Monday, 23 August 2021

Senai Athiban Nam சேனை அதிபன் நம்


 

1. சேனை அதிபன் நம் கர்த்தருக்கே

செலுத்துவோம் கனமும் மகிமையுமே

அற்புதமே தம் அன்பெமக்கு  

அதை அறிந்தே அகமகிழ்வோம்


ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்

ஜெயமாக நடத்திடுவார்

ஜெயக்கீதங்கள் நாம் பாடியே

ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்

ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே


2. தாய் மறந்தாலும் நான் மறவேன்

திக்கற்றோராய் விட்டு விடேன்

என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்

என்றும் வாக்கு மாறிடாரே — ஜெய


3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே

நானே நல்ல மேய்ப்பன் என்றார்

இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்

இன்பப் பாதைக் காட்டிடுவார் — ஜெய


4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய

சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க

சாத்தானின் சேனை நடுங்கிடவே 

துதி சாற்றி ஆர்ப்பரிப்போம் — ஜெய


5. கறை திரை முற்றும் நீங்கிடவே

கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்

வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை

வழுவாமல் காத்துக் கொள்வார் — ஜெய

Sunday, 22 August 2021

Thiyangum Ullam kandaar தியங்கும் உள்ளம் கண்டார்


 

தியங்கும் உள்ளம் கண்டார்

தயக்கம் என்ன என்றார்

திகைக்கும் என் மனதில்

திரு வார்த்தை அருளித் தந்தார்

 

1. துதிப்பேன் என் கர்த்தரை

துதி சாற்றி மகிழ்ந்திடுவேன்

என்னைக் கண்டு மனதுருகும்

அன்பர் இயேசு என்அருகில் உண்டே

 

2. கதறும் ஆத்துமாவே

கலங்காதே என்றவரே

கலைமான்களும் கதறி அழும்

நீரோடையை  வாஞ்சிப்பதால்

 

3. அவர் என் கன்மலையே

அசையாத நல் பர்வதமே

அரும் பாவ உலகமதில்

அவர் அன்பதில் நிலைத்திருப்பேன்

பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்


 

1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ்  உள்ளம் வந்தார்
பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்
பரிசுத்தவான்களோடு இணைந்தார்
இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே

அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்
ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்
அல்லேலூயா அல்லேலூயா

2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே
பரிசுத்த ஜுவாலை கவர்ந்து கொண்டதே
உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை அடிவாரமே

3. தாழ்மை உள்ளம் கொண்டுபின்செல்வேன் நானே
கந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கவே
வல்ல தேவன் காட்டும் சுத்த கிருபையே

4. நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக்கிடங்கிற்குச் செல்லேன்
என் முன்னே அநேக சுத்தர்செல்கின்றார்
இந்தப் பாதை எந்தன்ஜீவ பாதையே

Friday, 20 August 2021

Sthotharipaen Sthotharipaen ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்


 

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே


1.
உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகின்றேன் யான்

2. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்தினால் தோய்த்ததினாலே

3.
என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான்

4.
ஆகாயத்து பட்சிகளை போஷிக்கும் தேவன்
தினமும் என்னை போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான்  

5.
நாளைத் தினம் ஊண் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான்  

6.
சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனே அதி
சீக்கிரமாய் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான்

Thursday, 19 August 2021

Yesu En Valvil inbam இயேசு என் வாழ்வில் இன்பம்


 

இயேசு என் வாழ்வில் இன்பம்

இகமதில் அவரைப் புகழ்வேன் (2)

 

1. பாவங்கள் போக்கிடும் நாமம்

பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்

அகமதிலே அருள்தனையே

அளிக்கும் அன்பு தேவன்

 

2. நன்மை செய்திங் கால்கள்

நல்லோரைத் தேடிடுங் கண்கள்

அளவில்லாத ஆசீர்களையே

அளிக்கும் நல்ல தேவன்

 

3. கண்ணீர் துடைத்திடும் கரங்கள்

காயம் ஏற்ற நல் கரங்கள்

கருணை மிகும் கரங்களையே

நீட்டி அழைக்கும் தேவன்

 

4. இயேசு காட்டும் பாதை

இடறில்லா அன்பின் வழியே

ஜீவ வழி என்றவரே

ஜீவன் தந்த தேவன்

 

5. சிலுவையில் தொங்கும் மீட்பர்

சிறந்த வாழ்வின் பங்கு

சுதந்திரமே நல்கிடுவார்

சுகமாய்  தங்கி வாழ்வேன்

Wednesday, 18 August 2021

Thuthippathae En Thaguthiyallo துதிப்பதே என் தகுதியல்லோ


 

துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை

1. வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார்துதிப்பதே

2. வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார்துதிப்பதே

3. மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார்துதிப்பதே

4. ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார்துதிப்பதே

5. வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார்துதிப்பதே

6. சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒளி நிறைந்த வழி திறந்தார்துதிப்பதே

Tuesday, 17 August 2021

Inbamithae Paerinbamithae இன்பமிதே பேரின்பமிதே


 

இன்பமிதே பேரின்பமிதே
இயேசு நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே
இயேசு நாமமே

1.பாவம் போக்க வந்த நாமம்
இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம்
இயேசுவின் நாமமே

2.நேற்றும் இன்றும் மாறா நாமம்
இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம்
இயேசுவின் நாமமே

3.ஜீவ பாதை காட்டும் நாமம்
இயேசு நாமமே
ஜீவன் பெலன் தந்த நாமம்
இயேசுவின் நாமமே

4.சாவு பயங்கள் நீக்கும் நாமம்
இயேசு நாமமே
சாபம் ரோகம் நீக்கும் நாமம்
இயேசுவின் நாமமே

5.தேவ ராஜ்யம் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே
தேவ நீதி நிறைந்த நாமம்
இயேசுவின் நாமமே