Wednesday, 4 August 2021

Motcha Yathirai மோட்ச யாத்திரை


 

1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள்இம்
மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்து செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்

ஆனந்தமே ஆனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்

2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமேதம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே ஆனந்தமே

3. அள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் ஆனந்தமே

4. மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம் ஆனந்தமே

5. கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையேஇக்
கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்ஆனந்தமே

6. ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
எக்காள தொனியுடன் வருகிறார் ஆனந்தமே

Tuesday, 3 August 2021

En Yesuvin Sanithiyil என் இயேசுவின் சந்நிதியில்


 

என் இயேசுவின் சந்நிதியில்

என்றும் கீதங்கள் பாடிடுவேன்

என்னைக் காத்திடுமே அவர் நாமமதே

துதி கீதங்கள் பாடிடுவேன்

 

1. கண்ணீர் அவர் துடைத்திடுவார்

தம் கரங்களால் தாங்கிடுவார்

எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே

எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே    - என்

 

2. பரமன் குரல் கேட்கும்போது

பரமானந்தம் அடைந்திடுவேன்

எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே

அதி சீக்கிரம் கிடைத்திடுமே   - என்

 

3. உலகை நம்பி சோர்ந்திடாதே

உன்னதத்தை நீ நம்பிடுவாய்

உந்தன் தேவைகள் அறியும் இயேசுவாலே

எல்லா பெலனும் கிடைத்திடுமே - என்

Monday, 2 August 2021

Uyirthelunthare Alleluah உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா


 

உயிர்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
 சொந்தமானாரே

1. கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே

2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே

3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே

4. மரணமுன் கூர் எங்கே
பாதாளமுன் ஜெயமெங்கே
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்

5. ஆவியால் இன்றும் என்றும்
எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே

Sunday, 1 August 2021

Erusalem En Aalayam எருசலேம் என் ஆலயம்


 

1.எருசலேம் என் ஆலயம்

ஆசித்த வீடதே

நான் அதைக் கண்டு பாக்கியம்

அடையவேண்டுமே.

 

2.பொற்றளம் போட்ட வீதியில்

எப்போதுலாவுவேன்

பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்

எப்போது பணிவேன்

 

3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்

நிற்கும் அம்மோட்சத்தார்

கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்

ஓய்வின்றிப் பாடுவார்.

 

4.நானும் அங்குள்ள கூட்டத்தில்

சேர்ந்தும்மைக் காணவே

வாஞ்சித்து, லோக துன்பத்தில்

களிப்பேன், இயேசுவே.

 

5.எருசலேம் என் ஆலயம்

நான் உன்னில் வாழுவேன்

என் ஆவல், என் அடைக்கலம்

எப்போது சேருவேன்

Saturday, 31 July 2021

Adimai Naan Aandavare அடிமை நான் ஆண்டவரே


 

அடிமை நான் ஆண்டவரேஎன்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

2. உலக இன்பமெல்லாம்நான்
உதறித் தள்ளி விட்டேன்

3. பெருமை செல்வமெல்லாம்இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

4. வாழ்வது நானல்லஎன்னில்
இயேசுவே வாழ்கின்றீர்

5. என் பாவம் மன்னித்தருளும்உம்
இரத்தத்தால் கழுவிவிடும்

6. முள்முடி எனக்காகஐயா
கசையடி எனக்காக

7. என் பாவம் சுமந்து கொண்டீர்என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

Friday, 30 July 2021

Vaan Pugal Valla வான் புகழ் வல்ல


 

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே

காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்

கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

 

1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்

யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்

யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்

நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான்

 

2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து

இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்

அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்

கர்த்தன் தம் சேனையால் காத்திடுவாரே — வான்

 

3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்

சுற்றி உலாவின நித்திய தேவன்

மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்

முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே — வான்

 

4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க

சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்

சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள

சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே — வான்

 

5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை

தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய

வழுவ விடாமலே காத்திடும் தேவன்

மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே — வான்

 

6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக

மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க

மணவாளன் வரும்வேளை அறியலாகாதே

மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் — வான்

Thursday, 29 July 2021

Yesuve Unthan Masilla இயேசுவே உந்தன் மாசில்லா


 

1. இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சிந்தினீரே
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ

மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்

2. என் மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக்கினையில் நின்று மீட்ட
சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்

3. எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல்
தாங்கக்கூடாத மா பாரமே
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்தும் மறந்தும் தள்ளினீர்

4. எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
மனபாரத்தால் சோர்ந்திடும்போது
ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர்

5. எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்து வருவேன்