Saturday, 2 October 2021

Alleluya Alleluya En Aathumaave அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே


 

அல்லேலூயா அல்லேலூயா
என் ஆத்துமாவே கர்த்தரை துதி

1. நான் உயிரோடு இருக்குமட்டும்
என் தேவனை துதிப்பேனே
நான் உள்ளளவும் என் இயேசுவையே
கீர்த்தனம் பண்ணிடுவேன்

2. நான் மனிதனை என்றும் நம்பிடேன்
அவன் யோசனை அழிந்திடுமே
யாக்கோபின் தேவன் என் துணையே
என்றென்றும் பாக்கியவான்

3. என் ஆத்துமத் தாகம் பெருக
என் கட்டுகள் அறுந்திடுமே
கர்த்தரின் கரம் என்னைக் காத்திடுமே
என்றென்றும் வாழ்ந்திடுவேன்

4. கர்த்தர் சதா காலமும்
சீயோனில் அரசாளுவார்
தலைமுறை தலைமுறையாய் அவரே
இராஜரீகம் பண்ணிடுவார்

Friday, 1 October 2021

Yesuvaalae Pidikkapattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்


 

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்ல

எல்லாமே இயேசுஎன் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு

1. பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே

2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார்இந்த

3. பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களிர்கூர்ந்து மகிழ்ந்திருப்பேன்நான்

4. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் நான்

5. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்

6. நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்

Thursday, 30 September 2021

Naan Nesikum நான் நேசிக்கும்


 

நான் நேசிக்கும் தேவன்

இயேசு என்றும் ஜீவிக்கிறார்

அவர் நேற்றும் இன்றும் நாளை

என்றும் மாறாதவர்

 

நான் பாடி மகிழ்ந்திடுவேன்

என் இயேசுவைத் துதித்திடுவேன்

என் ஜீவிய காலமெல்லாம்

அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

 

1. கடலாம் துன்பத்தில் தவிக்கும்

வேளையில் படகாய் வந்திடுவார்

இருள் தனிலே பகலவனாய்

இயேசுவே ஒளி தருவார்

 

2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்

மருத்துவராகிடுவார்

மயங்கி விழும் பசிதனிலே

மன்னாவைத் தந்திடுவார்

 

3. தூற்றும் மாந்தரின் நடுவில்

எந்தனை தேற்றிட வந்திடுவார்

கால் தளர ஊன்றுகோலாய்

காத்திட வந்திடுவார்

 

4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க

நான் இனி கலங்கிடேனே

எந்தனுக்கே காவல் அவர்

நான் உடல் அவர் உயிரே

Wednesday, 29 September 2021

Singa Kuttigal Pattini சிங்கக் குட்டிகள் பட்டினி


 சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

குறையில்லையே குறையில்லையே

ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே


1. புல்லுள்ள இடங்களிலே

என்னை மேய்க்கின்றார்

தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று

தாகம் தீர்க்கின்றார்


2. எதிரிகள் முன் விருந்தொன்றை

ஆயத்தப்படுத்துகின்றார்

என் தலையை எண்ணெயினால்

அபிஷேகம் செய்கின்றார்


3. ஆத்துமாவைத் தேற்றுகின்றார்

ஆவி பொழிகின்றார்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

கிருபை என்னைத் தொடரும்


4. என் தேவன் தம்முடைய

மகிமை செல்வத்தினால்

குறைகளையே கிறிஸ்துவுக்குள்

நிறைவாக்கி நடத்திடுவார்

Tuesday, 28 September 2021

En Yesu Raja என் இயேசு ராஜா


 

என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)

1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு

2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
பரமனே என் முன் தீபமாய் வாரும் (2) – என் இயேசு

3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு

Monday, 27 September 2021

Sabayin Asthibaram சபையின் அஸ்திபாரம்


 

1. சபையின் அஸ்திபாரம்
நல் மீட்பர் கிறிஸ்துவே
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்

2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்
சபை ஒன்றே ஒன்றாம்
ஒரே விசுவாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்
ஓர் திவ்விய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்

3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்
உள்ளானவரின் துரோகம்
கிலேசப்படுத்தும்
பக்தர் ஓயாத சத்தம்
எம்மட்டும் என்பதாம்
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்

4. மேலான வான காட்சி
கண்டாசீர் வாதத்தை
பெற்று போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்

5. என்றாலும் கர்த்தாவோடு
சபைக்கு ஐக்கியமும்
இளைப்பாறுவாரோடு
இன்ப இணக்கமும்
இப்பாக்கிய தூயோரோடு
கர்த்தாவே, நாங்களும்
விண் லோகத்தில் உம்மோடு
தங்கக் கடாட்சியும்

Aadhiyum Neerae Andhamum Neerae ஆதியும் நீரே அந்தமும் நீரே


 

ஆதியும் நீரே அந்தமும் நீரே

மாறிடா நேசர் துதி உமக்கே

தேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்து

எந்நாளும் துதித்திடுவோம்


1. தூதர்கள் போற்றும் தூயவரே

துதிகளின் பாத்திரர் தேவரீரே

உந்தனின் சமூகம் ஆனந்தமே

உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்


2. வல்லமை ஞானம் மிகுந்தவரே

வையகம் அனைத்தையும் காப்பவரே

ஆயிரம் பேர்களில் சிறந்தவராம்

ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்


3. செய்கையில் மகத்துவம் உடையவரே

இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே

பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே

பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்


4. ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்

ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்

உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே

உத்தம தேவனை பணிந்திடுவோம்


5.ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்

பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்

மகிமையும் கனமும் துதிகளையே

செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்