Wednesday, 25 January 2023

Seermigu Van Puvi Deva சீர்மிகு வான் புவி தேவா


 


1. சீர்மிகு வான் புவி தேவா தோத்ரம்

சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,

ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்-கு

இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா.

 

2. நேர்மிகு அருள்திரு அன்பா, தோத்ரம்,

நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,

ஆர் மணனே, தோத்ரம், உனது

அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

 

3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்

தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்

ஆவலுடன் தோத்ரம், உனது

அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

 

4. ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்.

அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்

சாற்றுகிறோம் தோத்ரம், உனது

தகுமன்புக்கே தோத்ரம், மா நேசா.

 

5. மாறாப் பூரண நேசா, தோத்ரம்,

மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்,

தாராய் துணை, தோத்ரம், இந்தத்

தருணமே கொடு தோத்ரம், மா நேசா.


Tuesday, 24 January 2023

Paadi Thuthi Maname பாடித் துதி மனமே


 

பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து

1. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்

3. எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை

 


Monday, 23 January 2023

Innum Orumurai இன்னும் ஒருமுறை



 

இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை

மன்னிக்கவேண்டும் தேவா

என்று பலமுறை என்று பலமுறை

வந்துவிட்டேன் இயேசு ராசா (2)

 

1. ஒத்தையில போகையிலே கூட வந்தவரும் நீர்தான்

தத்து தடுமாறையில தாங்கிப்பிடிச்சவர் நீர் தான்

ஓடி ஓடி ஒளிஞ்சேனே தேடி தேடி வந்து மீட்டீர்

இருளில் இருந்து தூக்கி ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர்இன்னும்

 

2. பச்சையினு எண்ணி நானும் இச்சையால விழுந்தேன்

பஞ்சு மெத்தையினு நம்பி முள்ளுக்குள்ள தான் படுத்தேன்

புத்தி கெட்டு போனதால பாதை மாறி போனேனே

நல்ல மேய்ப்பன் இயேசு தானே காயம் கட்டி அணைத்தீரே- இன்னும்

 

3.  சொத்து சுகம் நீங்க தானு புரியாமல் நானே

சத்துருவின் சதியாலே தூரமாகி போனேன்

தகப்பன் வீட்டை நினைத்தேன் தந்தையின் நேசத்தை உணர்ந்தேன்

தாமதமின்றி வருவேன் நித்தமும் தாங்கி மகிழ்வேன்- இன்னும்

Sunday, 22 January 2023

Illathin Thalaivarai Yesu இல்லத்தின் தலைவராய் இயேசு


 

இல்லத்தின் தலைவராய் இயேசு -  இருந்தால்

 இல்லை என்பது இல்லையே

 

1.  நிறைவான வாழ்வினைத் தருவார் - தந்து

குறையாவும் போக்கியே விடுவார்

மறைவான விருந்தினராவார் - இன்ப

மறை ஞான விருந்தினைத் தருவார்

 

2. வழியாக வருபவர் அவரே - வழியில்

ஒளியாக திகழ்பவர் அவரே

வழுவாமல் காப்பவர் அவரே நம்மைத்

தழுவியே அணைப்பவர் அவரே

 

3. அவர் பாதம் தொடர்ந்திட வேண்டும் - நித்தம்

அவர் பாதை நடந்திட வேண்டும்

அவர் போல வாழ்ந்திட வேண்டும் - என்றும்

பிறர்க்காக உழைத்திட வேண்டும்

 

 


Saturday, 21 January 2023

Masilla Kanniye Mathave மாசில்லா கன்னியே மாதாவே


 

மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல்

நேசமில்லாதவர் நீசரே ஆவார்

வாழ்க வாழ்க வாழ்க மரியே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

 

1. மூதாதை தாயாசை முற்பாதமற்றாய்

ஆதியில்லாதோனை மாதா நீ பெற்றாய்

ஆவே ஆவே  ஆவே மரியா

ஆவே ஆவே  ஆவே மரியா

 

2. அருள் நிறைந்த மாதாவே  ஆண்டவர் உம்முடனே

பெண்களுக்குள்ளே நீ பேறுபெற்றாயே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

வாழ்க வாழ்க வாழ்க மரியே


Friday, 20 January 2023

Suga Ragam Neeye Yesuve சுக ராகம் நீயே இயேசுவே


 

சுக ராகம் நீயே இயேசுவே உன் நாமம் போற்றுவேன்

தெவிட்டாத நீா்ச்சுனையாகவே கவி நூறு பாடுவேன்

மேகமாய் பொழியும் அருளும் நீ நேசமாய் தாங்கும் தாய் மடி நீ

தினந்தோறும் வாழ்த்துவேன்.

 

1. உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்

உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன்

அன்பில் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்

அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்

நீயே எந்தன் ஜீவன் நீயே எந்தன் ஆற்றல்

நீயே இல்லை என்றால் எனது உலகம் இல்லை.

 

2. கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன்

அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழக்கிறேன்

உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன்

புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன்

நீயே எனக்கு சொந்தம் நீயே வாழ்வின் தஞ்சம்

உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே.


Wednesday, 18 January 2023

Vaarum Naam Ellorum Koodi வாரும் நாம் எல்லோரும் கூடி


 

வாரும் நாம் எல்லோரும் கூடி

மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்

மாசிலா நம் இயேசு நாதரை

வாழ்த்திப் பாடுவோம் 


1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்

தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – மகிழ்


2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே

மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – மகிழ்


3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்

நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – மகிழ்


4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த

மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – மகிழ்


5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்

பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – மகிழ்