சுக ராகம் நீயே இயேசுவே உன் நாமம் போற்றுவேன்
தெவிட்டாத நீா்ச்சுனையாகவே கவி நூறு பாடுவேன்
மேகமாய் பொழியும் அருளும் நீ நேசமாய் தாங்கும் தாய் மடி நீ
தினந்தோறும் வாழ்த்துவேன்.
1. உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்
உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன்
அன்பில் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்
அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்
நீயே எந்தன் ஜீவன் நீயே எந்தன் ஆற்றல்
நீயே இல்லை என்றால் எனது உலகம் இல்லை.
2. கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன்
அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழக்கிறேன்
உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன்
புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன்
நீயே எனக்கு சொந்தம் நீயே வாழ்வின் தஞ்சம்
உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.