Saturday, 15 January 2022

Thuthiku Pathirar Thooyavare துதிக்குப் பாத்திரர் தூயவரே


 


துதிக்குப் பாத்திரர் தூயவரே 

துதித்துப் பாடி உயர்த்திடுவோம்

 

1.சேனை அதிபன் தடைகள் முறித்து 

தொடர்ந்து பாதையில் செல்லுகிறார்

எரிகோ மதிலை வீழ்த்துவோம்

அவரின் பெலத்தால் வெல்லுவோம்   -  துதி

 

2.வல்ல மீட்பர் இயேசு தானே  இவரே

 நம்மில் ஜீவிக்கிறார்

நமக்கெதிராய் எழும்பிடும் அந்த 

ஆயுதம் வாய்க்காதே - துதி

 

3.பெரிய காரியம் செய்திடுவார்

நம்பும் தேவன் பெரியவரே

கால் மிதிக்கும் தேசம் தருவார்

கண்ணின் மணிபோல் காத்திடுவார்  -  துதி


Thavithai Pola Nadanamadi தாவீதைப் போல நடனமாடி


 


தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

இயேசப்பா ஸ்தோத்திரம் – 4

1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்இயேசப்பா

2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா

3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா

4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா

5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா


Friday, 14 January 2022

Parisutha Devan Neere பரிசுத்த தேவன் நீரே


 

பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் நாம் இயேசுவே உம் நாமத்தை என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர் தேவன் நீர் இராஜா என்றும்

1. கேருபீன் சேராபீன்கள் உந்தனை தொழுதிடுதே வல்லமை இறங்கிடவே உந்தனை தொழுதிடுவோம் — பரிசுத்த

2. உம்மை போல் தேவன் இல்லை பூமியில் பணிந்திடவே அற்புத தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் — பரிசுத்த

3. மேலான தேவன் நீரே மேலான நாமமிதே மாந்தர்கள் பணிகின்றாரே உம்மையே தொழுதிடுவோம் — பரிசுத்த

4. சத்திய பாதைதனில் நித்தமும் நடந்திடவே உத்தமர் தேவன் நீரே உம்மையே தொழுதிடுவோம் — பரிசுத்த

5. சேனையின் தேவன் நீரே எந்நாளும் முன் செல்லுமே நல்லவர் இயேசு நீரே என்றென்றும் தொழுதிடுவோம் — பரிசுத்த


Wednesday, 12 January 2022

Aananthamai Nam Devanai ஆனந்தமாய் நம் தேவனை


 

ஆனந்தமாய் நம் தேவனை

கீதங்கள் பாடித் துதித்திடுவோம்

தொழுவோம் பணிந்திடுவோம்

அவர்தான் பாத்திரரே

1. மகிமையும் வல்லமை

கனத்திற்குப் பாத்திரர்

சகலமும் சிருஷ்டி தேவன்

அதிபதி இயேசுவே

பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்

பாத்திரர் இயேசு பாத்திரரேஆனந்தமாய்

2. ஒளி தரும் கண்களோ

சுடர் தரும் பாதங்கள்

பெரு வெள்ள இரைச்சல் சத்தம்

வலக்கரம் வல்லமை

சிறந்தவர் அழகில் சிறந்தவர்

துதிகளை செலுத்தி தொழுதிடுவோம் - ஆனந்தமாய்

3. ஜீவன்கள் மூப்பர்கள்

தூதர்கள் யாவரும்

பணிந்திடும் தேவன் நீரே

பரிசுத்தர் இயேசுவே

ஆவியில் நிறைந்தே தொழுவோம்

ஆண்டவர் இவரைப் பணிந்திடுவோம்ஆனந்தமாய்

4. ஆதியும் அந்தம் நீர்

ஞானத்தில் சிறந்தவர்

யூதாவின் சிங்கம் நீரே

துதிகளின் பாத்திரர்

துதிகளை சாற்றி பணிகுவோம்

ஸ்தோத்திரம் செலுத்தி தொழுதிடுவோம்  ஆனந்தமாய்

5. நன்மைகள் யாவையும்

அளித்திடும் தேவனாம்

உண்மையாய் நாமே என்றும்

விழிப்புடன் ஜீவித்து

மகிமையில் சேர்ந்து புகழ்ந்திட

மகிபனை நாமே துதித்திடுவோம்ஆனந்தமாய்


Tuesday, 11 January 2022

Thuthi Ganam Magimai Ellam துதி கனம் மகிமை எல்லாம்


 

துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே

1. தூதர்களே துதியுங்கள்
தூதர் சேனையே துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்

2. வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவையே துதியுங்கள்

3. அக்கினி கல்மழையே துதியுங்கள்
மூடுபனி பெருங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்

4. வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம்


Monday, 10 January 2022

Pitha Kumaran Parisutha Aaviyanavaram பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்


 


பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம் 

1. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக் கூடாத ஒளி தனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரம பிதாவை ஸ்தோத்தரிப்போம்

2. பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக் கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

3. வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கீந்த
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

4. அனல் போல் சோதனை வந்தாலும்
அக்கினி ஊடாய் நடந்தாலும்
சோதனை நம்மை சூழ்ந்தாலும்
ஜெயம் அளிப்பவரை ஸ்தோத்தரிப்போம்

5. வானவர் விரைவில் வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைப்போமே
வானவருடன் சேர்ந்திடும் நாள்
விரைவில் நெருங்கிட ஸ்தோத்தரிப்போம்


Arputhar Arputhar Yesu Arputhar அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்


 

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்

இயேசு அற்புதர்

அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்

இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்

கைத்தாளம் போடுங்கள்

சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்அற்புதர்

 

1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்

தீர்த்த இயேசு அற்புதர்

எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்

காத்த இயேசு அற்புதர்

உலகத்தில் இருப்போனிலும் எங்கள்

இயேசு பெரியவர் அற்புதரே

உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்

இயேசு அற்புதரேஎல்லோரும்

 

2. அலைகடல் மேலே நடந்தவர்

எங்கள் இயேசு அற்புதர்

அகோர காற்றையும் அமைதிப்படுத்திய

இயேசு அற்புதர்

அறைந்தனர் சிலுவையிலே

ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே

ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த

இயேசு அற்புதரேஎல்லோரும்