Saturday, 5 June 2021

En Devane En Anbane என் தேவனே என் அன்பனே

 

En Devane En Anbane என் தேவனே என் அன்பனே வந்திடுவீர் வல்லமையாய் ஆசீர்வாத நிறைவுடன் அன்பே என்மேல் இறங்கிடும் 1. இரண்டோ மூன்றோ பேர்கள் எங்கே உண்டோ அங்கே நானிருப்பேன் என்றுரைத்த வாக்குப்படி இன்று எம்மை சந்தித்திடும் - என் 2. கல்வாரியில் ஜீவன் தந்த எங்கள் தேவா யேசு நாதா எங்களுள்ளம் உந்தனன்பால் நிறைந்தும்மைத் துதித்திட - என் 3. அந்தோ ஜனம் பாவங்களால் நொந்து மனம் வாடுதையோ இன்ப முகம் கண்டால் போதும் இருள் நீங்கி ஒளி காண்பாய் - என் 4. ஆதரவாய் அன்றும் கரம் நீட்டி சுகம் ஈந்த தேவா ஆவலுடன் வந்தோர் பிணி யாவும் தீரும் அருள் நாதா - என் 5. ஆதி அன்பால் தேவ ஜனம் தாவி மனம் மகிழ்ந்திட ஆவி ஆத்மா சரீரமும் பரிசுத்தம் அடைந்திட - என் 6. ஆவலுடன் உம் வரவை எதிர் நோக்கிக் காத்திருக்க ஆவிவரம் யாவும் பெற்று நிறைவுடன் இலங்கிட - என்

Wednesday, 2 June 2021

Puthiya Kirubai Alithidumae புதிய கிருபை அளித்திடுமே


 Puthiya Kirubai Alithidumae புதிய கிருபை அளித்திடுமே அனுதின ஜீவியத்தில் கிருபை மேல் கிருபை அருளிச்செய்து கிருபையில் பூரணமாகச் செய்யும் 1. ஆத்துமமே என் முழு உள்ளமே ஆண்டவரை நீ ஸ்தோத்தரிப்பாய் தினம் அதிகாலையில் புது கிருபை அளித்து நீர் வழி நடத்தும் - புதிய 2. கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்த கிருபையின் பாத்திரமாக்கிடுமே கிருபையினால் உள்ளம் ஸ்திரப்படவே கிருபைகள் ஈந்திடுமே - புதிய 3. சோதனை வியாதி நேரங்களில் தாங்கிட உமது கிருபை தாரும் கிருபையில் என்றும் பெலனடைந்து கிறிஸ்துவில் வளரச் செய்யும் - புதிய 4. சோர்ந்திடாமல் நல் சேவை செய்ய கிருபையின் ஆவியை ஊற்றிடுமே நல்ல போராட்டத்தைப் போராட கிருபைகள் அளித்திடுமே - புதிய 5. பக்தியோடு நம் தேவனையே பயத்துடனே நிதம் தொழுதிடுவோம் அசைவில்லா ராஜ்ஜியம் அடைந்திடவே கிருபையைக் காத்துக் கொள்வோம் - புதிய

Thooya Aaviyaanavar Irangum தூய ஆவியானவர் இறங்கும்


 Thooya Aaviyaanavar Irangum 1. தூய ஆவியானவர் இறங்கும் துரிதமாக வந்திறங்கும் தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும் பரிசுத்த பிதாவே இறங்கும் இயேசுவின் மூலம் இறங்கும் தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும் 2. பல பல வருடங்கள் கழிந்தும் பாரினில் இன்னும் இருளும் அகலவில்லை எனவே நீரே இறங்கும் -- பரிசுத்த 3. ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும் கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும் தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் -- பரிசுத்த 4. ஐந்து கண்டம் வாழும் மனிதர் ஐந்து காயம் காண இறங்கும் பாடுபட்ட நாதரே நீரே இறங்கும் -- பரிசுத்த

Tuesday, 1 June 2021

Uthamamaai Mun sella உத்தமமாய் முன் செல்ல


 Uthamamaai Mun sella
உத்தமமாய் முன் செல்ல
உதவி செய்யும் யேகோவா
ஊக்கமதை கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் 

1. பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும் --- உத்தமமாய்

2. தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க
வழி வகுத்தருள வேண்டும் --- உத்தமமாய்

3. இவ்வுலக மாயாபுரி
அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் ராஜாவாக
வருவது அதி நிச்சயம் --- உத்தமமாய்

4. தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே --- உத்தமமாய்

Friday, 28 May 2021

Inba Geetham Thunba Neram இன்ப கீதம் துன்ப நேரம்


Inba Geetham Thunba Neram
இன்ப கீதம் துன்ப நேரம்
ஈந்தீரே என் இயேசுவே
கொல்கதா பாதை சிலுவை சுமந்தே
கர்த்தாவே உம்மண்டை வந்தேன்

1. பெரு வெள்ளத்தின் புகலிடம் நீரே
பெரும் கன்மலை நிழலே
வீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே
வற்றாத நீரூற்றும் நீரே – இன்ப

2. ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்
ஊக்கமுடன் என்னைத் தேடி
கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி
கண்ணின் மணிபோலக் காத்தீர் – இன்ப

3. துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தும்
கஷ்டம் வராது என்னைக் காத்தீர்
மந்தையின் மேய்ப்பன் தாவீதின் தேவன்
எந்தை என் தந்தையும் நீரே – இன்ப

4. போராட்டமான போன வாழ்நாளில்
நீரோட்டம் மோதும் இன்னலில்
முற்று முடிய வெற்றி அளித்தீர்
குற்றம் குறை நீக்கி காத்தீர் – இன்ப

5. உந்தன் சரீர பெலவீன நேரம்
எந்தன் கிருபையே போதும்
என்று உரைத்து என்னை அணைத்து
எத்தனையோ நன்மை செய்தீர் – இன்ப

6. கல்வாரிப் பாதை தோல்வியில்லையே
கர்த்தாவே முன்னோடி நீரே
உம்பின் நடந்தே உம்மைத் தொடர்ந்தே
உன்னத வீட்டை அடைவேன் – இன்ப

7. அழைத்தவரே உண்மையுள்ளோரே
அப்படியே ஜெயம் ஈவார்
இயேசுவே உம்மால் ஜெயம் அருளும்
எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம் – இன்ப

Friday, 21 May 2021

En Nesar Yesuvin என் நேசர் இயேசுவின்


  En Nesar Yesuvin என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன் 1. லீலி பு ஷ் பம் சரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூய பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா 2. கன்னியர்கள் நேசிக்கும் தேவா கர்த்தரின் நாமம் பரிமளமே இயேசுவின் பின்னே ஓடி வந்தோம் என்னையும் இழுத்துக் கொண்டார் 3. நேசக்கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தரின் ஆறுதலே 4. தென்றலே வா வாடையே எழும்பு தூதாயீம் நற்கனி தூயருக்கே வேலி அடைத்த தோட்டமிதே வந்திங்கு உலாவுகின்றார் 5. நாட்டினிலே பூங்கனி காலம் காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும் கன்மலை சிகரம் என் மறைவே இந்நேரமே அழைத்தார் 6. நித்திரையே செய்திடும் ராவில் நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே என் கதவருகே நின்றழைத்த இயேசுவை நேசிக்கிறேன் 7. நேசத் தழல் இயேசுவின் அன்பே நேசம் மரணம் போல் வலிதே வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால் உள்ளம் அணைந்திடாதே 8. தூய ஸ்தம்பம் போலவே எழும்பி தேவ குமாரன் வந்திடுவார் அம்மினதாபின் இரதம் போல அன்று பறந்து செல்வேன்

Wednesday, 19 May 2021

Akkini Abishegam அக்கினி அபிஷேகம்


 Akkini Abishegam அக்கினி அபிஷேகம் தந்து ஆவி பொழிந்திடும் 1. சுட்டெரிக்கும் நல் அக்கினி சுத்திகரிக்க எம்மையும் குற்றங்குறைகள் மற்றுங் கறைகள் முற்றிலும் நீக்கிடுமே எம்மில் - அக்கினி 2. பற்றினதே வான் அக்கினி பக்தன் எலியா கூப்பிட வேண்டுதல் கேட்டு வானந் திறந்து வல்லமை ஊற்றிடுமே இன்று - அக்கினி 3. மோசேயுங் கண்ட அக்கினி முட்செடி மேலே பற்றிட அற்புத காட்சி தற்பரன் மாட்சி அண்டிட தந்திடுமே அதை - அக்கினி 4. நாதாப் அபியூ அக்கினி நாடி அழிந்தால் நஷ்டமே அந்நிய தீயை பட்சிக்கும் தேவ ஆவியே வந்தாளும் நல்ல - அக்கினி 5. மேலறை வந்த அக்கினி சீஷரை அன்று சந்திக்க பற்பல பாஷை பேசி மகிழ்ந்த பக்தி வரம் தாரும் தேவ - அக்கினி 6. இரண்டு மடங்கு அக்கினி இந்த கடைசி நாட்களில் மாம்சமான யாவரின் மேலும் மாரியுடன் பொழியும் பின் - அக்கினி