Yesu En Asthiparam
இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன்யானும்
1. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே
2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம்யேசு இருக்கையில்
3. பாவத்தால் என்னில் வந்த சாபக்கறைகள் மாற்றி
சோபித நீதியுடை ஆபரணமாய் ஈவார்
En Devane En Anbane
என் தேவனே என் அன்பனே
வந்திடுவீர் வல்லமையாய்
ஆசீர்வாத நிறைவுடன்
அன்பே என்மேல் இறங்கிடும்
1. இரண்டோ மூன்றோ பேர்கள் எங்கே
உண்டோ அங்கே நானிருப்பேன்
என்றுரைத்த வாக்குப்படி
இன்று எம்மை சந்தித்திடும் - என்
2. கல்வாரியில் ஜீவன் தந்த
எங்கள் தேவா யேசு நாதா
எங்களுள்ளம் உந்தனன்பால்
நிறைந்தும்மைத் துதித்திட - என்
3. அந்தோ ஜனம் பாவங்களால்
நொந்து மனம் வாடுதையோ
இன்ப முகம் கண்டால் போதும்
இருள் நீங்கி ஒளி காண்பாய் - என்
4. ஆதரவாய் அன்றும் கரம்
நீட்டி சுகம் ஈந்த தேவா
ஆவலுடன் வந்தோர் பிணி
யாவும் தீரும் அருள் நாதா - என்
5. ஆதி அன்பால் தேவ ஜனம்
தாவி மனம் மகிழ்ந்திட
ஆவி ஆத்மா சரீரமும்
பரிசுத்தம் அடைந்திட - என்
6. ஆவலுடன் உம் வரவை
எதிர் நோக்கிக் காத்திருக்க
ஆவிவரம் யாவும் பெற்று
நிறைவுடன் இலங்கிட - என்
Puthiya Kirubai Alithidumae
புதிய கிருபை அளித்திடுமே
அனுதின ஜீவியத்தில்
கிருபை மேல் கிருபை அருளிச்செய்து
கிருபையில் பூரணமாகச் செய்யும்
1. ஆத்துமமே என் முழு உள்ளமே
ஆண்டவரை நீ ஸ்தோத்தரிப்பாய்
தினம் அதிகாலையில் புது கிருபை
அளித்து நீர் வழி நடத்தும் - புதிய
2. கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்த
கிருபையின் பாத்திரமாக்கிடுமே
கிருபையினால் உள்ளம் ஸ்திரப்படவே
கிருபைகள் ஈந்திடுமே - புதிய
3. சோதனை வியாதி நேரங்களில்
தாங்கிட உமது கிருபை தாரும்
கிருபையில் என்றும் பெலனடைந்து
கிறிஸ்துவில் வளரச் செய்யும் - புதிய
4. சோர்ந்திடாமல் நல் சேவை செய்ய
கிருபையின் ஆவியை ஊற்றிடுமே
நல்ல போராட்டத்தைப் போராட
கிருபைகள் அளித்திடுமே - புதிய
5. பக்தியோடு நம் தேவனையே
பயத்துடனே நிதம் தொழுதிடுவோம்
அசைவில்லா ராஜ்ஜியம் அடைந்திடவே
கிருபையைக் காத்துக் கொள்வோம் - புதிய
Thooya Aaviyaanavar Irangum
1. தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்
பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்
தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்
2. பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகலவில்லை எனவே நீரே இறங்கும் -- பரிசுத்த
3. ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும்
தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் -- பரிசுத்த
4. ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே நீரே இறங்கும் -- பரிசுத்த