Monday, 10 June 2019

Nantriyaal Thuthi Paadu நன்றியால் துதிபாடு

Nantriyaal Thuthi Paadu

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை
உள்ளதால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் – (நன்றியால் துதிபாடு)

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் – 2
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும் – 2 – (நன்றியால் துதிபாடு)

2. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே – 2
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு – 2 – (நன்றியால் துதிபாடு)

3. சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையில் எல்லாம் – 2
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் – 2 – (நன்றியால் துதிபாடு)

4. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு – 2
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும் – 2 – (நன்றியால் துதிபாடு)

5. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம் – 2
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் – 2 – (நன்றியால் துதிபாடு)

Paava Naasar Patta Kaayam பாவ நாசர் பட்ட காயம்

Paava Naasar Patta Kaayam

1. பாவ நாசர் பட்ட காயம்
நோக்கி தியானம் செய்வது
ஜீவன், சுகம், நற்சகாயம்,
ஆறுதலும் உள்ளது.

2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று;
தெய்வ நேசம் அதினாலே
மானிடர்க்குத் தோன்றிற்று.

3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
தஞ்சம் என்று பற்றினேன்;
அவர் திவ்ய நேச முகம்
அருள் வீசக் காண்கிறேன்.

4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
துக்கத்தால் கலங்குவேன்;
அவர் சாவால் துக்கம் மாறி
சாகா ஜீவன் அடைவேன்.

5. சிலுவையை நோக்கி நிற்க,
உமதருள் உணர்வேன்;
தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட,
சமாதானம் பெறுவேன்.

6. அவர் சிலுவை அடியில்
நிற்பதே மா பாக்கியம்;
சோர்ந்த திரு முகத்தினில்
காண்பேன் திவ்விய உருக்கம்.

7. உம்மை நான் கண்ணாரக் காண
விண்ணில் சேரும் அளவும்,
உம்மை ஓயா தியானம் செய்ய
என்னை ஏவியருளும்.

Siluvai Nathar Yesuvin சிலுவை நாதர் இயேசுவின்

Siluvai Nathar Yesuvin

சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன

1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்

2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்

3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்

4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் – சிலுவை நாதர்

Sunday, 9 June 2019

Vaan Pugal Valla வான் புகழ் வல்ல


Vaan Pugal Valla Devanaiye Nitham

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்
யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான்

2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான்

3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
சுற்றி உலாவின நித்திய தேவன்
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே — வான்

4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க
சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே — வான்

5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை
தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
வழுவ விடாமலே காத்திடும் தேவன்
மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே — வான்

6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
மணவாளன் வரும்வேளை அறியலாகாதே
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் — வான்

Saturday, 8 June 2019

Koda kodi sthothiram கோடா கோடி ஸ்தோத்திரம்



Koda kodi sthothiram


கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1.பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்

2.கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலூயா அல்லேலூயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3.குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4.கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரிப்பீர்

5.கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவகுமாரன் வந்திடும் நாள்
தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம்

Friday, 7 June 2019

Thinam Thinam Yesu Nayaganai தினம் தினம் இயேசு நாயகனை

Thinam Thinam Yesu Nayaganai

தினம் தினம் இயேசு நாயகனை
மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்
மகிழ்ந்து பாடுவேன்

 ஆனந்தமாக என் நேசர் மார்பில்
அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்  - தினம்

1.கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரைப் பாட வைத்தார்  -  ஆனந்தமாக

2.வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார்

3.மன்னர் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான்   -  ஆனந்தமாக

4.அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன்   -  ஆனந்தமாக

Tuesday, 4 June 2019

Paadum Paadal Yesuvukaaga பாடும் பாடல் இயேசுவுக்காக


Paadum Paadal Yesuvukaaga

பாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே

அழகென்றால் அவர் போலே
யார்தான் உண்டு இந்த லோகத்தில்
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
என் உள்ளம் மகிழ்வாகுதே

அன்பினிலே என் நேசர்க்கே
என்றென்றுமே இணையில்லையே
என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார்
என் நேசர் அன்பில் மகிழ்வேன்

தெய்வம் என்றால் இயேசுதானே
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
என் பொன் நெசரின் மார்பில் சாய்தோனாக
நான் பாடுவேன் பாமாலைகள்