Sunday, 5 December 2021

Abraham Devan ஆபிரகாம் தேவன்


 

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவனவர்
என்னை அழைத்தும் உன்னத வழியில்
என்றென்றும் நடத்திடுவார்

1. வனாந்திரமோ வாடாதே மனமே
காடையை அனுப்பிடுவார்
தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார்
அவரின் நன்மைகள் எத்தனையோ

2. சோதனை வேளையோ சோராதே மனமே
இயேசுவை சார்ந்திடுவாய்
யோர்தானைக் கடந்து இயேசுவைப் பற்றிக் கொள்
என்றென்றும் ஜீவிப்பாய்

3. கசந்த மாராவோ கவலை வேண்டாமே
கர்த்தர் உன்னோடே உள்ளார்
ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து
வெற்றியை சேர்த்திடுவாய்

4. அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்து
அனுதினம் ஜீவிப்பாயே
அவரின் சித்தம் நித்தமும் செய்ய
ஆவலாய் கீழ்ப்படிவாய்


Friday, 3 December 2021

Thuthipathum sthotharipathum துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும்


 

துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும்

எங்கள் சந்தோஷமே

ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும்

எங்கள் சந்தோஷமே


1. எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால்

எங்கள் சந்தோஷமே

இந்த லோகம் தராத சந்தோஷமே

எங்கள் சந்தோஷமே


2. காலை எழுவதும் பாடி மகிழ்வதும்

எங்கள் சந்தோஷமே

புது கிருபையால் தினம் நிறைவதும்

எங்கள் சந்தோஷமே


3. பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும்

எங்கள் சந்தோஷமே

பரன் இயேசுவிலே களி கூருவதும்

எங்கள் சந்தோஷமே


4. இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும்

எங்கள் சந்தோஷமே

அவர் சுவிசேஷத்தை பறை சாற்றுவதும்

எங்கள் சந்தோஷமே


5. விசுவாசத்தின் நல்ல போராட்டமே

எங்கள் சந்தோஷமே

பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே

எங்கள் சந்தோஷமே


6. கடைசி எக்காள தொனி கேட்டிடவே

எங்கள் சந்தோஷமே

கண்ணிமைப் பொழுதில் மறுரூபமாவதும்

எங்கள் சந்தோஷமே

 

 

 


Thursday, 2 December 2021

En Ratchaga En Yesuvae என் இரட்சகா என் இயேசுவே


 

என் இரட்சகா என் இயேசுவே
என்னை அழைத்த நல் மீட்பரே
என் உள்ளத்தில் சந்தோஷத்தை
தந்தவா உம்மை ஸ்தோத்திரிப்பேன்

1. தூரமாய் நானும் சென்ற போது
அன்பாய் என்னை அழைத்தீரே
காலமெல்லாம் நான் உந்தன் ஒளியில்
என்றும் நிலைத்து வாழ்ந்து சுகிப்பேன்
பாக்கிய நாள் பாக்கிய நாள்
இயேசு என் பாவம் தீர்த்த நாள்என் இரட்சகா

2. சத்தியம் ஜீவன் வழியும் நீரே
கிருபை கூர்ந்து தெரிந்தீரே
தேவனே உம்மில் இணைந்து இருக்க
இன்றும் என்றும் அருள் செய்வீரே
பாக்கிய நாள் பாக்கிய நாள்
இயேசு என் பாவம் தீர்த்த நாள்என் இரட்சகா

3. இருளினின்று ஒளியினிடமாய்
அழைத்த தேவனை போற்றுவேன்
உந்தனின் புண்ணியம் யாவும் சொல்லி
சாட்சியாக பூவில் திகழ்வேன்
பாக்கிய நாள் பாக்கிய நாள்
இயேசு என் பாவம் தீர்த்த நாள்என் இரட்சகா

4. எந்தன் கால்கள் தளரும் போது
தாங்கி என்னை மீட்டவா
உந்தனின் வாக்கு வெளிச்சம் தந்து
காத்து என்றும் நடத்துவீரே
பாக்கிய நாள் பாக்கிய நாள்
இயேசு என் பாவம் தீர்த்த நாள்என் இரட்சகா

Nantriyaal Thuthi Paadu நன்றியால் துதிபாடு


 

நன்றியால் துதிபாடு
நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
நல்லவர் வல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்

2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழல் உண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்து விடும்  

3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம்  

4. துன்மார்க்க ஏதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு

5. சரீரம் ஆத்துமா ஆவியினாலும்
 சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும்

Tuesday, 30 November 2021

Kanmani Nee Kanvalarai கண்மணி நீ கண்வளராய்


 

கண்மணி நீ கண்வளராய்

விண்மணி நீ உறங்கிடுவாய்

கண்மணி நீ கண்வளராய்

 

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட

நீங்கும் துன்பம் நித்திரை வர

ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட

தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்

கந்தை துணி பொதிந்தாயோ

 

2. சின்ன இயேசு செல்லப் பாலனே

உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே

என்னைப் பாரும் இன்ப மைந்தனே

உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற

ஏழை மகவாய் வந்தனையோ

 

3. வீடும் இன்றி முன்னனைதானோ

காடும் குன்றும் சேர்ந்ததேனோ

பாடும் கீதம் கேளாயோ நீயும்

தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய

ஏழ்மைக் கோலம் கொண்டனையோ


Friday, 26 November 2021

Karthar Ennai Visaarippavar கர்த்தர் என்னை விசாரிப்பவர்


 

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்

1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான்

2. எந்தன் தலையிலுள்ள மயிரெல்லாம்
உன்னதரே எண்ணி வைத்துள்ளார்
அவரின் உத்தரவில்லா தொன்றும்
கீழே விழாது என்று அறிவேன் நான்

3. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளாரல்லோ

4. வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போக செய்வாரே

5. தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்

Thursday, 25 November 2021

Siluvaiyin Nilalil Anuthinam சிலுவையின் நிழலில் அனுதினம்


 

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன்

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்சிலுவையின்

1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்து
தளர்ந்த என் ஜீவியமே
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம்சிலுவையின்

2. எவ்வித கொடிய இடறுக்கும் அஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன்
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்சிலுவையின்

3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்சிலுவையின்