Saturday, 24 July 2021

Karththaraiye Nambidum Devajaname கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே


 

கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே

கலங்காதே ஒரு போதும் வெட்கமடைவதில்லை

 

1. செங்கடல் கோரமாய் முன்னே நிற்கும்

சேனைகள் பின்னால் தொடர்ந்து வரும்

ஆனாலும் முன்னேறிப் போ என்கிறாரே

அவரே ஓர் வழி திறந்திடுவாரே   - கர்த்தரையே

 

2. கானானின் குடிகள் கொடியவரே

கானகபாதை கடினமாமே

கடந்து போய் நாம் அதை சுதந்தரிப்போமே

கர்த்தரே நமக்காய் யுத்தம் செய்வாரே  - கர்த்தரையே

 

3. பாகாலின் சீடர்கள் சவால் விட்டு

பதிலளியா தேவனை வேண்டுகிறார்

எலியாவின் தேவன் இறங்கி வந்தாரே

எரி நெருப்பால் இன்று பதிலளிப்பாரே  - கர்த்தரையே

 

4. உனக்கெதிராக ஆக்கிடுமாயுதம்

ஒருக்காலும் வாய்க்காமல் மறைந்திடுமே

உன் மேல் ஓர் யுத்தம் எழும்பினாலும்

உன்னை இரட்சிக்கும் தேவன் உண்டு   - கர்த்தரையே

 

5. யாக்கோபின் கூட்டமே பயப்படாதே

ஈசாக்கின் தேவன் உன் துணையே

அன்னை தன் சேயை மறந்தாலுமே

ஆண்டவர் இயேசு அரவணைப்பாரே    - கர்த்தரையே

 

6. சீயோனே உந்தன்  பாடுகளெல்லாம்

சில காலம் என்று நினைத்தே பாடு

சீக்கிரம் வருவார் சேர்த்திட உன்னை

பாக்கிய மடைவாய் பரலோக வாழ்வில்   - கர்த்தரையே

Vilaintha Palanai Arupparillai விளைந்த பலனை அறுப்பாரில்லை


 Vilaintha Palanai Arupparillai

விளைந்த பலனை அறுப்பாரில்லை

விளைவின் நற்பலன் வாடிடுதே

அறுவடை மிகுதி ஆளோ இல்லை

அந்தோ மனிதர் அழிகின்றாரே


1.அவர் போல் பேசிட நாவு இல்லை

அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை

எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்

உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த


2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்

ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே

திறப்பின் வாசலில் நிற்பவர் யார்

தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த


3.ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்

ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்

விரைந்து சென்று சேவை செய்வாய்

விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த


4.ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை

சபைதனில் விளங்கிட செயல்படுவாய்

நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்

நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த


5.ஆவியின் வரங்கள் ஒன்பதனை

ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்

சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்

சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த


6.தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்

உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்

கர்த்தர் நாட்டின தோட்டத்திலே

கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த

Thursday, 22 July 2021

Inba Yesu Rajavai Naan இன்ப இயேசு ராஜாவை நான்


 

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் (2)
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு (2)
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு (2)
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

3. முட் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து (2)
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2)
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

5. ஆஹா எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ (2)
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)

Wednesday, 21 July 2021

Aruvadai Miguthi அறுவடை மிகுதி


 

அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அன்பரின் கதறல் கேட்டிடுதே

1. நானிலம் முழுவதும் நானூறு கோடி
நாசத்தின்  வழியை நாடிடுதே
இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க
எழும்பிடுவோம் நாம் வாலிபரே

2. அமைதி இல்லை நம்பிக்கை இல்லை
அழுகையும் கண்ணீர் வாழ்க்கையிலே
உறக்கமும் இல்லை முழு உணவில்லை
உணர்ந்திடுவீர் இதை வாலிபரே

3. மிருகம் போல் உழைத்தும் வறுமையின் தொல்லை
வாதையில் வாடிடும் கூட்டத்தைப் பார்
ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை
அன்பினைக் காட்டவும் யாருமில்லை

4. நம்பிக்கையற்ற கல்லறை நாடி
நாளினில் லட்சங்கள் செல்கிறதே
திறப்பினில் நிற்க ஆளில்லை என்று
திகைத்துக் கதறிடும் இயேசுவைப் பார்

5. அலறிடும் பிள்ளைகள் குரலினைக் கேட்டு
அழுவதன்றி வேறென்ன செய்வார்
யாரை அனுப்புவேன் யார் போவார் என்றார்
கதறலை என் உள்ளம் கேட்டிடாதோ

6. அன்பரே வந்தேன் அழுகையைக் கண்டேன்
அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையினை
பாரினில் கழுதையாய் சுமந்தும்மை சென்று
பாதத்தில் விடுவேன் என் ஜீவனையே

Tuesday, 20 July 2021

Devane Naan Umathandaiyil தேவனே நான் உமதண்டையில்


 

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்

சேர்வதே என் ஆவல் பூமியில்

மாவலிய கோரமாக

வன் சிலுவை மீதினில் நான்

கோவே தொங்க நேரிடினும் ஆவலாய்

உம்மண்டை சேர்வேன்

 

1. யாக்கோபைப்போல் போகும் பாதையில்

பொழுதுபட்டு இராவில் இருள் வந்து மூடிட

துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து

தூங்கினாலும் என் கனாவில்

நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன்

வாக்கடங்கா நல்ல நாதா

 

2. பரத்துக்கேறும் படிகள் போலவே என்

பாதை தோன்றப் பண்ணும் ஐயா எந்தன் தேவனே

கிருபையாக நீர் எனக்குத்

தருவதெல்லாம் உமதண்டை

அருமையாய்  என்னை யழைக்கும்

அன்பின் தூதராக செய்யும்

 

3. நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து

கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்

இத்தரையில் உந்தன் வீடாய்

என் துயர்க் கல் நாட்டுவேனே

எந்தன் துன்பத்தின் வழியாய்

இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

 

4. ஆனந்தமாம் செட்டை விரித்து

 பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும்

வான மண்டலங் கடந்து

பறந்து மேலே சென்றிடினும்

மகிழ்வுறு  காலத்திலும் நான்

மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்

Monday, 19 July 2021

En Jeba Velai Vanjippen என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்


 En Jeba Velai Vanjippen

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

அப்போதென் துக்கம் மறப்பேன்

பிதாவின் பாதம் பணிவேன்

என் ஆசையாவும் சொல்லுவேன்

என் நோவுவேளை தேற்றினார்

என் ஆத்ம பாரம் நீக்கினார்

ஒத்தாசை பெற்றுத் தேறினேன்

பிசாசை வென்று ஜெயித்தேன்


2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்

மன்றாட்டைக் கேட்போர் வருவார்

பேர் ஆசீர்வாதம் தருவார்

என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்

என் பாதம் தேடு ஊக்கமாய்

என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்

இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்


3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

ஆனந்த களிப்படைவேன்

பிஸ்காவின் மேலே ஏறுவேன்

என் மோட்ச வீட்டை நோக்குவேன்

இத்தேகத்தை விட்டேகுவேன்

விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்

பேரின்ப வீட்டில் வசிப்பேன்

வாடாத க்ரீடம் சூடுவேன்