Wednesday, 9 June 2021
Oppuvithen Iyane ஒப்புவித்தேன் ஐயனே
Oppuvithen Iyane ஒப்புவித்தேன் ஐயனே உம்சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர்ப்பணித்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே 1. சுட்டெரிக்கும் அக்கினியால் சுத்திகரித்தெம்மை மாற்றிடுமே ஆவி ஆத்மா சரீரமே ஆத்தும நேசரே படைக்கிறேன் 2. கண்ணீர் கவலை பெருகுதே கர்த்தர் தம் வாக்காலே தேற்றிடுமே உலக சிநேகம் பின்னே வைத்தே உறுதியாய் பின் சென்றிட 3. அத்திமரம் துளிர் விடாமல் ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும் கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா தூய கிருபை தந்தருளும் 4. எந்தனின் சிந்தை முன்னறிவீர் எந்தனின் பாதை நீரறிவீர் நல்ல பாதை நடந்திட நாதனே என்னையும் அர்ப்பணித்தேன் 5. காடு மலைகள் போன்ற இடம் கண்டு என்றும் அஞ்சிடாமல் அழியும் ஆத்ம தரிசனம் ஆண்டவா என்னிலே ஈந்தருளும் 6. சோதனை எம்மை சூழ்ந்திடினும் சோர்ந்திடா உள்ளம் தந்தருளும் ஜீவகிரீடம் முன்னே வைத்தே ஜீவிய காலம் நடந்திட
Tuesday, 8 June 2021
Karthaave Nangal கர்த்தாவே நாங்கள்
Karthaave Nangal
1. கர்த்தாவே நாங்கள் நெஞ்சத்தில்
மெய்ஞ் ஞானமற்ற மாந்தர்
நீர் புத்தியைத் தராவிடில்
எப்போதும் புத்தியீனர்
உம்மால் உண்டான வேதமும்
நீர் ஈயும் தூய ஆவியும்
நற்பாதை காட்டவேண்டும்.
2. வேதத்துக்காக ஸ்தோத்திரம்
உமக்குண்டாவதாக
தெய்வீக வார்த்தையைத் தினம்
எல்லாரும் பக்தியாக
ஆராய்ந்து பார்த்துச் சிந்தித்து
கைக்கொள்ள நீர் கடாட்சித்து
நல்லாவியை அளியும்.
3. பிதாவே எங்கும் உமது
நல் வார்த்தை செல்வதாக
ஆ யேசுவே நீர் காட்டிய
வழியில் போவோமாக
தேவாவி எங்கள் உள்ளத்தில்
இறங்கி வேதத்தால் அதில்
நற்சீர் அளிப்பீராக
Monday, 7 June 2021
Yesu En Asthiparam இயேசு என் அஸ்திபாரம்
Yesu En Asthiparam
இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன்யானும்
1. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே
2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம்யேசு இருக்கையில்
3. பாவத்தால் என்னில் வந்த சாபக்கறைகள் மாற்றி
சோபித நீதியுடை ஆபரணமாய் ஈவார்
Sunday, 6 June 2021
Deva Sitham Niraivera தேவ சித்தம் நிறைவேற
Deva Sitham Niraivera
தேவ சித்தம் நிறைவேற
எனையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம்
பலமாக தொனிக்குதே
1. முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்
2. பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேனென்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலனளிப்பார்
3. அத்திமரம் துளிர் விடாமல்
ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்
கர்த்தருக்குள் சந்தோஷமாய்
நித்தமும் மகிழ்ந்திடுவேன்
4. நீதிமானை அனுதினமும்
சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
கர்த்தர் அன்பை விட்டு நீங்கா
சுத்தனாய் நிலைத்திருப்பேன்
5. முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்
6. சோதனையை சகிப்பவனே
சாந்தமும் பொறுமையுமுள்ளவனே
ஜீவ கிரீடம் பெற்றிடுவான்
ஜோதியாய் பிரகாசிப்பான்
7. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார்
Saturday, 5 June 2021
