Sunday, 13 December 2020

Engum Pugal Yesu எங்கும் புகழ் இயேசு


 Engum Pugal Yesu

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே உங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் 1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்--- எங்கும் 2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண் திறக்கவே பல்வழி அலையும்பாதை தப்பினோரைப் பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்--- எங்கும் 3. தாழ்மை சற்குணமும் தயைகாருண்யமும் தழைப்பதல்லோ தகுந்த கல்வி பாழுந்துர்க்குணமும்பாவச் செய்கையாவும் பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ --- எங்கும் 4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச்செல்ல தூதர் நீங்களே தூயன் வீரரே கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக் கருணை நிறை வசனம் கற்றிடுவீர் --- எங்கும்

Wednesday, 9 December 2020

Kaanaga Paathai கானகப் பாதை


 Kaanaga Paathai

1. கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும் மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன்செல்லுவாய் பயப்படாதே கலங்கிடாதே பாரில் ஏசு காத்திடுவார் பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் 2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே ஏசுவின் பின்னே நடந்தே தூய பஸ்கா நீ புசித்தே தேவ பெலனால் முன்செல்லுவாய் 3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும் கூட்டமாய் சென்றே கடப்பாய் சத்ரு சேனை மூழ்கி மாளும் ஜெயம் சிறந்தே முன்செல்லுவாய் 4.கசந்த மாரா உன்னைக் கலக்கும் கஷ்டத்தால் உன் கண் சொரியும் பின் திரும்பிச் சோர்ந்திடாதே நன்மை அருள்வார் முன்செல்லுவாய் 5.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும் கோர யோர்தான் வந்தெதிர்க்கும் தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால் தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய் 6.புதுக்கனிகள் கானான் சிறப்பே பாலும் தேனும் ஓடிடுமே இந்தக் கானான் கால் மிதித்து சொந்தம் அடைய முன்செல்லுவாய்

Tuesday, 8 December 2020

Unnathamaana Karthare உன்னதமான கர்த்தரே


 Unnathamaana Karthare

1. உன்னதமான கர்த்தரே இவ்வோய்வு நாளைத் தந்தீரே இதற்காய் உம்மைப் போற்றுவோம் சந்தோஷமாய் ஆராதிப்போம். 2. விஸ்தாரமான லோகத்தை படைத்த கர்த்தா எங்களை இந்நாள்வரைக்கும் தேவரீர் அன்பாய் விசாரித்து வந்தீர் 3. எல்லாரும் உமதாளுகை பேரன்பு ஞானம் வல்லமை மற்றெந்த மாட்சிமையையும் அறிந்து உணரச் செய்யும். 4. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே நீர் எங்கள் ஆத்துமாவிலே தரித்து எந்த நன்மைக்கும் நீர் எங்களை உயிர்ப்பியும். 5. தெய்வாவியே நல் அறிவும் மெய் நம்பிக்கையும் நேசமும் சபையிலே மென்மேலுமே வளர்ந்து வரச் செய்யுமே.

Saturday, 5 December 2020

Enthan Ullathil Puthu Unarvu எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு


 Enthan Ullathil Puthu Unarvu

1.எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு எந்தன் வாழ்வினில் புதுமலர்ச்சி எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும் எந்தன் இயேசுவால் புதிதாயின புதுவாழ்வு புது ஜீவன் புதுபாடல் என்னை சந்தித்த இயேசு தந்தார் ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன் ஆண்டவர் சமூகத்தை அலங்கரிப்பேன் 2.கதரேனரின் கடற்கரையில் கல்லறையிடை வாசம் செய்த பொல்லா ஆவி நாதர் பாதம் பணிய நல்ல அற்புத மாற்றம் பெற்றான் --- புதுவாழ்வு 3.ஓடையில் உருண்டோடி வரும் சின்னக் கற்களும் வடிவம் பெறும் சின்னத் தாவீதுக்கும் கோலியாத்தை வீழ்த்த கவண்கல் ஆயுதமாகிடும் --- புதுவாழ்வு 4. காட்டத்தி மரம் ஏறி ஒளிந்த குள்ளன் சகேயுவும் மாற்றம் பெற்றான் உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான் வெள்ளம் போல் மகிழ்வு பெற்றான் --- புதுவாழ்வு 5. சிலுவையண்டை வந்திட்டேனே இயேசுவின் கரம் பற்றிட்டேனே எந்தன் இயேசுவுடன் கொண்ட உறவு என்னை புது வடிவமாய் திகழச் செய்யும்--- புதுவாழ்வு

Wednesday, 2 December 2020

Paduven Paravasam Aguven பாடுவேன் பரவசமாகுவேன்


 Paduven Paravasam Aguven

பாடுவேன் பரவசமாகுவேன் பறந்தோடும் இன்னலே 1.அலையலையாய் துன்பம் சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில் அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை 2.என்று மாறும் எந்தன் துயரம் என்றே மனமும் ஏங்கையில் மாராவின் கசப்பை மதுரமுமாக்கி மகிழ்வித்த மகிபனையே 3.ஒன்றுமில்லாத வெறுமை நிலையில் உதவுவாரற்றுப் போகையில் கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து தாகம் தீர்த்த தயவை 4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி பட்டினி சஞ்சலம் நேர்கையில் வானமன்னாவால் ஞானமாய் போஷித்த காணாத மன்னா இயேசுவை

Tuesday, 1 December 2020

Karthar Kirubai Entrumullathu கர்த்தர் கிருபை என்றுமுள்ளது


 Karthar Kirubai Entrumullathu

கர்த்தர் கிருபை என்றுமுள்ளது என்றென்றும் மாறாதது ஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபை ஆண்டு நடத்திடுதே (2) கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர் பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மையுள்ளவர் 1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை கரத்தைப் பிடித்து நடத்தினாரே தகப்பன் பிள்ளையை சுமப்பது போல தோளில் சுமந்து நடத்தினாரே 2. வியாதி படுக்கை மரண நேரம் பெலனற்ற வேளையில் தாங்கினாரே விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே 3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி தைரியப்படுத்தி நடத்தினாரே 4.கண்ணீர் கவலை யாவையும் போக்க கர்த்தர் இயேசு வருகின்றாரே கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம் அவரோடு நாமும் பறந்து செல்வோம்

Yesuve Enthan Nesare இயேசுவே எந்தன் நேசரே


 Yesuve Enthan Nesare

இயேசுவே எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றிப் பாடுவேன் 1. பாவத்தை போக்கிடும் பரமன் நீரல்லவா பாதையை காட்டிடும் மேய்ப்பன் நீரல்லவா அரணும் என் கோட்டையும் இறைவா நீரல்லவா (2) எந்தன் அடைக்கலம் தஞ்சம் கோட்டை என்றும் நீரே அல்லவா (2) 2. வாழ்க்கையாம் படகிலே தலைவன் நீரல்லவா வாழ்விலும் தாழ்விலும் துணைவர் நீரல்லவா ஒரு நாள் வான் மீதிலே வருவீர் என் மன்னவா (2) எந்தன் ஜீவ காலம் வரை உம்மையே எண்ணி வாழ்வேன் நாயகா (2)