Monday, 16 August 2021

Avar Enthan Sangeethamaanavar அவர் எந்தன் சங்கீதமானவர்


 

அவர்  எந்தன் சங்கீதமானவர்

பெலமுள்ள கோட்டையுமாம்

ஜீவனின் அதிபதியான அவரை

ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

 

1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்

தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே

வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்

திக்கற்ற பிள்ளைகளின் தேவனவரே

 

2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்

இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்

இருப்பேன் என்றவர் நமது தேவன்

இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்

 

3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை

வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்

வருகையில் அவரோடு இணைந்து என்றும்

வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

Ayiram Ayiram Padalgalai ஆயிரம் ஆயிரம் பாடல்களை


 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை

ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்

யாவரும் தேமொழிப் பாடல்களால் 

இயேசுவைப் பாடிட வாருங்களேன் 


அல்லேலூயா  அல்லேலூயா 

என்றெல்லாரும் பாடிடுவோம் 

அல்லலில்லை  அல்லலில்லை 

ஆனந்தமாய்ப் பாடிடுவோம் 


2. புதிய புதிய பாடல்களைப் 

புனைந்தே பண்களும் சேருங்களேன்

துதிகள் நிறையும் கானங்களால்

தொழுதே இறைவனைக் காணுங்களேன்


3. நெஞ்சின் நாவின் நாதங்களே

நன்றி கூறும் கீதங்களால்

மிஞ்சும் ஓசைத் தாளங்களால் 

மேலும் பரவசம் கூடுங்களேன்


4. எந்த நாளும் காலங்களும் 

இறைவனைப் போற்றும் நேரங்களே

சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்

சீயோனின் கீதம் பாடுங்களேன்

Vaanil Parakkum Paravaigal வானில் பறக்கும் பறவைகள்


 

வானில் பறக்கும் பறவைகள்

மதுர கீதம் பாடிடும்

காட்டில் மலரும் பூக்கள்

அவரின் நாமம் போற்றிடும்

 

1. சூரிய சந்திரனும்

மகா நட்சத்திர கூட்டமும்

ஆகாயத்தின் விரியும்

அவரின் கிரியைகள் வர்ணிக்கும்

 

2. பொங்கும் கடல்களும்

பெருங்காற்றின் இரைச்சலும்

அடங்கும் அவரின் வார்த்தைக்கு

இயேசு நாமம் பெரியது

 

3. பூமியின் பிரபுக்களே

புவி ஆளும் மனிதரே

பெரியோர் முதல் பிள்ளைகளும்

இயேசு நாமம் போற்றுவீர்

Saturday, 14 August 2021

Alinthu Pokindra Aathumakkalai அழிந்து போகின்ற ஆத்துமாக்களை


 

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்

தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே

1. இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்

2. திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்

3. எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்

4. கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்

5. ஊதாரி மைந்தர்கள்
உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும்
விருந்து நடக்கட்டும்

Friday, 13 August 2021

Alaganavar Arumaiyanavar அழகானவர் அருமையானவர்


 

அழகானவர் அருமையானவர் இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு

1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்ம நேசரே

2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே

3. கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்

Thursday, 12 August 2021

Ekkaalathum Karthar எக்காலத்தும் கர்த்தர்


 

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை

எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

உயர்வோ தாழ்வோ எந்நிலையோ

எந்தன் தஞ்சம் இயேசுவே

 

1.மண்ணின் வாழ்வும் மாயையாகும்

மனிதன் காண்பது பொய்யாகும்

மாறிடா நேசர் இயேசுவே

மாறாத அன்பு என்றும் போதுமே

 

2.அலைகள் மோதி எதிர்வந்தாலும்

 கலங்கிடேனே வாழ்க்கையிலே

அசையா எந்தன் நம்பிக்கை

நங்கூரம் எந்தன் இயேசு போதுமே

 

3.அவரை நோக்கி ஜெபிக்கும்போது

அருகில் வந்து உதவிசெய்வார்

கைவிடாமல் கருத்துடன்

காத்தென்னை என்றும் நடத்திடுவார்

 

4.தேவ பயமே ஜீவ ஊற்று

மரண கண்ணிக்கு விலக்கிடுமே

தேவ பாதையில் நடந்திட

தேவாவியானவர் உதவி செய்வார்

 

5.முன்னறிந்து அழைத்த தேவன்

முடிவு வரையும் நடத்திடுவார்

தேவ சாயல் மாறியே

தேவாதி தேவனை தரிசிப்பேனே

Adaikalamae Umathadimai அடைக்கலமே உமதடிமை


 

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே

5. பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
  உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே