Tuesday, 17 November 2020

Udaintha Ullamathai உடைந்த உள்ளமதை


 Udaintha Ullamathai

உடைந்த உள்ளமதை தேற்றிடும் யேசுநாதா (2) காரிருள் சூழ்கையிலே காத்திடும் கரத்தினால் (2) ஆ ... ஆ ... ஆ ... 1. நேசித்தவர்கள் கைவிட்டபோது நெஞ்சம் உருகியே நின்றேன் (2) என் நேசர் எங்கே என் நேசர் எங்கே என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ... 2. கண்ணீரின் பாதையைக் கடக்கும்போது துணையாய் யாருமே இல்லை (2) யாரிடம் செல்வேன் யாரிடம் செல்வேன் என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ... 3. ஆறுதலற்ற வாழ்வினைக் கண்டு துக்கத்தால் வாடியே போனேன் (2) ஆறுதல் எங்கே ஆறுதல் எங்கே என்றும்மை தேடி வந்தேன் (2) ஆ ... ஆ ... ஆ ...

Sunday, 15 November 2020

Thollai Kashtangal Soolnthidum தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்


 Thollai Kashtangal Soolnthidum

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என் உள்ளம் மாறிற்றே இயேசென்னைக் காக்கவல்லோர் 3.என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை யார் கைவிட்டாலும் பின்செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிட மாட்டார்

Saturday, 14 November 2020

Lo He Comes With Clouds


 


1. Lo he comes with clouds descending once for favoured sinners slain thousand thousand saints attending swell the triumph of his train. Hallelujah God appears on earth to reign. 2. Every eye shall now behold him robed in dreadful majesty those who set at naught and sold him pierced and nailed him to the tree deeply wailing shall the true Messiah see. 3. Now Redemption long expected see in solemn pomp appear all his saints by man rejected now shall meet him in the air Hallelujah See the day of God appear 4. Yea amen let all adore thee high on Thine eternal throne Saviour take the power and glory claim the kingdom for thine own Hallelujah Everlasting God come down.


Paavikaai Maritha Yesu பாவிக்காய் மரித்த இயேசு


 Paavikaai Maritha Yesu

1.பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார் கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார் திகிலோடு மேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே அவர் காயம் தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும் ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும் அல்லேலூயா வல்ல வேந்தே வந்திடும்.

Wednesday, 11 November 2020

Yaar Vendum Natha யார் வேண்டும் நாதா


 Yaar Vendum Natha

யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணாண வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை பதில் என்ன சொல்வேன் நீரே போதும் 2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம் பேரின்ப நாதா நீர் போதாதா யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ எங்கே நான் போவேன் உம்மையல்லால் 3. உற்றாரின் பாசம் உடன் வருமோ மற்றோரின் நேசம் மாறாததோ உம்மன்பின் நேசத்திற் கிணையாகுமோ ஏனையா கேட்டீர் இக்கேள்வியை 4. என்னைத் தள்ளினால் எங்கே போவேன் அடைக்கலம் ஏது உம்மையல்லால் கல்வாரி இன்றி கதியில்லையே கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன் 5. உம்மோடல்லாது வாழ்வது ஏன் உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன் மனம் போன வாழ்கை வாழ்க்கையல்ல வாழ்வேனே என்றும் உமக்காக நான்

Ooivunaalathanai yaasarithiduveer ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர்


 Ooivunaalathanai yaasarithiduveer

1. ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர் உலகிலுள்ளோரே நீர் ஓது மெய்த்தேவன்றன் ஆதி விதியிதை உள்ளத்திற் கொள்வீரே 2. ஆறுதினங்களும் லௌகீகவேலையை ஆதரவாய்ப் புரிவீர் ஆன வேழாந்தினம் வைதீகலலுவலை அவசியம் பார்த்திடுவீர் 3. ஆசோதை யாவர்க்கும் அவசியம் வேண்டுமென்றாதியி லெம்பரனார் அடுத்த வேழா நாளைப் பரிசுத்தமாக்கினார் அப்பரிசறியீரோ 4. அருமையாமந்நாளை அவமாக்கித் திருடீர் அதைத் திருநாளாக்கி ஆரியர் போதகங் கேட்டிடவாலயம் அதற்கு நடந்திடுவீர் 5. மக்களுந் தாயரும் வீட்டுடைத் தலைவரும் மற்றுள மித்திரரும் வாருங்களாலாயம் சேருங்கள் தேவனை வாழ்த்தி வணங்குவீரே

Monday, 9 November 2020

En Yesuve Naan Entrum என் இயேசுவே நான் என்றும்


 En Yesuve Naan Entrum

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழி நடத்தும் 1. உளையான சேற்றினின்று தூக்கியே நிறுத்தினீரே உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் --- என் 2. அலைந்தோடும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்யும் --- என் 3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின் செல்லுவேன் --- என் 4. அக்கினி சூளையிலே நின்ற எம் மெய் தேவனே விசுவாசம் திடமனதும் என்றென்றும் தந்தருளும் --- என் 5. ஆகாரின் அழுகுரலை அன்று நீர் கேட்டீரல்லோ கருத்துடன் ஜெபித்துமே நான் உந்தனைத் தேடுகிறேன் --- என்