Wednesday, 18 January 2023

Vaarum Naam Ellorum Koodi வாரும் நாம் எல்லோரும் கூடி


 

வாரும் நாம் எல்லோரும் கூடி

மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்

மாசிலா நம் இயேசு நாதரை

வாழ்த்திப் பாடுவோம் 


1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்

தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – மகிழ்


2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே

மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – மகிழ்


3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்

நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – மகிழ்


4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த

மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – மகிழ்


5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்

பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – மகிழ்


Sagotharargal Orumithu சகோதரர்கள் ஒருமித்து


 

1. சகோதரர்க ளொருமித்துச்

சஞ்சரிப்பதோ எத்தனை

மகா நலமும் இன்பமும்

வாய்த்த செயலாயிருக்குமே

 

2. ஆரோன் சிரசில் வார்த்த நல்

அபிஷேகத்தின் தைலந்தான்

ஊறித் தாடியில் அங்கியில்

ஒழுகுமானந்தம் போலவே

 

3. எர்மோன் மலையின் பேரிலும்

இசைந்த சீயோன் மலையிலும்

சேர்மானமாய்ப் பெய்கின்ற

திவலைப் பனியைப் போலவே

 

4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும்

சேனை எகோவா தருகிற

ஆசீர்வாதம் ஜீவனும்

அங்கே என்றுமுள்ளதே


Monday, 16 January 2023

Aiyaiyaa Naan Vanthen ஐயையா நான் வந்தேன்


 

ஐயையா நான் வந்தேன் தேவ

ஆட்டுக்குட்டி வந்தேன்

 

1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்

துஷ்டன் எனை அழைத்தீர் தயை

செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்

ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்

தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

3. எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்

எத்தனை எத்தனையோ இவை

திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

4. ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்

தென்னை அரவணையும் மனம்

தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தத்தங்களால்

தேவாட்டுக்குட்டி வந்தேன்

 

5. மட்டற்ற உம் அன்பினால் தடை எதும்

மாறி அகன்றதுவே இனி

திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்

தேவாட்டுக்குட்டி வந்தேன்.


Paalar Gnayirithu Paasamai Vaarum பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்


 

பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்

பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும்.

தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்

ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பை எண்ணிப்பாலர்

 

1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,

பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம்,

பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,

ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம்பாலர்

 

2. தேடி வந்தலையும் தேசிகருண்டு,

பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,

கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு

நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. — பாலர்

 

3. இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே,

இன்னும் நித்தியமும் பாதுகாப்பாரே,

அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்

எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டுபாலர்

Friday, 13 January 2023

Imayamum in Kumariyum இமயமும் குமரியும்


 

1. இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
நெஞ்சார் அன்பின் தியாக சேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா
சமாதானம் யேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம் நாடே,
சாந்தி இதற்கிலை ஈடே,
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே

2. உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவே
ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
பொய்யா மொழி மாகாணத்தலைவர்
புருஷோத்தம மந்திரிகள்
நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
நட்புடன் கருணை இலங்கப்
பணிவிடை நேர்மை அருளே,
பரனர செனப்பகர் தெருளே,
பாரதம் போற்ற மெய்ப் பொருளே
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
ஜெயமே, ஜெயமே, ஜெயமே
ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே


Thursday, 5 January 2023

Nantriyodu Naan Thuthi Paduven நன்றியோடு நான் துதி பாடுவேன்


 


நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும்நாதனே
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியேநன்றியோடு

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமேநன்றியோடு

3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால்
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியேநன்றியோடு

4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர்
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர்நன்றியோடு


Thursday, 29 December 2022

Naan Naanagave Vanthirukiren நான் நானாகவே வந்திருக்கிறேன்


நான் நானாகவே வந்திருக்கிறேன்

உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்

நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா

உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

 

1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே

நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே

ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே

தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே

நான் நானாக நானாக வந்திருக்கிறேன்நான்

 

2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே

மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே

எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே

எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே

நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்நான்