Thursday, 3 March 2022

Ennalume Thuthippai எந்நாளுமே துதிப்பாய்




 


எந்நாளுமே துதிப்பாய்என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது

1. பாவங்கள் எத்தனையோநினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி

2. எத்தனையோ கிருபைஉன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால்.

3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே செய்ததால்.

4. பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்திய மேயிது.

5. மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே
மண்ணில் உன்பாவம் அகன்றத் தூரமே.

6. தந்தைதன் பிள்ளைகட்குதயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.


Wednesday, 2 March 2022

Yesu Swami Arul Natha இயேசு சுவாமி அருள் நாதா


 

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை

1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே - ஐயா

2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே - ஐயா

3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் - ஐயா

4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் தானையா - ஐயா

5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் - என்னை

6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே - ஐயா

7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன் - ஐயா

Monday, 28 February 2022

Yesu Swami Arul Natha இயேசு சுவாமி அருள் நாதா


 


1. இயேசு சுவாமி அருள் நாதா
கெஞ்சிக் கேட்கிறேன்
பாவியேனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்

இயேசு சுவாமி
கெஞ்சிக் கேட்கிறேன்
பாவியேனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்

2. கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்

3. தீயகுணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்
நீரே தஞ்சம் என்று நம்பி
வந்து நிற்கிறேன்

4. தூய ரத்தத்தாலே என்னைச்
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்துக் கொள்ளுவீர்


Sunday, 27 February 2022

Thuthi Gana Magimaku Pathirare துதி கன மகிமைக்கு பாத்திரரே


 


துதி கன மகிமைக்கு பாத்திரரே  உம்மை

அனுதினம் துதித்திடுவேன்

அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவே

ஆனந்தமே என்னில் பொங்குதே

 

1. நாடித் தேடி ஓடி உம் பாதம் வந்தேன்

நன்மை செய்யும் தேவன் நீரல்லோ

பாச வலையால் என்னை வீசி அணைத்தீர்

நேசா உமக்கென்ன செய்குவேன்

 

2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னை

தேடி வந்த தேவன் நீரல்லோ

தூக்கி எடுத்தே தூய ஆவியும் ஈந்தீர்

தேவா என்னை சொந்தமாக்கினீர்

 

3. என்றும் உம்மோடு சீயோன் மலையில்

நிற்பதும் என் பாக்கியமல்லோ

ஆசையுடனே பூவில் காத்திருக்கிறேன்

ஆருயிரே வேகம் வாருமே

 

Saturday, 26 February 2022

Aathiyum Anthamumanavare ஆதியும் அந்தமுமானவரே


 


ஆதியும் அந்தமுமானவரே

அல்பாவும் ஓமேகாவும் ஆனவரே

 அல்லேலுயா அல்லேலுயா (4)

 

1. வல்லவர் வல்லவர் வல்லவரே

நமது தேவன் வல்லவரே - அல்லேலுயா

 

2.  நல்லவர் நல்லவர் நல்லவரே

நமது தேவன் நல்லவரே - அல்லேலுயா

 

3. பரிசுத்த பிதாவே நீர் வாழ்க

யெகோவா தேவனே நீர் வாழ்க  - அல்லேலுயா

 

4. பரிசுத்த குமாரனே நீர் வாழ்க

இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க - அல்லேலுயா

 

5. பரிசுத்த பலியாய் வந்தவரே

எங்களுக்காய் பலியானவரே - அல்லேலுயா

 

6. பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - அல்லேலுயா

 

7. பரிசுத்த ஆவியே நீர் வாழ்க

தேற்றரவாளனே நீர் வாழ்க  - அல்லேலுயா

 

8. சீக்கிரமாக வருபவரே நீர்

 சீயோனின் இராஜாவே நீர் வாழ்க - அல்லேலுயா

 

9. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - அல்லேலுயா 

 

10. அல்லேலுயா ஆமென் அல்லேலுயா

அல்லேலுயா ஆமென் அல்லேலுயா - அல்லேலுயா


Friday, 25 February 2022

Kiristhuvukul Valum Enaku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு


 


கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு

வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார் இயேசு

4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்


Thursday, 24 February 2022

Kannokki Parum Deva கண்ணோக்கி பாரும் தேவா


 


கண்ணோக்கி பாரும் தேவா என்னை

கண்ணோக்கி பாரும் தேவா

கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா

கண்ணோக்கி பாரும் தேவா

 

ஒத்தாசை அனுப்பும் பர்வதமே

கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா

கண்ணோக்கி பாரும் தேவா

 

1. அசுத்த ஆவியை எடுத்தீரே

பரிசுத்த ஆவியை கொடுத்தீரே

கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே

உம் நாமம் எந்தன் கெம்பீரமே

 

2. பயமுள்ள ஆவியை எடுத்தீரே

பலமுள்ள ஆவியை கொடுத்தீரே

தேவாதி தேவனே அப்பா பிதாவே

உம் பாதம் எந்தன் தஞ்சமே

 

3. உலகத்தின் ஆவியை எடுத்தீரே

உன்னத ஆவியை கொடுத்தீரே

ராஜாதி ராஜனே அப்பா பிதாவே

உம் கிருபை என்றும் போதுமே