Thursday, 26 May 2022

Aaviyana Engal Anbu Theivame ஆவியான எங்கள் அன்பு தெய்வமே


 


ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே

ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்

1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா

2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர் பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா

3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா

4. மனதைப் புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும்

5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா

6. பாவம், நீதி, நியாயத்தீர்ப்பை
கண்டித்து உணர்த்தும் ஐயா
பரிபூரண உம் சத்தியத்திற்குள்
பக்தர்களை நடத்தும் ஐயா


Wednesday, 25 May 2022

Pallangalellam Nirambida Vendum பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்


 

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

5. அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம்


Tuesday, 24 May 2022

Kartharai Thuthipen கர்த்தரை துதிப்பேன்


 

கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் -2

1. யூத கோத்திரனை துதிப்பேன்
இம்மானுவேலரை துதிப்பேன் -2

2. ஏசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2

3. உந்தன் பெலனாக துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் -2

4. நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2


Monday, 23 May 2022

Anathi Snegathal அநாதி சிநேகத்தால்


 


அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

1. அனாதையாய்  அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே

2. நிலையில்லாத உலகத்தில்
அலைந்தேனையா
நிகரில்லாத இயேசுவே
அணைத்துக் கொண்டீரே

3. தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்டீரே
தாயைப் போல ஆற்றித்
தேற்றி நடத்தி வந்தீரே

4. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனையா

5. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே


Magilchiyodu Thuthikirom மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்


 


மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் 
மன மகிழ்ந்து துதிக்கிறோம் 
மன்னவரே இயேசு ராஜா --  எங்க
மனதில் பூத்து மணம் வீசும் ரோஜா
இயேசு ராஜா சாரோன் ரோஜா

1. நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினீரே
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தமாய் மாற்றினீரே
நல்லவரேவல்லவரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வமே

2. நெருக்கத்திலே இருந்த என்னை
விசாலத்தில் வைத்தீரே
சேற்றினின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே ... அதிசயமே ...
ஆனந்தமே பரம ஆனந்தமே -- இயேசு

3. அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தால் கழுவி என்னை
சுத்தமாக ஆக்கினீரே
உன்னதரேஉயர்ந்தவரே
இருள் நீக்கும் ஒளிவிளக்கே -- உள்ளத்தின்

4. தாயைப்போல என்னை அவர்
சேர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பா அல்லோ ... அப்பா அல்லோ...
பிள்ளை அல்லோ செல்லப் பிள்ளை அல்லோ


Sunday, 22 May 2022

Aandavar Padaitha Vetriyin ஆண்டவர் படைத்த வெற்றியின்


 

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் – 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் – 2

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் – 2
நீதிமான்களின் சபைகளிலே (கூடாரத்தில்)
வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி

3. தள்ளப்பட்ட  கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று – 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி

4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் – 2
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி


Saturday, 21 May 2022

Um Naamam Uyaranume உம் நாமம் உயரணுமே


 


உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே

அப்பா பிதவே அப்பா

1. அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா

2. பிறர் குற்றம் மன்னித்தோம் ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே

3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா

4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்

5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே

6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே

7. உமக்காய் வாழணும் உம்குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே

8. அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா


9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா

10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே