Sunday, 1 May 2022

Yosanail Periavare யோசனையில் பெரியவரே


 


யோசனையில் பெரியவரே
ஆராதனை ஆராதனை
செயல்களிலே  வல்லவரே
ஆராதனை ஆராதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. கண்மணிபோல் காப்பவரே
ஆராதனை ஆராதனை
கழுகு போல சுமப்பவரே
ஆராதனை ஆராதனை

2. சிலுவையினால் மீட்டவரே
ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே
ஆராதனை ஆராதனை

3. வழி நடத்தும் விண்மீனே
ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே
ஆராதனை ஆராதனை

4. தேடி என்னைக் காண்பவரே
ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே
ஆராதனை ஆராதனை

5. பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே
ஆராதனை ஆராதனை

6. உறுதியான அடித்தளமே
ஆராதனை ஆராதனை
விலை உயர்ந்த மூலைக் கல்லே
ஆராதனை ஆராதனை


Friday, 29 April 2022

Thaagamullavan Mel Thanneerai தாகமுள்ளவன் மேல் தண்ணீரை


 


தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்

ஊற்றுமையா உம் வல்லமையை
தாகத்தோடு காத்திருக்கிறேன்நான்

1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே

3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல
நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும்

4. புதிய கூர்மையான கருவியாகணும்
பூமியெங்கும் சுவை தரும் உப்பாகணும்

5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்

6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகணும்
வயல்வெளி அடர்ந்த காடாகணும்

7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளர வேண்டுமே

8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்


Thursday, 28 April 2022

VinnaPathai Ketpavare விண்ணப்பத்தைக் கேட்பவரே


 


விண்ணப்பத்தைக் கேட்பவரேஎன்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே


Wednesday, 27 April 2022

Entha Nilaiyil Naan Irunthalum எந்த நிலையில் நானிருந்தாலும்


 


எந்த நிலையில் நானிருந்தாலும்
என்னை வெறுக்காதவர்
என் இயேசு ஒருவரே
என் தேவன் நடுவரே

1. நோயாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி
சொல்லி நோகவைப்பார்கள்

2. கடனாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி
சொல்லி கலங்க வைப்பார்கள்

3. பட்டம் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
வெறும் பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள்

4. அனாதையாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று
அலைய வைப்பார்கள்


Tuesday, 26 April 2022

Ennile Thaguthi Ontrum Illaiye என்னிலே தகுதி ஒன்றுமில்லையே


 


என்னிலே தகுதி ஒன்றுமில்லையே

என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட

 

1. குயவனாம் தேவன் கையிலே

நான் வெறும் களிமண்தானே

வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே

என்னில் வாழ்வளித்து நடத்துவதும் தேவனே - என்னிலே

 

2. பாவியில் பிரதான பாவி நான்

என் நீதி அழுக்கான கந்தையே

கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால்

என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் - என்னிலே

 

3. நடப்பதெல்லாம் உம்மையல்லாமல்

என்னாலேதும் நடக்கலாகுமோ

ஆகும் நீர் சொன்னால் என்றுமே

கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே - என்னிலே

Nesikkiren Ummaithaane Iyaa நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா


 


நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா

1. ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் -- என்
நான் அசைக்கப்படுவதில்லை

2. உம்மையல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே என்
நினைவெல்லாம் ஆள்பவரே

3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம் 
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மைத் தேடணுமே

4. உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்


Monday, 25 April 2022

Naane Vazhi Naane Sathyam நானே வழி நானே சத்தியம்


 


நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே(ளே)-உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை

1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்

2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே வருவாயா
இதயத்திலே இடம் தருவாயா

3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே
இதயத்திலே இடம் தருவாயா

4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்
கலங்காதே என் மகனே
கண்மணிபோல் உன்னைக் காத்திடுவேன்