Irangume En Yesuve இரங்குமே என் இயேசுவே
Irangume En Yesuve
இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐஸ்வரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே
1.நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே – அன்பின்
பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங்கேளுமே -- இரங்குமே
2. உற்றார் பெற்றாரும் குடும்பங்களும்
மற்றும் பலர் மாள்வதைக்
கண்டு சகித்திடா தென்றும் ஜெபித்திடும்
கண்ணீர் ஜெபம் கேளுமே -- இரங்குமே
3. அன்று நினிவே அழிவைக் கண்டே
அன்பே இரங்கினீரே – யோனா
உரைத்த தம் ஆலோசனை தந்து
ஏழை ஜெபங்கேளுமே -- இரங்குமே
4. எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங்கேளுமே -- இரங்குமே
5. சோதனையினின்று இரட்சித்தீரே
சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
ஆதி ஜெபங்கேளுமே -- இரங்குமே
6. ஐந்து கண்டத்தின் ஜனத்திற்காக
ஐங்காயங்கள் ஏற்றீரே
தேவன் இல்லை என்று கூறி மடிவோரைத்
தேடும் ஜெபங் கேளுமே -- இரங்குமே
7. பிள்ளைகள் அப்பம் கிடைத்திடாதோ
பேதைகள் கேட்டிடவே
மேஜை துணிக்கைகள் தாரும் எனக் கெஞ்சும்
மாந்தர் ஜெபங் கேளுமே -- இரங்குமே
8. தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
பக்தர் ஜெபங்கேளுமே -- இரங்குமே
En Devane En Anbane என் தேவனே என் அன்பனே
En Devane En Anbane
என் தேவனே என் அன்பனே
வந்திடுவீர் வல்லமையாய்
ஆசீர்வாத நிறைவுடன்
அன்பே என்மேல் இறங்கிடும்
1. இரண்டோ மூன்றோ பேர்கள் எங்கே
உண்டோ அங்கே நானிருப்பேன்
என்றுரைத்த வாக்குப்படி
இன்று எம்மை சந்தித்திடும் - என்
2. கல்வாரியில் ஜீவன் தந்த
எங்கள் தேவா யேசு நாதா
எங்களுள்ளம் உந்தனன்பால்
நிறைந்தும்மைத் துதித்திட - என்
3. அந்தோ ஜனம் பாவங்களால்
நொந்து மனம் வாடுதையோ
இன்ப முகம் கண்டால் போதும்
இருள் நீங்கி ஒளி காண்பாய் - என்
4. ஆதரவாய் அன்றும் கரம்
நீட்டி சுகம் ஈந்த தேவா
ஆவலுடன் வந்தோர் பிணி
யாவும் தீரும் அருள் நாதா - என்
5. ஆதி அன்பால் தேவ ஜனம்
தாவி மனம் மகிழ்ந்திட
ஆவி ஆத்மா சரீரமும்
பரிசுத்தம் அடைந்திட - என்
6. ஆவலுடன் உம் வரவை
எதிர் நோக்கிக் காத்திருக்க
ஆவிவரம் யாவும் பெற்று
நிறைவுடன் இலங்கிட - என்
Wednesday, 2 June 2021
Puthiya Kirubai Alithidumae புதிய கிருபை அளித்திடுமே
Puthiya Kirubai Alithidumae புதிய கிருபை அளித்திடுமே அனுதின ஜீவியத்தில் கிருபை மேல் கிருபை அருளிச்செய்து கிருபையில் பூரணமாகச் செய்யும் 1. ஆத்துமமே என் முழு உள்ளமே ஆண்டவரை நீ ஸ்தோத்தரிப்பாய் தினம் அதிகாலையில் புது கிருபை அளித்து நீர் வழி நடத்தும் - புதிய 2. கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்த கிருபையின் பாத்திரமாக்கிடுமே கிருபையினால் உள்ளம் ஸ்திரப்படவே கிருபைகள் ஈந்திடுமே - புதிய 3. சோதனை வியாதி நேரங்களில் தாங்கிட உமது கிருபை தாரும் கிருபையில் என்றும் பெலனடைந்து கிறிஸ்துவில் வளரச் செய்யும் - புதிய 4. சோர்ந்திடாமல் நல் சேவை செய்ய கிருபையின் ஆவியை ஊற்றிடுமே நல்ல போராட்டத்தைப் போராட கிருபைகள் அளித்திடுமே - புதிய 5. பக்தியோடு நம் தேவனையே பயத்துடனே நிதம் தொழுதிடுவோம் அசைவில்லா ராஜ்ஜியம் அடைந்திடவே கிருபையைக் காத்துக் கொள்வோம் - புதிய
Subscribe to:
Posts (Atom)