Sunday, 31 October 2021


 

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமேஅதைத்
தேடியே நாடி ஒடியே வருவாய்
தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தேபாவ கசடதை
அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே

2. பாவியை மீட்கத் தாவியே உயிரை
தாமே ஈந்தவராம்பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே

3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும்என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம்நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக்
காப்பார் ஆசைகொள் நீ மனமே

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம்அதைப்
பூண்டுகொண்டால் தான் பொன்னகர்
வாழ்வில் புகுவாய் நீ மனமே

Friday, 29 October 2021

Salemin Rasa Sangaiyin Rasa சாலேமின் ராசா சங்கையின் ராசா

1. சாலேமின் ராசா சங்கையின் ராசா

ஸ்வாமி வாருமேன் இந்தத்

தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்

சடுதி வாருமேன் --- சாலேமின்

 

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன

செல்வக்குமாரனே - இந்தச்

சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற

செய்தி கேளீரோ --- சாலேமின்

 

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்

கண்பூத்துப் போகுதே -நீர்

சுட்டிக்காட்டிப் போன வாக்குத்தத்தம்

நிறைவேறலாகுதே --- சாலேமின்

 

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை

நாடித்தேடுதே - இந்த

நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள்

தேடி வாடுதே --- சாலேமின்

 

5. சாட்சியாகச் சுபவிசேஷம்

தாரணிமேவுதே - உந்தஞ்

சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்

தாவிக் கூவுதே --- சாலேமின்

 

Thursday, 28 October 2021

Saruva Logathipa Namaskaram சருவ லோகாதிபா நமஸ்காரம்


 

1. சருவ லோகாதிபா நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்
தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம்.

2. திரு அவதாரா நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே நமஸ்காரம்
தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்.

3. பரிசுத்த ஆவி நமஸ்காரம்
பரம சற்குருவே நமஸ்காரம்
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்.

4. முத்தொழிலோனே நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா கருணாசமுத்திரா
நித்ய திரியேகா நமஸ்காரம்.

Wednesday, 27 October 2021

Ellaam Yesuvae எல்லாம் இயேசுவே


 


எல்லாம் இயேசுவே

எனக்கெல்லாம் இயேசுவே

தொல்லை மிகு இவ்வுலகில்

துணை இயேசுவே

 

1. ஆயனும் சகாயனும்

நேயனுமும் உ பாயனும்

நாயனும் எனக்கன்பான

ஞானமணவாளனும் --- எல்லாம்

 

2. தந்தை தாய் இனம்  ஜனம்

பந்துளோர் சிநேகிதர்

சந்தோட சகலயோக

சம்பூரண பாக்யமும் --- எல்லாம்

 

3. கவலையில் ஆறுதலும்

கங்குலிலென் ஜோதியும்

கஷ்ட நோய்ப் படுக்கையிலே

கை கண்ட  அவிழ்தமும் --- எல்லாம்

 

4. போதகப் பிதாவுமென்

போக்கினில் வரத்தினில்

ஆதரவு செய்திடுங்

கூட்டாளியுமென் தோழனும் --- எல்லாம்

 

5. அணியும்  ஆபரணமும்

ஆஸ்தியும் சம்பாத்யமும்

பிணையாளியும் மீட்பருமென்

பிரிய மத்தியஸ்தனும் --- எல்லாம்

 

6. ஆன ஜீவ அப்பமும்

ஆவலுமென் காவலும்

ஞானகீதமும் சதுரும்

நாட்டமும் கொண்டாட்டமும் --- எல்லாம்


Aar Ivar Aaro ஆர் இவர் ஆரோ


 


ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ

1. ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ

2. ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ

3. கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்
சுற்றி வைக்கப் பழந்துணியோ இவர்
தூங்கப்புல் அணையோ

4. சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட
கானகக் கோனர் காணவர இவர்
கர்த்தர் ஆவாரோ


Tuesday, 26 October 2021

Yesuvin Marbil Naan Sainthumae இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே


 

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே

இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்

பாரிலே பாடுகள் மறந்து நான்

பாடுவேன் என் நேசரை நான் போற்றியே

 

வாழ்த்துவேன் போற்றுவேன்

உம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா

 

2. சோதனை யாலென்னுள்ளம் சோர்ந்திடும்

வேதனை யான வேளை வந்திடும்

என் மன பாரம் எல்லாம் மாறிடும்

தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும்   - வாழ்த்து

 

3. சிநேகிதர் எல்லாம் கைவிட்டிடினும்

நேசராய் இயேசென்னோடிருப்பதால்

மண்ணில் என் வாழ்வை நான் விட்டேகியே

மன்னவனாம் இயேசுவோடு சேருவேன்   - வாழ்த்து

 

4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே

என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே

ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே

இயேசுவோடு சேர்ந்து நித்தம் வாழுவேன்   - வாழ்த்து

Aathumamae En Mulu Ullamae ஆத்துமமே என் முழு உள்ளமே


 


ஆத்துமமே என் முழு உள்ளமேஉன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்தஉன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ளஆத்துமமே

2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாதஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலானஆத்துமமே

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்தஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமேஆத்துமமே