Saturday, 10 July 2021

Devan Varukindrar தேவன் வருகின்றார்


 

1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி

பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்

பூலோக மக்களும் கண்டிடுவார்

 

இயேசு கிறிஸ்து வருகின்றார்

இந்தக் கடைசி காலத்திலே

கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்

கண்டு புலம்பிடுமே

 

2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த

எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க

யேசு கிறிஸ்துவின் சத்தியத்தை

ஏற்க மறுத்தவர் நடுங்குவார்

 

3. தம்மை விரோதித்த அவபக்தரை

செம்மை வழிகளில் செல்லாதவரை

ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே

அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்

 

4. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்

எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்

கல்வாரி சிலுவை அண்டிடுவாய்

கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்

 

5. அந்தி கிறிஸ்தன்று அழிந்து மாள

அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க

வாயில் இருபுறம் கருக்குள்ள

வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்

 

6. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்

கன்மலையாகி இப்பூமி நிரப்பும்

கிரீடங்கள் பாகைகள் கவிழ்ந்திடும்

கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்

 

7. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம்

சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்

ஆவி மணவாட்டி வாரும் என்றே

ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்

 

Kartharin Varugai Nerungiduthe கர்த்தரின் வருகை நெருங்கிடுதே


 

1. கர்த்தரின் வருகை நெருங்கிடுதே

காத்திருப்போம் மனம் பூரிக்குதே

தேவ எக்காளம் விண் முழங்கிடவே

தூதர்கள் ஆயத்தமே

 

தேவ கிருபையே அவர் கிருபையே

தேவகுமாரன் வெளிப்படும் நாளிலே

கண்ணிமைப் பொழுதே மாறிடுவோமே

மேகம் மறைந்திடுவோம்

 

2. திருடனைப் போல வந்திடுவார்

தீவிரமாய் நாம் விழித்திருப்போம்

சம்பத்தைச் சேர்க்கும் நாளதில் நம்மைச்

சொந்தமாய் வந்தழைப்பார்

 

3. லோத்தின் மனைவி நினைத்திடுவோம்

லோகத்தின் ஆசைகள் வெறுத்திடுவோம்

லெளகீக பாரம் பெருந்தீனி தள்ளி

தெய்வீகமாய் ஜொலிப்போம்

 

4. ஆவியின் முத்திரை பெற்றவரே

ஆயத்தமாய்த் தவிக்கின்றனரே

புத்திர சுவிகாரம் அடைந்திடவே

பாத்திரர் ஆவோமே

 

5. நம் குடியிருப்போ பரத்திலுண்டே

நம் கிறிஸ்தேசுவும் அங்கு உண்டே

வல்லமையான தம் செயலாலே

விண் மகிமை அடைவோம்

 

6. தாமதம் வேண்டாம் வந்திடுமே

தம்திரு வாக்கு நினைத்திடுமே

இயேசுவே வாரும் ஆவலைத் தீரும்

ஏங்கி அழைக்கிறோமே 

Thursday, 8 July 2021

Indru Kanda Egipthiyanai இன்று கண்ட எகிப்தியனை

 

Indru Kanda Egipthiyanai 
இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை 

இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை 

1. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் 
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் 

2. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் 
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் 

3. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார்
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் 

4. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் 
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்

Wednesday, 7 July 2021

En Thedal Neer என் தேடல் நீர்


 
என் தேடல் நீர் என் தெய்வமே
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உன்னை மனம் தேடுதே நீ வழி காட்டுமே

இறைவா இறைவா ருவாய் இங்கே
இதம் அருகில் அமர்வாய் இன்றே

1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் ணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் ந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
றைவாழ்விலே நிலையாகுவேன்
ழிதேடும் எனைக் காக்கநீ வேண்டுமே

2. உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
லியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
ழிதேடும் எனைகாக்கநீ வேண்டுமே


Tuesday, 6 July 2021

Kattu Puravin Satham காட்டு புறாவின் சத்தம்


 

காட்டுப் புறாவின் சத்தம் கேட்கிறதே

என் நேசர் என்னைத் தேடி வருவாரென்று

கானக்குயிலின் கானம்  இசைக்கின்றதே

மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று                    

      

உம் வருகைவரை நான் காத்திருப்பேன்

என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2

 

1. தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே

தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றீரே

நீர் எந்தன் நேசர் தானே

நீர் எந்தன் நண்பர்தானே

என்றென்றும் உந்தன் அன்பை

என்னவென்று நான் சொல்லுவேன் -----உம்வருகை

                             

2. கனவெல்லாம் என்றும் உம்மையே காண்கிறேன்

நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே

நீரின்றி நானும் இல்லை

நீர்தானே  எந்தன் எல்லை

என்றென்றும் எந்தன் நாவால்

உம்மையே பாடிடுவேன் -----உம்வருகை

                      

3. பூரண அழகு உள்ளவரும் நீர்தானே

 உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே

நீர் எந்தன் ஜீவன்தானே

நான் உந்தன் சாயல்தானே

என்றென்றும் எந்தன் மூச்சு

உந்தன் பெயர் சொல்லிடுதே -----உம் வருகைவரை

Monday, 5 July 2021

Thunbam Unnai துன்பம் உன்னை


 

1. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்

இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்

எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்

கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்


எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்

கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்

ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்

கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்


2. கவலைச் சுமை நீ சுமக்கும் போது

சிலுவை உனக்கு பளுவாகும் போதும்

எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்

கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்எண்ணி


3. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது

மீட்பர் தரும் நன்மை யாவும் எண்ணிப்பார்

பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்

பரலோக பொக்கிஷமும் வீடும் பார்எண்ணி


4. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்

அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்

அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்

தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்எண்ணி


Sunday, 4 July 2021

Yesu Meetpar Unthan இயேசு மீட்பருந்தன்


1. இயேசு மீட்பருந்தன் நெஞ்சில்

 வாசம் பண்ணவிடாயோ

உந்தன் பாவம் சுமந்தோரை

இன்று ஏற்றுக் கொள்ளாயோ

 

இயேசு மகாராஜர் இதோ

வாசலண்டை நிற்கிறார்

பாவி நீ இவ்வன்பை எண்ணி

 வாசலைத் திறக்கப் பார்

 

2. பாவம் லோகம் ஆசாபாசம்

 யாவும் இடம் பெற்றதோ

 நீசச் சிலுவையில் மாண்ட

நேசர்க் கிடமில்லையோ


3. இன்னுமே நீ தாமதித்தால்

 பின்பு மோசம் வருமே

  இப்போதே இரட்சண்ய காலம்

 அப்பால் பிந்திப் போகுமே


4. கூவி நிற்கும் மீட்பர் சத்தம்

பாவி கேட்டுத் திறப்பாய்

 உந்தன் ஜீவன் பெலன் யாவும்

இன்றே தத்தம் செய்குவாய் 


5. நாளை என்று சொல்லி நின்றால்

நஷ்டம் என்றும் அடைவாய்

வேளை இதை வீணாய் விட்டால்

வெகு கஷ்டப் படுவாய்


6. யோவான் மூன்று பதினாறை

வேகமாய் விஸ் வாசியே

தாக முள்ளோரை அழைக்கிறார்

பாகப் பணமின்றியே


7. அல்லேலூயா கீதம் பாட

வல்ல நாதரண்டை வா

தள்ளியே தாமதம் செய்யார்

நல்ல இயேசு நாதரே