Friday, 31 July 2020

Enakkai Jeevan Vittavare எனக்காய் ஜீவன் விட்டவரே

Enakkai Jeevan Vittavare 1. எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே — இயேசு 3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் — இயேசு 4. மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் — இயேசு

Unnai Sirushtithavar உன்னை சிருஷ்டித்தவர்

Unnai Sirushtithavar உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ கலங்கிடும் மாந்தரே உன் கண்ணீரை துடைத்திடு கவலையை விட்டு விட்டு வா இயேசுவைப் பின்பற்றி வா 1. காற்றும் கடலும் எதற்காக கனிமரமெல்லாம் எதற்காக சூரிய சந்திரனும் எதற்காக அத்தனையும் அது உனக்காக 2. மலையும் மலர்களும் எதற்காக நிலமும் நீரும் எதற்காக பாடும் பறவைகள் எதற்காக அத்தனையும் அது உனக்காக 3. சிலுவை சுமந்தது எதற்காக சிந்தின இரத்தம் எதற்காக ஜீவனை கொடுத்தது எதற்காக அத்தனையும் அது உனக்காக

Itho Manusharin Mathiyil இதோ மனுஷரின் மத்தியில்

Itho Manusharin Mathiyil இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே 2. தேவ ஆலயமும் அவரே தூய ஒளிவிளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவநதியும் அவரே 3. மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தலமதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே 4. சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உம்மையே 5. முன்னோடியாய் இயேசு பரன் மூலைக்கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

Wednesday, 29 July 2020

Enthan Yesu Vallavar எந்தன் இயேசு வல்லவர்

Enthan Yesu Vallavar எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார் ஆ பேரின்பம் அவர் என் தஞ்சமே அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன் 1.அற்புதமாம் அவர் அன்பு அண்டினோர் காக்கும் தூய அன்பு இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு மாறாதவர் எந்தன் இயேசு என்றும் சார்ந்திடுவேன் 2.சர்வ வல்ல தேவனிவர் சாந்தமும் தாழ்மை உள்ளவராம் எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம் நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை 3.குற்றங்களை மன்னித்தவர் தம்மண்டை என்னைச் சேர்த்துக் கொண்டார் எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர் சார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர் 4.கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் சீரான பாதை நடத்திடுவார் எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார் எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன் 5.ஜெயங் கொண்ட வேந்தனிவர் பாதாளம் யாவும் வென்றவராம் வெற்றியுடன் முன்சென்றிட கிருபை நல்கிடுவார் முன்செல்லுவேன் இயேசுவுடன் என்றும் ஆனந்தமே

Yesu En Parigari இயேசு என் பரிகாரி

Yesu En Parigari இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப இராஜா என் பரிகாரி 1. என்ன துன்பங்கள் வந்தாலும் என்ன வாதைகள் நேர்ந்தாலும் என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப இராஜா என் பரிகாரி 2. சாத்தான் என்னை எதிர்த்தாலும் சத்துரு என்னை தொடர்ந்தாலும் சஞ்சலங்கள் வந்தபோது – இன்ப இராஜா என் பரிகாரி 3. பணக் கஷ்டங்கள் வந்தாலும் மனக்கஷ்டங்கள் நேர்ந்தாலும் ஜனம் என்னை வெறுத்தாலும் – இன்ப இராஜா என் பரிகாரி 4. பெரும் வியாதிகள் வந்தாலும் கடும் தோல்விகள் நேர்ந்தாலும் பல சோதனை சூழ்ந்தாலும் – இன்ப இராஜா என் பரிகாரி 5. எனக்கென்ன குறை உலகில் என் இராஜா துனை எனக்கு என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப இராஜா என் பரிகாரி

Monday, 27 July 2020

Nandriyal Ponguthey நன்றியால் பொங்குதே



Nandriyal Ponguthey நன்றியால் பொங்குதே எமதுள்ளம் நாதன் செய்பல நன்மைகட்காய் நாள்தோறும் நலமுடன் காத்தனரே நன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா நன்றியால் ஸ்தோத்தரிப்போம் 1. கடந்த வாழ்நாளெல்லாம் கருத்துடனே கண்மணிபோல் நம்மைக் காத்தனரே கண்ணீர் கவலையினை மாற்றினாரே கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால் 2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து ஜீவிய பாதை நடத்தினாரே ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம் ஜீவனின் அதிபதியை அல்லேலூயா ஜீவனின் அதிபதியை – நன்றியால் 3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே அதிசயங்கள் பல புரிந்தனரே ஆயிரம் நாவுகள் தான் போதுமா ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயா ஆண்டவரைத் துதிக்க – நன்றியால் 4. பாவ சேற்றில் அமிழ்ந்த நம்மை பாசக் கரம் கொண்டு தூக்கினாரே கன் மலைமேல் நம்மை நிறுத்தி அவர் கருத்துடன் காத்தனரே அல்லேலூயா கருத்துடன் காத்தனரே – நன்றியால் 5. பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி பொற்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம் ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே நேத்திரமாய் துதிப்போம் அல்லேலூயா நேத்திரமாய் துதிப்போம் – நன்றியால்

O Perfect Love


O Perfect Love all human thought transcending Lowly we kneel in prayer before Thy throne That theirs may be the love which knows no ending Whom Thou forever more dost join in one. O Perfect Life, be Thou their full assurance of tender charity and steadfast love of patient hope and quiet brave endurance with childlike trust that fears no pain or death. Grant them that joy that brightens earthly sorrow Grant them the peace which calms all earthly strife and to life's day the glorious unknown morrow that dawns upon eternal love and life.