ananthame ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

Aanantham Aanantham Ananthame 

         ஆனந்தம் ஆனந்தம்  ஆனந்தமே
         அற்புத நாதர் நமக்களித்த
         அளவில்லா பரிசுத்த ஆவியாலே
         அன்பராம் இயேசுவை துதிப்பதாலே

1. இயற்கை எல்லாம் உம்மை துதிப்பதாலே   
   இந்த ஏழையின் ஜெபமும் கேட்டிடுமே
   தென்றலினால் மரம் செடியும்
   குலுங்கி குலுங்கி துதித்திடுதே

2.  கடலலையும் உம்மைப் பணிந்திடுதே
    கர்த்தர் சொல் கேட்கும் பெருங்காற்றும் போற்றிடுதே
    பக்தர்களும் பரவசத்தால்
    பாடுகின்றார் ஸ்தோத்திர கீதங்களே

3.  பறவைகளும் வானில் பறந்திடுதே
    மச்சங்கள் மகிழ்ந்து நீரில் நீந்திடுதே
   இஸ்ரவேலின் கூடாரத்தில்
  இரட்சிப்பின் தொனி தான் விழிக்குதே

4. கரம் பற்றி நாம் கீர்த்தனம் பண்ணிடுவோம்
    கர்த்தர் இயேசுவின் மகிமையை ஆர்ப்பரிப்போம்
   சீயோனிலே ராஜனையே
  சேவித்து சந்ததம் ஆனந்திப்போம்

Nigarae Illatha Sarvesa நிகரே இல்லாத சர்வேசா

Nigarae Illatha Sarvesa

நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா

        துதிபாடிட இயேசு நாதா
        பதினாயிரம் நாவுகள் போதா

1.துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனைத் தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்

2.கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம்

3.பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே


4.தேவ மைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்

5.கொந்தளிக்கும் அலைகளையும்
கால் மிதிக்கும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதற்றிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே

6.ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே

Maangal Neerodai Vaanjithu மான்கள் நீரோடை வாஞ்சித்து

Maangal Neerodai Vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்து கதறுதே

       தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
      கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே - மான்கள்

2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்து போற்றிடுவோம் - மான்கள்

3. யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன் - மான்கள்

4. தேவரீர் பகற் காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவில் பாடும் பாட்டு என்தன்
வாயிலிருக்கிறதே - மான்கள்

5. கன் மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஏங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ? - மான்கள்

Thursday, 15 August 2019

Senaigalin Karthar Nallavarae சேனைகளின் கர்த்தர் நல்லவரே

Senaigalin Karthar Nallavarae

1.சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார்

எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும் 
இக்கட்டில் ஏசுவே  அடைக்கலம்

2.வெள்ளங்கள் புரண்டுமோதினாலும்
 உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்புநடுவிலும்
ஏசு நம்மோடங்கு நடக்கின்றார்

3.ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
 கப்பலின்  பின்னணி  நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்

4.காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும்
நம் தேவனின்  அன்பில் நிலைத்திருப்போம்

5.ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில்பறந்து
ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்



Lesaana Kaariyam லேசான காரியம்

Lesaana Kaariyam

லேசான காரியம், உமக்கது லேசான காரியம் ( 2 )
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )
உமக்கது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் ( 2 )
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் ( 2 )
உமக்கது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

3. இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 )
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் ( 2 )
உமக்கது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் ( 2 )

Deva Naan Ethinal Viseshithavan தேவா நான் எதினால் விசேஷித்தவன்

Deva Naan Ethinal Viseshithavan

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் (2)
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்  (2)

1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே

2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்

3. வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு