Monday, 9 August 2021

Putham Puthiya Padal புத்தம் புதிய பாடல்


 

புத்தம் புதிய பாடல் தந்தார்

நித்தம் அவரை துதித்திடவே

 

1. காலையில் கூவிடும் பறவைகளும்

மாலையில் கூப்பிடும் விலங்குகளும்

இன்பமாய் இயேசுவை துதிக்கின்றன

என்னையும் துதித்திட அழைக்கின்றன

 

2. மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும்

பாறையில் மோதிடும் கடலலையும்

துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன

என்னையும் துதித்திட அழைக்கின்றன

 

3.காகங்கள் கரைந்திடும் குரலை கேட்டு

படைத்தவர்  மகிழ்ந்திடும் வேளையிலே

பாவி என் பாடலின் துதி கேட்டு

என் தேவன் களித்திட மகிழ்வேன் நான்

 

4.உள்ளத்தில் பாவங்கள் இருக்கும் வரை

உண்மையாய் துதித்திட முடியவில்லை

கல்வாரி இரத்தத்தால் கழுவப் பெற்றேன்

இன்பமாய் இயேசுவை துதித்து வாழ்வேன்

 

Neengatha Pavam நீங்காத பாவம்


 

நீங்காத பாவம் நீங்காததேனோ

 நீங்கிடும் நாள்தானிதோ

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

வாவென்று அழைக்கிறார்

 

1. காணாத ஆட்டை தேடி உன் நேசர்

கண்டுன்னை சேர்த்திடுவார்

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

வாவென்று அழைக்கிறார்

 

2. என்பாவம் போக்கி என்னையும் மீட்டார்

உன்னையும் மீட்டிடுவார்

 பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

 வாவென்று அழைக்கிறார்

 

3. நினையாத நேரம் மரணம் சந்தித்தால்

எங்கு நீ சென்றிடுவாய்

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

 வாவென்று அழைக்கிறார்

Sunday, 8 August 2021

Pava Sanjalathai பாவ சஞ்சலத்தை


 

1.பாவ சஞ்சலத்தை நீக்க

பிராண சிநேகிதனுண்டே

பாவ பாரம் தீர்ந்து போக

மீட்பர் பாதம் தஞ்சமே

லோக துக்கம் துன்பத்தாலே

நெஞ்சம் நொந்து சோருங்கால்

துன்பம் இன்பமாக மாறும்

ஊக்கமான ஜெபத்தால்

 

2.கஷ்ட நஷ்டம் உண்டானாலும்

இயேசுவண்டை சேருவோம்

மோச நாசம் நேரிட்டாலும்

ஜெப தூபம் காட்டுவோம்

நீக்குவாரே நெஞ்சின் நோவை

பெலவீனம் தாங்குவார்

நீக்குவாரே மனச் சோர்வை

தீய குணம் மாற்றுவார்

 

3.பெலவீனமான போதும்

கிருபாசனமுண்டே

பந்து ஜனம் சாகும்போதும்

புகலிடம் இதுவே

ஒப்பில்லாத பிராணநேசா

உம்மை நம்பி நேசிப்போம்

அளவற்ற அருள் நாதா

உம்மை நோக்கி கெஞ்சுவோம்

Saturday, 7 August 2021

Thirukarathal Thangi திருக்கரத்தால் தாங்கி


 

1. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே

2. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

3. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

Sthothiram Sthothiram Yesuvukae ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே


 

1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே  துதி

சாற்றிடுவோம் என்றுமே

சேற்றிலிருந் தெம்மை மீட்டெடுத் தென்றும்

ஆற்றியே தேற்றுவதால்  

 

இன்ப இயேசுவின் திவ்விய நாமத்தை

துன்பம் சூழும் எவ்வேளையிலும்

நன்றியோடு நாம் பாடிடுவோம்

 

2. தண்ணிரைக் கடந்திடும் வேளையிலும் அவர்

நம்மோடு இருப்பேன் என்றார்

அக்கினி சூளையில் நடந்திடும் வேளையில்

விக்கினம் சூழாதென்றார்

 

3 .கஷ்டங்கள் நஷ்டங்கள்  சூழ்ந்திடும் வேளையில்

சோர்ந்திடா பெலன் அளிப்பார் 

நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு

நல்குவேன் கிருபை என்றார்

 

4. திகையாதே கலங்காதே என்றுரைத்தார் அவர்

திக்கற்றோராக விடார்

பயப்படாதே சிறுமந்தை என்றழைத்தார்

பாரில் நம் மேய்ப்பனவர் 

 

5. சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும்

பங்கம் வராது காப்பார்

நம்மையே மீட்கத் தம்மையே ஈந்து

தரணியில் மாண்டுயிர்த்தார்

 

6.சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே

சீயோனில் சேர்த்திடுவார்

மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில்

மகிமையின் சாயல் அணிவோம்

Friday, 6 August 2021

Thuthipaen Thuthippaen துதிப்பேன் துதிப்பேன்


 

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

காலா காலமெல்லாம்

என்னைக் காத்தவரை

நான் உள்ளளவும் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

 

1.பாவங்கள் பல நான் செய்திட்டாலும்

பாவி என் மீது அன்பைச் சொரிந்து

என்னை மீட்டு காத்து நடத்திய

எந்தன் இயேசுவை துதிப்பேன்

 

2.நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்

 துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்

என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த

எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

 

3.வாழ்விலே உம்மை நான் ஏற்றிடுவேன்

தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே

ஏழை நானே பாதம் பணிந்து

எந்தன் இயேசுவைத் துதிப்பேன்