Friday, 15 April 2022

Devane Aarathikkintren தேவனே ஆராதிக்கின்றேன்


 


தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே


Thursday, 14 April 2022

Yennappaa Seiyanum Naan என்னப்பா செய்யணும் நான்


 


என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
இயேசப்பா இயேசப்பாஎன்னப்பா

1. உங்க ஆசை தான் எனது ஆசை
உங்க விருப்பம் தான் எனது விருப்பமே

2. உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா

3. இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம் தான் எனது தஞ்சமையா

4. எத்தனை இடர் வரட்டும் அது என்னை பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்


Tuesday, 12 April 2022

Yesu Raja Vanthirukirar இயேசு ராஜா வந்திருக்கிறார்

 




இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார்

2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே (ளே)

3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்

4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நொடிப்பொழுதே சுகம் தருவார்
பேய்களெல்லாம் நடுநடுங்கும்
பெரியவர் திரு முன்னேநம்ம

5. பாவமெல்லாம் போக்கிடுவார்
பயங்களெல்லாம் நீக்கிடுவார்
ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார்

6. கசையடிகள் உனக்காக
காயமெல்லாம் உனக்காக
திருஇரத்தம் உனக்காக
திருந்திடு என் மகனே

 

 

 

 

 

 


Raja Um Prasannam ராஜா உம் பிரசன்னம்


 


ராஜா உம் பிரசன்னம் போதுமையா

எப்போதும் எனக்குப் போதுமையா

பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்

 

1. அதிகாலமே தேடுகிறேன்

ஆர்வமுடன் நாடுகிறேன்

 

2. உலகமெல்லாம் மாயையையா

உம் அன்பொன்றே போதுமையா

 

3. இன்னும் உம்மை அறியணுமே

இன்னும் கிட்டி சேரணுமே

 

4. கரம் பிடித்த நாயகரே

கைவிடாத தூயவரே

 

5. ஆட்கொண்ட அதிசயமே

ஆறுதலே அடைக்கலமே

 

6. துதியினிலே வாழ்பவரே

துணையாளரே என் மணவாளரே

 

7. அநாதி தேவன் அடைக்கலமே

அவர் புயங்கள் ஆதாரமே

 

8. சகாயம் செய்யும் கேடகமே

மகிமை நிறை பட்டயமே

 

9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே

ஸ்திரப்படுத்தும் துணையாளரே

 

10. பெலப்படுத்தும் போதகரே

நிலை நிறுத்தும் நாயகரே


Sunday, 10 April 2022

Ratham Jayam இரத்தம் ஜெயம்


 


இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்

2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம்

3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்

4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம்

5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்

6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம்
விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம்
விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்


Aandavar Nam Yesuvsi ஆண்டவர் நம் இயேசுவை




 


1. ஆண்டவர் நம் இயேசுவைஆயிரம் துதிகளாலும்
ஆர்ப்பரித்து போற்றிட நாம் ஆயத்தமல்லோ
ஆவியின் சந்தோஷமே எமக்களித்தாரே

ஆதியும் நீரே என் அந்தமும் நீரே
மாறிடா நேசரே எந்தன் இயேசுவே

2. எண்ணில்லா எம் துன்பங்கள் எங்கு போய் ஒழிந்ததோ       எம்முள்ளந்தான்  நன்றியால் நிறைந்து பொங்குதே 
ஏகமாய் எல்லோரும் கூடி ஸ்தோத்தரிப்போமே

3. சுயாதீன ஆவியால் சிலர் சத்தியம் விட்டோடினும் 
சக்தியீந்து சாட்சியாக இன்றும் நிலைக்க 
பக்தியில் வைராக்கியம் எமக்களித்தாரே

4. இயேசு எம் பட்சம் நிற்க ஈன சாத்தானும் தோற்க
ஆர்ப்பரிப்போடாரவாரம் எங்கும் தொனிக்க
அல்லேலூயா வல்லமையாய்ப் பாடிடுவோமே

5. இடுக்கமான வழியே இன்பக் கானான் ஏகவே
இன்னும் அவரோடு கூடப் பாடு சகிப்போம்
இன்றும் என்றும் இயேசுவோடு ஆட்சி செய்வோமே

6. உன்னத மா தேவனின் உயர்ந்த செட்டைகளின் கீழ்
தஞ்சமென அஞ்சிடாமல் தங்கி வாழுவோம்
தீங்கு நாட்கள் தீவிரம் எம் முன் நெருங்கிற்றே

7. எருசலேமே ஆர்ப்பரி சீயோனே நீ கெம்பீரி
ஆயிரம் பதினாயிரம் விண் தூதருடனே 
ஆசை மணவாளன் இயேசு தாம் வருகிறார்


Saturday, 9 April 2022

Appa Pithave Anpana அப்பா பிதாவே அன்பான


 


அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல்
அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறிவிட்டீர்

நன்றி உமக்கு நன்றி

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர் நன்றி

3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே நன்றி

4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே நன்றி

5. ஒன்றை நான் கேட்டேன்
அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம் பணி செய்திடுவேன்நன்றி