Monday, 14 March 2022

Karthar Mel Barathai கர்த்தர் மேல் பாரத்தை


 


கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்

2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்

3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்

4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்

5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்

6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்


Sunday, 13 March 2022

Karthar Namam En Pugalidame கர்த்தர் நாமம் என் புகலிடமே


 


கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

3. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

4. யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

 

 


Friday, 11 March 2022

Oppu Kodutheer Ayya ஒப்புக் கொடுத்தீர் ஐயா


 


ஒப்புக் கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

1. எங்களை வாழவைக்க
சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

2. நித்திய ஜீவன் பெற
நீதிமானாய் மாற
ஜீவன் தரும் கனியாய்
சிலுவையில் தொங்கினீர்

3. சுத்திகரித்தீரே
சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா
உமக்காய் வாழ்ந்திட

4. பாவத்திற்கு மரித்து
நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே
என் பாவம் சுமந்தீர் ஐயா

5. மீட்கும் பொருளாக
உம் இரத்தம் தந்தீர் ஐயா
சாத்தானை தோற்கடித்து
சாவையும் வென்றீர் ஐயா

6. என்னையே தருகிறேன்
ஜீவபலியாக
உகந்த காணிக்கையாய்
உடலைத் தருகிறேன்


Ayya Um Thirunamam ஐயா உம் திருநாமம்


 


ஐயா உம் திருநாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

1. கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்ஐயா

2. இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்ஐயா

3. சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்ஐயா

4. குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிசேஷம் சொல்லணுமேஐயா


Thursday, 10 March 2022

Ennai Aatkonda Yesu என்னை ஆட்கொண்ட இயேசு


 

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரேஎன்றும்
நன்மைகள் செய்பவரே

1. மனிதர் தூற்றும்போதுஉம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

2. தனிமை வாட்டும்போதுநம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே


Tuesday, 8 March 2022

En Devane En Yesuve என் தேவனே என் இயேசுவே


 


என் தேவனே என் இயேசுவே

உம்மையே நேசிக்கிறேன்

 

1. அதிகாலமே தேடுகிறேன்

ஆர்வமுடன் நாடுகிறேன்

 

2. என் உள்ளமும் என் உடலும்

உமக்காகத்தான் ஏங்குதய்யா

 

3. துணையாளரே உம் சிறகின்

நிழலில் தானே களிகூருவேன்

 

4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்

ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்

 

5. உலகம் எல்லாம் மாயையய்யா

உம் அன்பு தான் மாறாதய்யா

 

6. படுக்கையிலும் நினைக்கின்றேன்

இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்


En Kiribai Unakku Pothum என் கிருபை உனக்குப் போதும்


 

என் கிருபை உனக்குப் போதும்

பலவீனத்தில் என் பெலமோ

பூரணமாய் விளங்கும்

 

1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்

எனக்கே நீ சொந்தம்

பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்

எனக்கே நீ சொந்தம்

 

2. உலகத்திலே துயரம் உண்டு

திடன் கொள் என் மகனே

கல்வாரி சிலுவையினால்

உலகத்தை நான் ஜெயித்தேன்

 

3. உனக்கெதிரான ஆயுதங்கள்

வாய்க்காதே போகும்

இருக்கின்ற பெலத்தோடு

தொடர்ந்து போராடு

 

4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்

ஒடுங்கி நீ போவதில்லை

கலங்கினாலும் மனம் முறிவதில்லை

கைவிடப் படுவதில்லை