Wednesday, 23 March 2022

Natha Um Thirukarathil நாதா உம் திருக்கரத்தில்


 


நாதா உம் திருக்கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே  

2. எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்

4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா -- உம்

5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்


Tuesday, 22 March 2022

Kuthukalam Kondattame குதூகலம் கொண்டாட்டமே


 


குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

1. பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்

2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே

3. வல்லவராம் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

4. எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்


Monday, 21 March 2022

Devanuke Magimai தேவனுக்கே மகிமை


 


தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை --- என்னை
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும்இந்தப்

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமேஇந்தப்

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலேஎங்கள்

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும்
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமேஇன்று

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனேபாவக்

 


Sunday, 20 March 2022

Theiveega Koodarame தெய்வீகக் கூடாரமே


 


தெய்வீகக் கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1. கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக
ஓப்புக் கொடுத்தோம் ஐயா

2. ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையினால்

3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரிய விடும்

5. தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்


Saturday, 19 March 2022

Sarva Sirushtikkum சர்வ சிருஷ்டிக்கும்


 


சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும்
பணிந்து தொழுவோம்

ஆ ஆ ஆ.. அல்லேலூயா (7)  ஆமென்

1. வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும்
மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி
என்றென்றும் நிலைப்பான்

2. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே

3. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே

4. சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
பார்த்துக் கொள்ள வருபவர் நீரே


Friday, 18 March 2022

Ellam Padaitha Namathu எல்லாம் படைத்த நமது


 


1. எல்லாம் படைத்த நமது

தயாபர பிதாவுக்கு

அனந்த காலமாக

அல்லேலூயா மகத்துவம்

பெலன் புகழ்ச்சி ஸ்தோத்திரம்

உண்டாய் இருப்பதாக

பார்ப்பார் காப்பார்

வல்லமையும் கிருபையும் அன்பும் எங்கும்

அவர் செய்கையால் விளங்கும்

 

2. மா நீசருக்கு மீட்பரும்

கர்த்தாவுமாம் சுதனுக்கும்

ரட்சிப்பின் அன்புக்காக

அல்லேலூயா புகழ்ச்சியும்

அநந்த ராஜரீகமும்

உண்டாய் இருப்பதாக

பாவம் சாபம்

எந்தத் தீங்கும் அதால் நீங்கும் என்றென்றைக்கும்

பாக்கியம் எல்லாம் கிடைக்கும்

 

3. மனந்திரும்பி  எங்களைப்

பர்த்தாவாம் யேசுவண்டையே

அழைத்து நேர்த்தியாகச்

சிங்காரிக்கும் தேவாவிக்கும்

அல்லேலூயா புகழ்ச்சியும்

வணக்கமும் உண்டாக

வான ஞான

வாழ்வினாலும் செல்வத்தாலும் தேற்றிவாறார்

அதின் முன் ருசியைத் தாரார்

 

4. எல்லா ஜனங்களாலேயும்

பிதா குமாரன் ஆவிக்கும்

அநந்த காலமாக

அல்லேலூயா மகத்துவம்

பலம் புகழ்ச்சி ஸ்தோத்திரம்

உண்டாய் இருப்பதாக

ஆமென் ஆமென்

நீர் ஆனந்தம் ஆதியந்தம் பரிசுத்தம்

பரிசுத்தம் பரிசுத்தம்.


Wednesday, 16 March 2022

Kalamo Selluthe காலமோ செல்லுதே


 


1. காலமோ செல்லுதே

வாலிபம் மறையுதே

எண்ணமெல்லாம் வீணாகும்

கல்வி எல்லாம் மண்ணாகும்

 

மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்

அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்

 

2. கருணையின் அழைப்பினால்

மரண நேரம் வருகையில்

சுற்றத்தார் சூழ்ந்திட

பற்றுள்ளோர் கதறிட

 

3. துன்பமெல்லாம் மறைந்துபோம்

இன்னல் எல்லாம் மாறிப்போம்

வியாதி எல்லாம் நீங்கிப்போம்

நாயகன் நம் இயேசுவால்

 

4. வாழ்க்கையை இயேசுவால்

நாட்களைப் பூரிப்பாய்

ஓட்டத்தை முடித்திட

காத்துக் கொள் விசுவாசத்தை

 

5. உலகத்தின் மாந்தரே

கலங்காது வாருமேன்

இயேசுவை அண்டினால்

கிலேசங்கள் மாறிப்போம்