Sunday, 16 May 2021

Arulnathar Naamamathil அருள்நாதர் நாமமதில்


Arulnathar Naamamathil
அருள்நாதர் நாமமதில் 
ஒருமனமாய் உருகி  
தொழுகின்ற நேரமெல்லாம்  
எழும்பிடுவார் நடுவில் -- நாம்

1. இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே
கதறல்கள் கேட்டிடுவார்   
தவறாமல் அணைத்திடுவார்

2. நோயினால் நொந்தவரை
தாயன்பால் அணைப்பவரே 
பரிகாரி நானே என்பார்  
பட்சமாய் தாங்கிடுவார்
 
3. மாயையில் மயங்கினோரை
தயை தந்து மாற்றுவாரே
தூயாவி ஈந்திடுவார்
தூய்மையாய் மாற்றிடுவார்

En Aathumave Kalangidathe என் ஆத்துமாவே கலங்கிடாதே


 En Aathumave Kalangidathe என் ஆத்துமாவே கலங்கிடாதே உன்னத தேவன் உன் அடைக்கலமே வானமும் பூமியும் தானம் விட்டு நிலை மாறினாலும் (2) 1. பஞ்சம் பசியோ நிர்வாணமோ மிஞ்சும் வறுமையோ வந்திடினும் கொஞ்சமும் அஞ்சாதே தஞ்சம் தந்து உன்னைத் தாங்கிடுவார் - என் 2. உற்றார் உறவினர் மற்றும் பலர் குற்றமே கூறித் திரிந்திடினும் கொற்றவன் இயேசுன்னை பெற்ற பிதாவைப் போல் அரவணைப்பார் - என் 3. நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில் அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும் வஞ்சகன் எய்திடும் நஞ்சாம் கணைகளைத் தகர்த்திடுவார் - என் 4. வாழ்க்கைப் படகினில் அலை மோதி ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார் சூழ்ந்திடும் புயல் நீக்கி வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார் - என் 5. மரணமே வந்தாலும் மருளாதே சரணடைந்தால் தைரியம் தந்திடுவார் அரணவர் ஆபத்தில் திரணமாய் மதிப்பாய் உன் ஜீவனையே - என் 6. துன்ப பாதை செல்ல துணிந்திடுவாய் அன்பர் சென்ற பாதை அதுவேதான் துன்பமே உன் பங்கு துன்ப மூலம் தேவ ராஜ்யம் சேர்வாய் - என்

Saturday, 15 May 2021

Nithyanantha Karthar Yesuve நித்தியானந்த கர்த்தர் இயேசுவே


 Nithyanantha Karthar Yesuve 1. நித்தியானந்த கர்த்தர் இயேசுவே நித்தமும் பிரகாசிக்கின்றார் பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள் பரிசுத்தமுடன் மின்னுதே சீயோனிலே சுவிசேஷகர் ஜெப ஐக்கியமே காணுவோம் ஜெயங் கொண்டோராய் ஜெப வீரராய் சிலுவை யாத்திரை செல்லுவோம் 2. சிறு மந்தையின் பெரிய மேய்ப்பர் நெருங்கி வந்து நிற்கிறார் சின்னவன் ஆயிரம் பதினாயிரம் சேனைத் திரளாய் மாறுவான் - சீயோனிலே 3. உலகமெங்கும் சுவிசேஷத்தின் உயர்ந்த கொடி பறக்கும் திறந்த வாசலுள் பிரவேசித்து சிறந்த சேவை செய்குவோம் - சீயோனிலே 4. நரக வழி செல்லும் மாந்தருக்காய் நடு இராப்பகல் அழுதே நம் தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய் நனைந்து வருந்தி ஜெபிப்போம் - சீயோனிலே 5. அவமானங்கள் பரிகாசங்கள் அடைந்தாலும் நாம் உழைப்போம் ஆத்தும பாரமும் பிரயாசமும் அல்லும் பகலும் நாடுவோம் - சீயோனிலே 6. எதிரிகள் எதிரே பந்தி எமக் காயத்தப் படுத்தி எம் தலை எண்ணெயால் அபிஷேகித்தார் எரிகோ மதிலும் வீழ்ந்திடும் - சீயோனிலே 7. சீயோன் என்னும் சுவிசேஷகி சிகரத்தில் ஏறுகின்றாள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் இலக்கம் நோக்கியே ஓடுவோம் - சீயோனிலே

Friday, 14 May 2021

Enakken Ini Payame எனக்கேன் இனி பயமே


 Enakken Ini Payame எனக்கேன் இனி பயமே எந்தன் இயேசு என் துணையே என் துன்ப நேரத்திலே இயேசுவே என்னோடிருப்பார் கடந்த வாழ் நாட்களெல்லாம் கர்த்தரே என்னை சுமந்தார் கண்ணீர் யாவையும் துடைத்தார் 1. உண்மையாய் என்னையும் நேசித்தார் உள்ளங்கையில் என்னை வரைந்தார் அவர் அறியாதொன்றும் வந்ததில்லை அவரையே சார்ந்து கொண்டேன் 2. கர்த்தரோடிசைந்தே நடந்தேன் கிருபை சமாதானம் ஈந்தார் விசுவாசத்தால் நானும் பிழைத்ததால் விரும்பி என்னை அணைத்தார் 3. யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும் யோர்தான் நதி புரண்டு வந்தும் எலியாவின் தேவன் என் ஜெபங்களை ஏற்று பதில் அளித்தார் 4. இத்தனை அற்புத நன்மைகள் கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன் இதுவரை வழிகாட்டி நடத்தினார் இன்னமும் காத்திடுவார் 5. உலகம் முடியும் வரையும் உந்தனோடிருப்பேன் என்றவர் மகிமையில் சேர்ப்பாரே நம்பிக்கையில் மேன்மை பாரட்டுகிறேன்

