வானில் பறக்கும் பறவைகள்
மதுர கீதம் பாடிடும்
காட்டில் மலரும் பூக்கள்
அவரின் நாமம் போற்றிடும்
1. சூரிய சந்திரனும்
மகா நட்சத்திர கூட்டமும்
ஆகாயத்தின் விரியும்
அவரின் கிரியைகள் வர்ணிக்கும்
2. பொங்கும் கடல்களும்
பெருங்காற்றின் இரைச்சலும்
அடங்கும் அவரின் வார்த்தைக்கு
இயேசு நாமம் பெரியது
3. பூமியின் பிரபுக்களே
புவி ஆளும் மனிதரே
பெரியோர் முதல் பிள்ளைகளும்
இயேசு நாமம் போற்றுவீர்