Friday, 16 July 2021

Thothira Pathirane தோத்திர பாத்திரனே


Thothira Pathirane 

தோத்திர பாத்திரனே தேவா

தோத்திரந் துதியுமக்கே

நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்

நித்தியம் துதியுமக்கே


1. சத்துரு பயங்களின்றி  நல்ல

நித்திரை செய்ய எமை

பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே

சுற்றிலுங் கோட்டையானாய் 


2. விடிந்திருள் ஏகும்வரை  கண்ணின்

விழிகளை மூடாமல்,

துடி கொள் தாய்போல் படிமிசை எமது

துணை எனக் காத்தவனே 


3. காரிருள் அகன்றிடவே  நல்ல

கதிரொளி திகழ்ந்திடவே

பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன

பாங்கு சீராக்கி வைத்தாய்


4. இன்றைத் தினமிதிலும்  தொழில்

எந்தெந்த வகைகளிலும்

உன் திருமறைப்படி ஒழுகிட எமக்கருள்

ஊன்றியே காத்துக் கொள்வாய்

Ratha Satchi Koottam இரத்த சாட்சி கூட்டம்


 

1. இரத்த சாட்சி கூட்டம் சத்திய பாதையில்

நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்

ஜீவன் சுகம் பெலன் யாவையும்  ஈந்ததால்

சுத்த சுவிசேஷம் ஓங்குதே

 

போர் வீரரே பூமி மாளுதே

பாய்ந்து செல்லுவீர் நம் இயேசுவின் பின்னே

தேவ ராஜ்யம் ஓங்கவே பாவ மக்கள் மீளவே

தியாகப் பரிசுத்தராய் சேவை செய்குவோம்

 

2. ஜாதி மதபேதம் முற்றும் நீங்கிட

ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட

கல்வாரியில் மரித்தே உயிர்த்தெழுந்த

கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் -போர் வீரரே

 

3. நாடு நகரமோ காடு மலையோ

நாடி தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்

மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி

கண்டறிந்த சாட்சி கூறுவோம் -போர் வீரரே

 

4. தாகமோ பசியோ நோக்கிடாமலே

லோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே

முன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே

இன்னமும் முன்னேறி சேவிப்போம் -போர் வீரரே

 

5. உன்னத அழைப்பை என்றும் காத்திட

ஊக்கமாய் உறுதியாய் தகுதி பெற்றிட

ஆவியிலே அனலாய் நிலை நின்றிட

ஆண்டவர் அருள் பொழிகுவார் -போர் வீரரே

 

6. சுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்

சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்

வாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்

வல்ல விசுவாச சேவையில் -போர் வீரரே

 

7. பிரதி பலன் ஏந்தி ஏசு வருவார்

பாடுபட்ட கர்த்தரோடு நாமும் சேருவோம்

ஆதிப்பிதாக்களுடன் ரத்த சாட்சிகள்

ஆர்ப்பரித்து கூடி வாழுவோம் -போர் வீரரே

Thursday, 15 July 2021

En Idhayam Yaarukku Theriyum என் இதயம் யாருக்கு தெரியும்


 

என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும்  (2)

1. நெஞ்சின் நோவுகள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே  (2)

2. சிறகு ஒடிந்த பறவை
அது வானில் பறக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ  (2)

3. மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ (2)

4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே – (2)

என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
இயேசென்னை  தேற்றுவார் (2)

En Jeevan Kiristhu Thamae என் ஜீவன் கிறிஸ்து தாமே


 

1. என் ஜீவன் கிறிஸ்து தாமே
அதாலே எனக்கு
என் சாவாதாயமாமே
நெஞ்சே மகிழ்ந்திரு.

2. நான் இயேசு வசமாக
சேர்ந்தென்றும் வாழவே
மா சமாதானமாக
பிரிந்து போவேனே.

3. பாடற்றுப்போம் அந்நாளே
என் நோவும் முடியும்
என் மீட்பர் புண்ணியத்தாலே
மெய் வாழ்வு தொடங்கும்

4. நான் பேச்சு மூச்சில்லாமல்
குளிர்ந்துபோயினும்
என் ஆவியைத் தள்ளாமல்
உம்மண்டை சேர்த்திடும்.

5. அப்போது நான் அமர்ந்து
என் நோவை மறப்பேன்
உம் சாந்த மார்பில் சாய்ந்து
நன்கிளைப்பாறுவேன்.

6. நான் உம்மைக் கெட்டியாக
பிடித்தும்முடனே
அநந்த பூரிப்பாக
வாழட்டும் இயேசுவே.

Unnatha Salame உன்னத சாலேமே


 

1. உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்.

விண் ஸ்தானமே
கர்த்தா எந்நாள்
உம் திருத் தாள்
சேவிப்பேனே

2. பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்.

3. அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்.

4. தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
பொன் வீணை வாசிப்பவர்
இசை பாடக் கேட்பேன்.

5. சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்.

6. கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்
நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்.

Wednesday, 14 July 2021

Yarai Naan Pugaluven யாரை நான் புகழுவேன்


 

1. யாரை நான் புகழுவேன்
யாரை நான் அறிகிறேன்
என் கதியும் பங்கும் யார்
நான் பாராட்டும்மேன்மை யார்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்

2. யார் நான் நிற்கும் கன்மலை
யார் என் திட நம்பிக்கை
குற்றத்தைச் சுமந்தோர் யார்
தெய்வ நேசம் தந்தோர் யார்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்

3. என்தன் பிராண பெலன் யார்
ஆத்துமத்தின் சாரம் யார்
யாரால் பாவி நீதிமான்
யாரால் தெய்வ பிள்ளை நான்
தெய்வ ஆட்டுக்குட்டியால்

4. கஸ்தியில் சகாயர் யார்
சாவின் சாவு ஆனோர் யார்
என்னைத் தூதர் கூட்டத்தில்
சேர்ப்போர் யார் நான் சாகையில்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்

5. இயேசுதான் என் ஞானமே
அவர் என் சங்கீதமே
நீங்களும் புகழுங்கள்
அவரைப் பின்செல்லுங்கள்
தெய்வ ஆட்டுக்குட்டியை.

 

Tuesday, 13 July 2021

Alaitheerae Yesuvae அழைத்தீரே ஏசுவே


 

அழைத்தீரே ஏசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோஅழைத்தீரே

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன்அழைத்தீரே

3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன்அழைத்தீரே

4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா  சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன்அழைத்தீரே

5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும்அழைத்தீரே

6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன்அழைத்தீரே