தெய்வீகக்
கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
1. கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக
ஓப்புக் கொடுத்தோம் ஐயா
2. ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைகின்ற பனி போல வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையினால்
3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்
4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரிய விடும்
5. தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்
6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்
Sunday, 20 March 2022
Theiveega Koodarame தெய்வீகக் கூடாரமே
Saturday, 19 March 2022
Sarva Sirushtikkum சர்வ சிருஷ்டிக்கும்
சர்வ
சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆ
ஆ ஆ.. அல்லேலூயா (7) ஆமென்
1. வானம்
பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
2. கர்த்தர்
கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
3. எல்லா
மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே
4. சபையின்
அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
பார்த்துக் கொள்ள வருபவர் நீரே
Friday, 18 March 2022
Ellam Padaitha Namathu எல்லாம் படைத்த நமது
1. எல்லாம் படைத்த நமது
தயாபர பிதாவுக்கு
அனந்த காலமாக
அல்லேலூயா மகத்துவம்
பெலன் புகழ்ச்சி ஸ்தோத்திரம்
உண்டாய் இருப்பதாக
பார்ப்பார் காப்பார்
வல்லமையும் கிருபையும் அன்பும் எங்கும்
அவர் செய்கையால் விளங்கும்
2. மா நீசருக்கு மீட்பரும்
கர்த்தாவுமாம் சுதனுக்கும்
ரட்சிப்பின் அன்புக்காக
அல்லேலூயா புகழ்ச்சியும்
அநந்த ராஜரீகமும்
உண்டாய் இருப்பதாக
பாவம் சாபம்
எந்தத் தீங்கும் அதால் நீங்கும் என்றென்றைக்கும்
பாக்கியம் எல்லாம் கிடைக்கும்
3. மனந்திரும்பி எங்களைப்
பர்த்தாவாம் யேசுவண்டையே
அழைத்து நேர்த்தியாகச்
சிங்காரிக்கும் தேவாவிக்கும்
அல்லேலூயா புகழ்ச்சியும்
வணக்கமும் உண்டாக
வான ஞான
வாழ்வினாலும் செல்வத்தாலும் தேற்றிவாறார்
அதின் முன் ருசியைத் தாரார்
4. எல்லா ஜனங்களாலேயும்
பிதா குமாரன் ஆவிக்கும்
அநந்த காலமாக
அல்லேலூயா மகத்துவம்
பலம் புகழ்ச்சி ஸ்தோத்திரம்
உண்டாய் இருப்பதாக
ஆமென் ஆமென்
நீர் ஆனந்தம் ஆதியந்தம் பரிசுத்தம்
பரிசுத்தம் பரிசுத்தம்.
Wednesday, 16 March 2022
Kalamo Selluthe காலமோ செல்லுதே
1. காலமோ செல்லுதே
வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வி எல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்
2. கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் கதறிட
3. துன்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னல் எல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கிப்போம்
நாயகன் நம் இயேசுவால்
4. வாழ்க்கையை இயேசுவால்
நாட்களைப் பூரிப்பாய்
ஓட்டத்தை முடித்திட
காத்துக் கொள் விசுவாசத்தை
5. உலகத்தின் மாந்தரே
கலங்காது வாருமேன்
இயேசுவை அண்டினால்
கிலேசங்கள் மாறிப்போம்
Monday, 14 March 2022
Kalangathe Kalangathe கலங்காதே கலங்காதே
கலங்காதே
கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
1. முள்முடி
உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ
2. கல்வாரி
மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ
3. காலமெல்லாம்
உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை
4. உலகத்தின்
வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே
5. உன்
நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்
6. உலகம்
உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
Karthar Mel Barathai கர்த்தர் மேல் பாரத்தை
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்
2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்
3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்
4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்
5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்
6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்
Sunday, 13 March 2022
Karthar Namam En Pugalidame கர்த்தர் நாமம் என் புகலிடமே
கர்த்தர்
நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
1. யேகோவாயீரே
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
2. யேகோவா
நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
3. யேகோவா
ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
4. யேகோவா
ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
5. யேகோவா
ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
6. யேகோவா
ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே