Thursday, 28 January 2021

Thooya Devanai Thuthithiduvom தூய தேவனை துதித்திடுவோம்


 Thooya Devanai Thuthithiduvom

தூய தேவனை துதித்திடுவோம் நேயமாய் நம்மை நடத்தினாரே ஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம் போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா 1. கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள் கனிவுடன் நம்மை அரவணைத்தே நம் கால்களை கன்மலையின் மேல் நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் 2. யோர்தானைப் போல் வந்த துன்பங்களை இயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம் அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டே பரிசுத்த பாதையில் நடந்திடுவோம் 3. கழுகுக்கு சமமாய் நம் வயது திரும்பவும் வால வயதாகும் புது நன்மையால் புது பெலத்தால் நிரம்பியே நம் வாயும் திருப்தியாகும் 4. தாவீதுக்கருளின மாகிருபை தாசராம் நமக்குமே தந்திடுவார் எலிசாவைப் போல் இருமடங்கு வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார் 5. நலமுடன் நம்மை இதுவரையும் கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே கண்மணி போல் கடைசிவரை காத்திடும் கர்த்தரைப் போற்றிடுவோம்

Wednesday, 27 January 2021


 Thuthi Thangiya Paramandala

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார் நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி 3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார் ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி 4. அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் — துதி 5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன் கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் — துதி 6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் — துதி

Sunday, 24 January 2021

Setham Ara Yavum Vara சேதம் அற யாவும் வர


 Setham Ara Yavum Vara

1. சேதம் அற யாவும் வர கர்த்தர் ஆதரிக்கிறார் காற்றடித்தும் கொந்தளித்தும் இயேசுவை நீ பற்றப்பார். 2. இயேசு பாரார் அவர் காரார் தூங்குவார் என்றெண்ணாதே கலங்காதே தவிக்காதே நம்பினோனை விடாரே. 3. கண்மூடாத உறங்காத உன் கர்த்தாவைப் பற்றி நீ அவர்தாமே காப்பாராமே என்று அவரைப் பணி. 4. உன் விசாரம் மா விஸ்தாரம் ஆகிலும் கர்த்தாவுக்கு நீ கீழ்ப்பட்டு கிலேசமற்று அவருக்குக் காத்திரு. 5. தெய்வ கைக்கும் வல்லமைக்கும் சகலமும் கூடாதோ எந்தச் சிக்கும் எந்தப் பிக்கும் அவரால் அறும் அல்லோ 6. சீரில்லாத உன் ஆகாத மனதுன்னை ஆள்வது நல்லதல்ல அதற்கல்ல கர்த்தருக்குக் கீழ்ப்படு. 7. கர்த்தர் தந்த உன்மேல் வந்த பாரத்தைச் சுமந்திரு நீ சலித்தால் நீ பின்னிட்டால் குற்றம் பெரிதாகுது. 8. ஆமேன் நித்தம் தெய்வ சித்தம் செய்யப்பட்ட யாவையும் நீர் குறித்து நீர் கற்பித்து நீர் நடத்தியருளும்.

Saturday, 23 January 2021

Thuthisei Maname துதிசெய் மனமே


 Thuthisei Maname

துதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்திய உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே (2) 1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே - துதி 2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே - துதி 3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை - துதி 4. தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும் தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே - துதி 5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன் சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே - துதி

Friday, 22 January 2021

Inimai Inimai இனிமை இனிமை


 Inimai Inimai

இனிமை இனிமை இது இனிமை மகிமை மகிமை புது மகிமை இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால் இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை -3 1. காலையும் மாலையும் புது கிருபை கண்ணின் மணிபோல காக்கும் கிருபை இறுதிவரைக்கும் வரும் கிருபை நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை 2. மலைகள் விலகினாலும் மாறா கிருபை மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும் பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை 3. அனாதி சினேகத்தால் வந்த கிருபை ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை அழகிய தேவகுமாரன் இயேசு அளித்திட்ட அதிசயமான கிருபை 4. வனாந்தர வழிதனில் வந்த கிருபை வழிதப்பிப்போனோரைக் காக்கும் கிருபை வல்லமையுள்ள தேவனின் ஆவி வரம் தந்து காத்திட்ட தேவகிருபை

Thursday, 21 January 2021

Rajareega kempeera Thoniyode ராஜரீக கெம்பீர தொனியோடே


 Rajareega kempeera Thoniyode

1. ராஜரீக கெம்பீர தொனியோடே ராஜ ராஜனை தேவ தேவனை வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி வீரசேனை கூட்டமாக சேவிப்போம் மெய் சீஷராக ஏசுவின் பின் செல்லுவோம் முற்று முடிய வெற்றியடைய சற்றும் அஞ்சிடாமல் ஏசு நாமத்தில் சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம் 2. சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாக சூரியனைப் போல் சந்திரனைப் போல் கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள் - மெய் சீஷராக 3. தாவீதை விரட்டிடும் சவுல் கைகள் தளர்ந்திடவே அடங்கிடவே பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும் பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம் - மெய் சீஷராக 4. ஜெபமே எமது அஸ்திபாரமே ஜெபமின்றியே ஜெயமில்லையே ஆவியில் ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம் ஆச்சரியமாகவே நடத்துவார் - மெய் சீஷராக 5. செங்கடல் நடுவிலே நடத்தினார் எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர் கடலை பிளந்து நதியைப் பிரித்து காய்ந்து நிற்கும் பூமியிலே நடத்துவார்- மெய் சீஷராக 6. பரலோகவாசிகள் சுதேசிகள் பரதேசிகள் சில சீஷர்கள் பின்திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல் பற்றும் விசுவாசத்தோடு முன்செல்வோம் - மெய் சீஷராக 7. குணசாலிகள் கூடாரவாசிகள் கூட்டமாகவே கூடிச்சேரவே மணவாளனை நம் மன்னன் இயேசுவை தம் மங்கள சுபதினம் கண்ணால் காண்போம் - மெய் சீஷராக

Wednesday, 20 January 2021

Mangala Geethangal Padiduvom மங்கள கீதங்கள் பாடிடுவோம்


 Mangala Geethangal Padiduvom

1. மங்கள கீதங்கள் பாடிடுவோம் மணவாளன் இயேசு மனமகிழ கறை திரை நீக்கி திருச்சபையாக்கி காத்தனர் கற்புள்ள கன்னிகையாய் கோத்திரமே யூதா கூட்டமே தோத்திரமே துதி சாற்றிடுவோம் புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் 2. ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே ராஜாதி ராஜன் இயேசுவோடே இன ஜன நாடு தகப்பனின் வீடு இன்பம் மறந்து சென்றிடுவோம் 3. சித்திர தையலுடை அணிந்தே சிறந்த உள்ளான மகிமையிலே பழுதொன்றுமில்லா பரிசுத்தமான பாவைகளாக புறப்படுவோம் 4. ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே அவர் மணவாட்டி ஆக்கினாரே விருந்தறை நேச கொடி ஒளி வீச வீற்றிருப்போம் சிங்காசனத்தில் 5. தந்தத்தினால் செய்த மாளிகையில் தயாபரன் இயேசு புறப்பாடுவார் மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர் மன்னன் மணாளன் வந்திடுவர்