Sunday, 3 January 2021
Innor Aandu Mutrumai இன்னோர் ஆண்டு முற்றுமாய்
Innor Aandu Mutrumai1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் எங்களை மகா அன்பாய் காத்து வந்தீர் இயேசுவே உம்மைத் துதி செய்வோமே. 2. நீரே இந்த ஆண்டிலும் எங்கள் துணையாயிரும் எந்தத் துன்பம் தாழ்விலும் கூடத் தங்கியருளும். 3. யாரேனும் இவ்வாண்டினில் சாவின் பள்ளத்தாக்கினில் செல்லின் உந்தன் கோலாலே தேற்றும் நல்ல மேய்ப்பரே. 4. நாங்கள் உந்தன் தாசராய் தூய்மை பக்தி உள்ளோராய் சாமட்டும் நிலைக்க நீர் காத்து கிரீடம் ஈகுவீர். 5. ஏக கர்த்தராம் நீரே மன்னர் மன்னன் எனவே என்றும் உம்மைப் போற்றுவோம் உந்தன் வீட்டில் வாழுவோம்.
Saturday, 2 January 2021
Kelungal Tharapadum கேளுங்கள் தரப்படும்
Kelungal Tharapadum கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்தலேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) --- கேளுங்கள் ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே --- கேளுங்கள் ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே (2) --- கேளுங்கள் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் (2) அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார் இயேசு (2) --- கேளுங்கள் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்நானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே (2) --- கேளுங்கள் ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி ஆசிகள் அளித்தாரே உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே --- கேளுங்கள்
Friday, 1 January 2021
Yesu Thane Athisaya Theivam இயேசு தானே அதிசய தெய்வம்
Yesu Thane Athisaya Theivamஇயேசு தானே அதிசய தெய்வம் என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் 1. அதிசயமே அவர் அவதாரம் அதிலும் இனிமை அவர் உபகாரம் அவரைத் தெய்வமாய் கொள்வதே பாக்கியம் அவரில் நிலைத்து நிற்பதே சிலாக்கியம் — இயேசு 2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால் அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு 3. மனிதன் மறு பிறப்படைவதவசியம் மரித்த இயேசுவால் அடையும் இரகசியம் மறையும் முன்னே மகிபனைத் தேடு இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு 4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம் பாவிகளை நேசிக்கும் தெய்வம் ஆவியோடு உண்மையாய் தொழுதால் தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு
Ananthame Jeya Jeya ஆனந்தமே ஜெயா ஜெயா
Ananthame Jeya Jeyaஆனந்தமே ஜெயா ஜெயா அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே 2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே 3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும் தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத் தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே
Thursday, 31 December 2020
Senaigalin Karthar Nallavare சேனைகளின் கர்த்தர் நல்லவரே
Senaigalin Karthar Nallavareசேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மை காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம் பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம் 1. வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும் ஏசு நம்மோடங்கு நடக்கின்றார் 2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம் ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும் கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன் 3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம் கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம் ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின் அன்பில் நிலைத்திருப்போம் 4. ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார் ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்
Wednesday, 30 December 2020
En Meiparai Yesu என் மேய்ப்பராய் இயேசு
En Meiparai Yesuஎன் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா என்றென்றும் இன்பமல்லவா 2. தம் பாதையில் என்னை நடத்திடவே என் கரத்தை பிடித்தே முன் நடப்பார் அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே 3. என்னோடவர் நடந்திடும் போதினிலே எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா 4. என்னையவர் அன்பால் நிரப்பியதால் எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால் என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே 5. என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள என்னை என்றும் போதித்து நடத்துகின்றார் என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் 6. விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய் என்னையவர் ஆயத்தமாக்கினார் என்னானந்தம் ஆஹா என்னானந்தம் எனக்கென்றும் பேரானந்தமே
Tuesday, 29 December 2020
Athi Maram Pol Ethanai அத்திமரம் போல் எத்தனை
Athi Maram Pol Ethanaiஅத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள் தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள் 1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம் இயேசு ஆசையோடு கனியைத் தேடினார் ஏமாற்றம் இப்படித்தானே மனிதர்கள் வாழும் வாழ்க்கை பல வேஷம் 2. ஊருக்குள்ளே உத்தமர் போல நடிப்பார்கள் ஆனால் உண்மையிலே அத்தி மரம் போல் இருப்பார்கள் பேசுவதெல்லாம் வேதங்கள் போடுவதெல்லாம் வேஷங்கள் 3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும் வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும் அன்பு அதிலே இல்லையென்றால் வாழ்ந்து என்ன லாபம் தான் 4. மனிதனை மட்டும் நம்புவதாலே பயனில்லை ஆனால் இறைவனை மட்டும் நம்பிடுவாய் துன்பமில்லை கவலைகள் எல்லாம் போக்கிடுவார் கண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்
Subscribe to:
Posts (Atom)