Thursday, 15 July 2021

Unnatha Salame உன்னத சாலேமே


 

1. உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்.

விண் ஸ்தானமே
கர்த்தா எந்நாள்
உம் திருத் தாள்
சேவிப்பேனே

2. பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்.

3. அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்.

4. தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
பொன் வீணை வாசிப்பவர்
இசை பாடக் கேட்பேன்.

5. சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்.

6. கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்
நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்.

Wednesday, 14 July 2021

Yarai Naan Pugaluven யாரை நான் புகழுவேன்


 

1. யாரை நான் புகழுவேன்
யாரை நான் அறிகிறேன்
என் கதியும் பங்கும் யார்
நான் பாராட்டும்மேன்மை யார்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்

2. யார் நான் நிற்கும் கன்மலை
யார் என் திட நம்பிக்கை
குற்றத்தைச் சுமந்தோர் யார்
தெய்வ நேசம் தந்தோர் யார்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்

3. என்தன் பிராண பெலன் யார்
ஆத்துமத்தின் சாரம் யார்
யாரால் பாவி நீதிமான்
யாரால் தெய்வ பிள்ளை நான்
தெய்வ ஆட்டுக்குட்டியால்

4. கஸ்தியில் சகாயர் யார்
சாவின் சாவு ஆனோர் யார்
என்னைத் தூதர் கூட்டத்தில்
சேர்ப்போர் யார் நான் சாகையில்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்

5. இயேசுதான் என் ஞானமே
அவர் என் சங்கீதமே
நீங்களும் புகழுங்கள்
அவரைப் பின்செல்லுங்கள்
தெய்வ ஆட்டுக்குட்டியை.

 

Tuesday, 13 July 2021

Alaitheerae Yesuvae அழைத்தீரே ஏசுவே


 

அழைத்தீரே ஏசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோஅழைத்தீரே

2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன்அழைத்தீரே

3. ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் பூரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன்அழைத்தீரே

4. எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா  சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிரணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன்அழைத்தீரே

5. ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும்அழைத்தீரே

6. பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன்அழைத்தீரே

 

Monday, 12 July 2021

Nambi Vanthen Mesiya நம்பி வந்தேன் மேசியா


 Nambi Vanthen Mesiya

நம்பி வந்தேன் மேசியா

நான் நம்பிவந்தேனே – திவ்ய

சரணம்! சரணம்! சரணம் ஐயா

நான் நம்பிவந்தேனே


1. தம்பிரான் ஒருவனே

தஞ்சமே தருவனே – வரு

தவிது குமர குரு

பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்


2. நின் பாத தரிசனம்

அன்பான கரிசனம் – நித

நிதசரி தொழுவ திதம் எனவும்

உறுதியில் நம்பிவந்தேனே – நான்


3. நாதனே கிருபைகூர்

வேதனே சிறுமைதீர் – அதி

நலம் மிகும் உனதிரு

திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்


4. பாவியில் பாவியே

கோவியில் கோவியே – கன

பரிவுடன் அருள்புரி

அகல விடாதே நம்பிவந்தேனே – நான்


5. ஆதி ஓலோலமே

பாதுகா காலமே – உன

தடிமைகள் படுதுயர் அவதிகள்

மெத்த – நம்பிவந்தேனே – நான்

Sunday, 11 July 2021

Vaalvin Oliyaanaar வாழ்வின் ஒளியானார்


 Valvin Oliyanar

வாழ்வின் ஒளியானார்  

இயேசு வாழ்வின் ஒளியானார்

என்னை மீட்க இயேசு ராஜன் 

வாழ்வின் ஒளியானார் எனது  (2)  --- வாழ்வின்


1. அக்கிரமங்கள் பாவங்களால் 

நிரம்ப பெற்ற பாவியென்னை 

அன்பு கரங்கள் நீட்டியே தம் 

மார்போடணைத்தனரே (2) --- வாழ்வின் 


2. வழி தப்பி தடுமாறும் போது 

வழிகாட்டியாய் செயல்படுவார் 

வழியில் இருளாய் மாறும் போது 

வாழ்வின் ஒளியாவார் (2) --- வாழ்வின் 


3. துன்பங்கள் தொல்லை வரினும் 

இன்னல்கள் பல வந்திடினும் 

இன்னல் தீர்க்க வல்ல இயேசு 

இன்னல் அகற்றிடுவார் (2) --- வாழ்வின்

Saturday, 10 July 2021

Devan Varukindrar தேவன் வருகின்றார்


 

1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி

பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்

பூலோக மக்களும் கண்டிடுவார்

 

இயேசு கிறிஸ்து வருகின்றார்

இந்தக் கடைசி காலத்திலே

கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்

கண்டு புலம்பிடுமே

 

2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த

எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க

யேசு கிறிஸ்துவின் சத்தியத்தை

ஏற்க மறுத்தவர் நடுங்குவார்

 

3. தம்மை விரோதித்த அவபக்தரை

செம்மை வழிகளில் செல்லாதவரை

ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே

அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்

 

4. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்

எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்

கல்வாரி சிலுவை அண்டிடுவாய்

கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்

 

5. அந்தி கிறிஸ்தன்று அழிந்து மாள

அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க

வாயில் இருபுறம் கருக்குள்ள

வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்

 

6. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்

கன்மலையாகி இப்பூமி நிரப்பும்

கிரீடங்கள் பாகைகள் கவிழ்ந்திடும்

கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்

 

7. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம்

சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்

ஆவி மணவாட்டி வாரும் என்றே

ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்

 

Kartharin Varugai Nerungiduthe கர்த்தரின் வருகை நெருங்கிடுதே


 

1. கர்த்தரின் வருகை நெருங்கிடுதே

காத்திருப்போம் மனம் பூரிக்குதே

தேவ எக்காளம் விண் முழங்கிடவே

தூதர்கள் ஆயத்தமே

 

தேவ கிருபையே அவர் கிருபையே

தேவகுமாரன் வெளிப்படும் நாளிலே

கண்ணிமைப் பொழுதே மாறிடுவோமே

மேகம் மறைந்திடுவோம்

 

2. திருடனைப் போல வந்திடுவார்

தீவிரமாய் நாம் விழித்திருப்போம்

சம்பத்தைச் சேர்க்கும் நாளதில் நம்மைச்

சொந்தமாய் வந்தழைப்பார்

 

3. லோத்தின் மனைவி நினைத்திடுவோம்

லோகத்தின் ஆசைகள் வெறுத்திடுவோம்

லெளகீக பாரம் பெருந்தீனி தள்ளி

தெய்வீகமாய் ஜொலிப்போம்

 

4. ஆவியின் முத்திரை பெற்றவரே

ஆயத்தமாய்த் தவிக்கின்றனரே

புத்திர சுவிகாரம் அடைந்திடவே

பாத்திரர் ஆவோமே

 

5. நம் குடியிருப்போ பரத்திலுண்டே

நம் கிறிஸ்தேசுவும் அங்கு உண்டே

வல்லமையான தம் செயலாலே

விண் மகிமை அடைவோம்

 

6. தாமதம் வேண்டாம் வந்திடுமே

தம்திரு வாக்கு நினைத்திடுமே

இயேசுவே வாரும் ஆவலைத் தீரும்

ஏங்கி அழைக்கிறோமே