Wednesday, 14 August 2019

Yesuvae Um Naamathinaal இயேசுவே உம் நாமத்தினால்

Yesuvae Um Naamathinaal

1. இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே

எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்

2. நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே

3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்

4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ! பாவியே
இன்றும் இயேசுவண்டை வாராயோ
நித்திய ஜீவன் பெற்றிடவே

5. இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால்

Karthar En Meiparaai Irukiraare கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

Karthar En Meiparaai Irukiraare

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்

மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன்
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

சத்துருக்கள் முன்பின் எனக்காகவே
 பந்தியொன்றாயத்தஞ் செய்தார்
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும்
நன்மை கிருபை தொடரும்
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன்

Ummandai Thevane Naan உம்மண்டை தேவனே நான்

Ummandai Thevane Naan

1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்;
என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வதே

2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,
எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே இருப்பேனே

3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;
தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேரவே

4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

5. சந்தோஷ சிறகால் வான்கடந்து
கோளங்கள் மேலாக நான் பறந்து
என் பாடல் இதுவே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

Tuesday, 13 August 2019

Enthan Naavil Puthupattu எந்தன் நாவில் புதுப்பாட்டு

Enthan Naavil Puthupattu

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார் (2)

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)

1. பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்

5. இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்

Monday, 12 August 2019

Aananthamaai Inba Kaanaan ஆனந்தமாய் இன்பக் கானான்

Aananthamaai Inba Kaanaan

ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
                  அனுபல்லவி
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்
                    சரணங்கள்
1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்
கண்டு நன்றியுடன் பாடிடுவேன் --- ஆனந்தமாய்

2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் --- ஆனந்தமாய்

3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே --- ஆனந்தமாய்

4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண் பாரும் என்றும் நான் உம் அடிமை --- ஆனந்தமாய்

5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தன் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன் --- ஆனந்தமாய்

Sunday, 11 August 2019

Kaakum Karangal Undenakku காக்கும் கரங்கள் உண்டெனக்கு

Kaakum Karangal Undenakku

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப் பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை

நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என்மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்

கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகுபோல எழும்பிடுவாய்

அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டு மந்தை முதலற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

En Jebavelai Vaanjipen என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

En Jebavelai Vaanjipen

1. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
அப்போதென் துக்கம் மறப்பேன்!
பிதாவின் பாதம் பணிவேன்
என் ஆசையாவும் சொல்லுவேன்!
என் நோவுவேளை தேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்

2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்
பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
ஆனந்த களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன்
வாடாத க்ரீடம் சூடுவேன்!