Saturday 7 August 2021

Thirukarathal Thangi திருக்கரத்தால் தாங்கி


 

1. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே

2. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

3. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

Sthothiram Sthothiram Yesuvukae ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே


 

1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே  துதி

சாற்றிடுவோம் என்றுமே

சேற்றிலிருந் தெம்மை மீட்டெடுத் தென்றும்

ஆற்றியே தேற்றுவதால்  

 

இன்ப இயேசுவின் திவ்விய நாமத்தை

துன்பம் சூழும் எவ்வேளையிலும்

நன்றியோடு நாம் பாடிடுவோம்

 

2. தண்ணிரைக் கடந்திடும் வேளையிலும் அவர்

நம்மோடு இருப்பேன் என்றார்

அக்கினி சூளையில் நடந்திடும் வேளையில்

விக்கினம் சூழாதென்றார்

 

3 .கஷ்டங்கள் நஷ்டங்கள்  சூழ்ந்திடும் வேளையில்

சோர்ந்திடா பெலன் அளிப்பார் 

நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு

நல்குவேன் கிருபை என்றார்

 

4. திகையாதே கலங்காதே என்றுரைத்தார் அவர்

திக்கற்றோராக விடார்

பயப்படாதே சிறுமந்தை என்றழைத்தார்

பாரில் நம் மேய்ப்பனவர் 

 

5. சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும்

பங்கம் வராது காப்பார்

நம்மையே மீட்கத் தம்மையே ஈந்து

தரணியில் மாண்டுயிர்த்தார்

 

6.சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே

சீயோனில் சேர்த்திடுவார்

மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில்

மகிமையின் சாயல் அணிவோம்

Friday 6 August 2021

Thuthipaen Thuthippaen துதிப்பேன் துதிப்பேன்


 

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

காலா காலமெல்லாம்

என்னைக் காத்தவரை

நான் உள்ளளவும் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

 

1.பாவங்கள் பல நான் செய்திட்டாலும்

பாவி என் மீது அன்பைச் சொரிந்து

என்னை மீட்டு காத்து நடத்திய

எந்தன் இயேசுவை துதிப்பேன்

 

2.நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்

 துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்

என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த

எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

 

3.வாழ்விலே உம்மை நான் ஏற்றிடுவேன்

தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே

ஏழை நானே பாதம் பணிந்து

எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

Wednesday 4 August 2021

Motcha Yathirai மோட்ச யாத்திரை


 

1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள்இம்
மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்

ஆனந்தமே ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமேதம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே ஆனந்தமே

3. அள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் ஆனந்தமே

4. மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம் ஆனந்தமே

5. கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையேஇக்
கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்ஆனந்தமே

6. ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
எக்காள தொனியுடன் வருகிறார் ஆனந்தமே

Tuesday 3 August 2021

En Yesuvin Sanithiyil என் இயேசுவின் சந்நிதியில்


 

என் இயேசுவின் சந்நிதியில்

என்றும் கீதங்கள் பாடிடுவேன்

என்னைக் காத்திடுமே அவர் நாமமதே

துதி கீதங்கள் பாடிடுவேன்

 

1. கண்ணீர் அவர் துடைத்திடுவார்

தம் கரங்களால் தாங்கிடுவார்

எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே

எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே    - என்

 

2. பரமன் குரல் கேட்கும்போது

பரமானந்தம் அடைந்திடுவேன்

எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே

அதி சீக்கிரம் கிடைத்திடுமே   - என்

 

3. உலகை நம்பி சோர்ந்திடாதே

உன்னதத்தை நீ நம்பிடுவாய்

உந்தன் தேவைகள் அறியும் இயேசுவாலே

எல்லா பெலனும் கிடைத்திடுமே - என்

Monday 2 August 2021

Uyirthelunthare Alleluah உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா


 

உயிர்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
 சொந்தமானாரே

1. கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே

2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே

3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே

4. மரணமுன் கூர் எங்கே
பாதாளமுன் ஜெயமெங்கே
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்

5. ஆவியால் இன்றும் என்றும்
எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே

Sunday 1 August 2021

Erusalem En Aalayam எருசலேம் என் ஆலயம்


 

1.எருசலேம் என் ஆலயம்

ஆசித்த வீடதே

நான் அதைக் கண்டு பாக்கியம்

அடையவேண்டுமே.

 

2.பொற்றளம் போட்ட வீதியில்

எப்போதுலாவுவேன்

பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்

எப்போது பணிவேன்

 

3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்

நிற்கும் அம்மோட்சத்தார்

கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்

ஓய்வின்றிப் பாடுவார்.

 

4.நானும் அங்குள்ள கூட்டத்தில்

சேர்ந்தும்மைக் காணவே

வாஞ்சித்து, லோக துன்பத்தில்

களிப்பேன், இயேசுவே.

 

5.எருசலேம் என் ஆலயம்

நான் உன்னில் வாழுவேன்

என் ஆவல், என் அடைக்கலம்

எப்போது சேருவேன்