Monday, 5 July 2021

Thunbam Unnai துன்பம் உன்னை


 

1. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்

இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்

எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்

கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்


எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்

கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்

ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்

கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்


2. கவலைச் சுமை நீ சுமக்கும் போது

சிலுவை உனக்கு பளுவாகும் போதும்

எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்

கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்எண்ணி


3. நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது

மீட்பர் தரும் நன்மை யாவும் எண்ணிப்பார்

பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்

பரலோக பொக்கிஷமும் வீடும் பார்எண்ணி


4. அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்

அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்

அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்

தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்எண்ணி


Sunday, 4 July 2021

Yesu Meetpar Unthan இயேசு மீட்பருந்தன்


1. இயேசு மீட்பருந்தன் நெஞ்சில்

 வாசம் பண்ணவிடாயோ

உந்தன் பாவம் சுமந்தோரை

இன்று ஏற்றுக் கொள்ளாயோ

 

இயேசு மகாராஜர் இதோ

வாசலண்டை நிற்கிறார்

பாவி நீ இவ்வன்பை எண்ணி

 வாசலைத் திறக்கப் பார்

 

2. பாவம் லோகம் ஆசாபாசம்

 யாவும் இடம் பெற்றதோ

 நீசச் சிலுவையில் மாண்ட

நேசர்க் கிடமில்லையோ


3. இன்னுமே நீ தாமதித்தால்

 பின்பு மோசம் வருமே

  இப்போதே இரட்சண்ய காலம்

 அப்பால் பிந்திப் போகுமே


4. கூவி நிற்கும் மீட்பர் சத்தம்

பாவி கேட்டுத் திறப்பாய்

 உந்தன் ஜீவன் பெலன் யாவும்

இன்றே தத்தம் செய்குவாய் 


5. நாளை என்று சொல்லி நின்றால்

நஷ்டம் என்றும் அடைவாய்

வேளை இதை வீணாய் விட்டால்

வெகு கஷ்டப் படுவாய்


6. யோவான் மூன்று பதினாறை

வேகமாய் விஸ் வாசியே

தாக முள்ளோரை அழைக்கிறார்

பாகப் பணமின்றியே


7. அல்லேலூயா கீதம் பாட

வல்ல நாதரண்டை வா

தள்ளியே தாமதம் செய்யார்

நல்ல இயேசு நாதரே


Saturday, 3 July 2021

Sthothiram Yesu Natha ஸ்தோத்திரம் இயேசு நாதா


Sthothiram Yesu Natha
1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்

2. வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்

5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே

6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே

Friday, 2 July 2021

Antho Kalvariyil அந்தோ கல்வாரியில்


 Antho Kalvariyil Arumai அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்கினார் (2) மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே மாயலோகத்தோ டழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க பல நிந்தைகள் சுமந்தாலுமே பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும் குருதி வடிந்தவர் தொங்கினார் வருந்தி மடிவோரையும் மீட்டிடவே அதிசயம் இது இயேசுவின் நாமம் அதிலும் இன்பம் அன்பரின் சிநேகம் அதை எண்ணியே நிதம் வாழுவேன் அவர் பாதையை நான் தொடர்ந்திடவே சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்

Thursday, 1 July 2021

Deva Devan Balakanai தேவ தேவன் பாலகனாய்


Deva Devan Balakanai 1.தேவ தேவன் பாலகனாய் தேவ லோகம் துறந்தவராய் மானிடரின் சாபம் நீங்க மா நிலத்தில் அவதரித்தார் அல்லேலூயா அல்லேலூயா அற்புத பாலகன் இயேசுவுக்கே 2. பரம சேனை இரவில் தோன்றி பாரில் பாடி மகிழ்ந்திடவே ஆ நிரையின் குடில் சிறக்க ஆதவனாய் உதித்தனரே --- அல்லேலூயா 3. ஆயர் மனது அதிசயிக்க பேயின் உள்ளம் நடுநடுங்க தாயினும் மேல் அன்புள்ளவராய் தயாபரன் தான் அவதரித்தார் --- அல்லேலூயா 4. லோகப்பாவம் சுமப்பதற்காய் தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே வேதம் நிறை வேற்றுதற்கோ ஆதியாக அவதரித்தார் --- அல்லேலூயா 5. தாரகையாய் விளங்கிடவோ பாரில் என்னை நடத்திடவோ ஆருமில்லா என்னைத் தேடி அண்ணலே நீர் ஆதரித்தீர் --- அல்லேலூயா

Kalvari Anbai கல்வாரி அன்பை


 Kalvari Anbai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே 1. கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே -- கல்வாரி 2. சிலுவையில் வாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போது அவர்க்காய் வேண்டினீரோ அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே -- கல்வாரி 3. எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம் தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

Kalvariyin Karunaiyithe கல்வாரியின் கருணையிதே


 Kalvariyin Karunaiyithe 1. கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே 2. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே 3. சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே 4. எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர் தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன் 5. மனுஷனை நீர் நினைக்கவும் அவனை விசாரிக்கவும் மண்ணில் அவன் எம்மாத்திரம் மன்னவா உம் தயவே