துதி கன மகிமைக்கு பாத்திரரே உம்மை
அனுதினம் துதித்திடுவேன்
அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவே
ஆனந்தமே என்னில் பொங்குதே
1. நாடித் தேடி ஓடி உம் பாதம் வந்தேன்
நன்மை செய்யும் தேவன் நீரல்லோ
பாச வலையால் என்னை வீசி அணைத்தீர்
நேசா உமக்கென்ன செய்குவேன்
2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னை
தேடி வந்த தேவன் நீரல்லோ
தூக்கி எடுத்தே தூய ஆவியும் ஈந்தீர்
தேவா என்னை சொந்தமாக்கினீர்
3. என்றும் உம்மோடு சீயோன் மலையில்
நிற்பதும் என் பாக்கியமல்லோ
ஆசையுடனே பூவில் காத்திருக்கிறேன்
ஆருயிரே வேகம் வாருமே