Thursday, 1 July 2021
Kalvariyin Karunaiyithe கல்வாரியின் கருணையிதே
Kalvariyin Karunaiyithe 1. கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே 2. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே 3. சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே 4. எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர் தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன் 5. மனுஷனை நீர் நினைக்கவும் அவனை விசாரிக்கவும் மண்ணில் அவன் எம்மாத்திரம் மன்னவா உம் தயவே
Sunday, 27 June 2021
Yesu Nesikkirar இயேசு நேசிக்கிறார்
இயேசு
நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ
1.
நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் — இயேசு
2. பரம
தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவில லாச்சரியம் — இயேசு
3. நாதனை
மறந்து நாட்கழித் துலைந்தும்
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்த மாச்சரியம் — இயேசு
4. ஆசை
இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்
அதை நினைந்தவ ரன்பின் கரத்துளே
ஆவலாய்ப் பறப்பேன் — இயேசு
5. இராஜன்
யேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்
ஈசன் யேசெனைத் தானே சித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன் — இயேசு
Friday, 25 June 2021
Jeeva Kiristhu uyirthelunthar ஜீவகிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
Jeeva Kiristhu uyirthelunthar 1. ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் தேவ குமாரன் மரித்தெழுந்தார் பாவங்கள் போக்க பாவியை மீட்க பலியான இயேசு உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா கல்லறைக் காட்சி அற்புத சாட்சியே ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் (2) 2. பாதாளம் யாவும் மேற்கொண்டவர் வேதாள கூட்டம் நடுங்கிடவே அன்றதிகாலை மா இருள் வேளை மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார் 3. நாம் தொழும் தேவன் உயிருள்ளவர் நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே சாவை ஜெயித்து சாட்சி அளித்து சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் 4 பூரிப்புடன் நாம் பாடிடுவோம் பூலோக மெங்கும் சாற்றிடுவோம் என் மன ஜோதி தம் அருள் ஆவி என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார் 5. நல் விசுவாசம் தந்திடுவார் நம்பிடுவோரை எழுப்பிடுவார் எக்காள சத்தம் கேட்டிட நாமும் ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே
Thursday, 24 June 2021
Vaarungal Iniya Irai Makkale வாருங்கள் இனிய இறை மக்களே
வாருங்கள்
இனிய இறை மக்களே
இறைவனை
வழிபட இறை இல்லத்தில்
இணைந்தே
பணிவோம் நிறை மனதாய்
பரிசுத்த
அலங்காரத்துடனே நாம்
1.
கறையில்லா நெஞ்சம் இறை இல்லம்
இணையில்லா
பலியும் இதுவன்றோ
பழுதற்ற
பலியாய் நம்மையே
படைத்தே
பணிவோம் இணைந்தின்றே
2.
களங்கம் இல்லா ஞானப்பாலே
கறை
கறை இன்றி வளர வழி
பருகுவோம்
வளருவோம் ஒரேசத்தில்
சுமப்போம்
சுமக்கும் அது நம்மை
ஒளிருவோம்
முறையாய் இது நன்று
இருளில்லை
இங்கு என்றாக
திருமறை
தெய்வமாய் ஒளிர்ந்திடுவோம்
4.
படைப்போம் படைப்பின் கோனிக்கென்று
படைப்பின்
மேன்மையை பாங்குடனே
பலர்காய்
கனிகள் தானியத்தை
மகிழ்வுடன்
படைப்போம் மங்களமாய்
5.
சிலுவையை சுமப்போம் திருச்சபையே
இருப்போம்
சிலுவையின் நிழல்தனிலே
இனியில்லை
தீங்கு என்றாக
இடமில்லா
ஆசிக்கு சொந்தமாக
Tuesday, 22 June 2021
Theivathin sannithaanam தெய்வத்தின் சந்நிதானம்
Deivathin Sanithaanam தெய்வத்தின் சந்நிதானம் என் உள்ளத்தின் ஆனந்தமே காருண்யமாம் அவர் சப்தம் என் காதுகளுக்கின்பமே 1. தளர்ந்த மனம் புதிதாக்கும் நல்லன்பு தகர்ந்த ஆன்மாவிற்கு சாந்தி தரும் அவர் தரும் வாக்குத்தத்தங்கள் உன்னை அனுதினம் வழி நடத்தும் 2. உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமே நோக்கிடு கல்வாரி நாயகனை இயேசுவின் பாதத்தில் வந்திடுவாய் ஆறுதல் கண்டடைவாய்
Sunday, 20 June 2021
Thanthaen Ennai Yesuvae தந்தேன் என்னை இயேசுவே
Thanthaen Ennai Yesuvae தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமே உமக்கே உந்தனுக்கே ஊழியஞ் செய்யத் தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன் 1. ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் பூவில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன் 2. உலகோர் என்னை நெருக்கிப் பலமாய் யுத்தம் செய்திடினும் நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன் 3. உந்தன் சித்தம் நான் செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் எந்த இடம் எனக்குக் காட்டினும் இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன் 4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும் துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும் அஷ்டதிக்கும் ஆளும் தேவனே அடியேன் உம்மில் அமரச் செய்யும் — தந்தேன் 5. ஒன்றுமில்லை நான் ஐயா உம்மாலன்றி ஒன்றும் செய்யேன் அன்று சீஷர்க்களித்த ஆவியால் இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்
Saturday, 19 June 2021
Vanthiduveer Deva Vallamaiyaai வந்திடுவீர் தேவா வல்லமையாய்
Vanthiduveer Deva Vallamaiyaai
1. வந்திடுவீர் தேவா வல்லமையாய்
தந்திடும் எழுப்புதல் ஆவியினால்
சிந்தையில் மெல்கிசேதேக் முறைமை(2)
சந்ததம் நிலைத்திட அருள் புரிவீர் (2)
ஊற்றிடுவீர் தேவ அன்பினையே
சுத்தர் உள்ளம் உயிர்த்திடவே
எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால் (2)
2. ஜீவனின் முடிவில்லாதவரே
தேவ குமாரனைப் போன்றவரே
சோதனையில் அழியாதெம்மையே (2)
சோர்ந்திடாதே நிலைக்க வருவீர் (2) – ஊற்றிடுவீர்
3.தந்தையும் தாயும் சகோதரரும்
சந்ததி எதுமில்லாதவர் நீர்
எந்தையே உம்மைப்போல் மாற்றிடவே (2)
ஈந்திடும் மெல்கிசேதேக் இகத்தில் (2) – ஊற்றிடுவீர்
4.தேவ குமாரனும் பாடுகளால்
ஜீவனை ஊற்றி கீழ்படிந்ததினால்
தாரணியில் அவர் போல் நிலைக்க (2)
தந்திடும் மெல்கிசேதேக் முறைமை (2) – ஊற்றிடுவீர்
5.நித்திய மான ஆசாரியரே
சத்திய வெளிப்படுத்துதல் நிறைவாய்
பெற்று நாம் நித்திய ஆசாரியராய் (2)
கர்த்தனாம் இயேசுவுடன் நிலைக்க (2) – ஊற்றிடுவீர்