Wednesday, 12 May 2021

Pirana Nathan Ennil பிராண நாதன் என்னில்

 

Pirana Nathan Ennil

1. பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினை

தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே

அன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்

நீச தூசி என்னை நேசிக்கலானீரே

 

என் இயேசுவே நான் உம்முடையவன்

நீர் என் சொந்தம் என்றென்றுமாய்

ஆவி ஆத்துமா சரீரம் பலியாய்

படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர்

 

2. தாயின் வயிற்றினில் பிரித்ததாம் நாள் முதல்

பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரே

வஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமே

பறித்திழுத்தெந்தனை உம் சொந்தமாக்கினீர்  - என்

 

3. குயவனின் கையிலே களிமண்ணைப் போலவே

என்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகா

என் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதா

உம் நோக்கம் என்னிலே பூரணமாகட்டும்  - என்

 

4. நேசர் கரத்தினில் தீமை ஏதுமுண்டோ

யாதும் என் நன்மைக்கே என்பதை அறிகுவேன்

ஜுவாலிக்கும் அக்கினியோ பெருக்கான வெள்ளமோ

பட்சிக்க விட்டிடீர்  அமிழ்த்தவும் பார்த்திடீர்  - என்

 

5. என்னையும் எந்தனுக் குள்ளதாம் யாவையும்

நேசர் கரத்தில் முற்றுமாய் வைத்திட்டேன்

ஜீவனோ மரணமோ பிராண நாதன் என்னில்

வாஞ்சிப்பதெதுவோ சம்பூரணமாகட்டும்  - என்

 

6. மரண இருள் பள்ளம் தாண்டிடும் நேரத்தில்

இயேசு என் நேசரின் கரமதைக் காண்பதால்

மகிழ்வுடன் ஏகுவேன் அக்கரை யோர்தானில்

நித்தியம் நித்தியம் ஆனந்தம் கொள்ளுவேன்  - என்


Paraloga Rajiya Vasi பரலோக இராஜ்ஜிய வாசி


 Paraloga Rajiya Vasi பரலோக இராஜ்ஜிய வாசி பரன் இயேசுவின் மெய் விசுவாசி புவி யாத்திரை செய் பரதேசி பரன் பாதம் நீ மிக நேசி 1. ஆபிரகாம் ஈசாக்குடனே ஆதிப் பிதாக்கள் யாவருமே தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே தேடியே நாடியே சென்றனரே அந்நியரே பரதேசிகளே – பரலோக 2. சாவு துக்கம் அங்கே இல்லையே சாத்தானின் சேனை அங்கில்லையே கண்ணீர் கவலை அங்கில்லையே காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோக 3. பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும் மண் ஆசை வேண்டாம் இயேசு போதும் பாவமே வேண்டாம் இயேசு போதும் லோகமே வேண்டாம் இயேசு போதும் ஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோக 4. நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன் நல் மனச் சாட்சி நாடிடுவேன் இத்தரை யாத்திரை கடந்திடுவேன் அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன் அந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோக

Tuesday, 11 May 2021

Deva Samathanam Kirubaiye தேவ சமாதானம் கிருபையே


 Deva Samathanam Kirubaiye தேவ சமாதானம் கிருபையே தேவ சந்தோஷமும் நிறைவாயே தேவாசீர்வாதங்கள் தங்கிடவே தேவன் அருள் ஈவாரே 1. ஆணி கடாவின கரமதே அன்புடன் உன்னை அணைக்கின்றதே வல்லமை உன் மீதில் பாய்ந்திடவே கர்த்தர் வலக்கை நீட்டுகின்றார் 2. இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே இன்றைக்கும் உன் ஏசு மாறிடாரே கலங்காதே திகையாதே என் உள்ளமே கர்த்தர் துணை நிற்கின்றார் 3. தேவ சித்தம் என்றும் செய்திடுவாய் தேவகுமாரன் உன்னோடிருப்பார் உன் மேல் தன் கண் வைத்து ஆலோசனை தந்து உன்னை நடத்திடுவார் 4. கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே ஊழியம் செய்குவாயே 5. நல்ல தீர்க்காயுள் பெருகிடவே நித்திய ஜீவனும் பெற்றிடவே பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே பரன் தயை புரிவார் 6. வாழ் நாளெல்லாம் களிகூர்ந்திடவே வாடாத கிருபை ஈந்திடுமே கிருபை கிருபை என்றென்றுமுள்ளதே கர்த்தனை வாழ்த்திடுவோம்