Saturday 14 November 2020

Paavikaai Maritha Yesu பாவிக்காய் மரித்த இயேசு


 Paavikaai Maritha Yesu

1.பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார் கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார் திகிலோடு மேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே அவர் காயம் தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும் ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும் அல்லேலூயா வல்ல வேந்தே வந்திடும்.

Wednesday 11 November 2020

Yaar Vendum Natha யார் வேண்டும் நாதா


 Yaar Vendum Natha

யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணாண வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை பதில் என்ன சொல்வேன் நீரே போதும் 2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம் பேரின்ப நாதா நீர் போதாதா யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ எங்கே நான் போவேன் உம்மையல்லால் 3. உற்றாரின் பாசம் உடன் வருமோ மற்றோரின் நேசம் மாறாததோ உம்மன்பின் நேசத்திற் கிணையாகுமோ ஏனையா கேட்டீர் இக்கேள்வியை 4. என்னைத் தள்ளினால் எங்கே போவேன் அடைக்கலம் ஏது உம்மையல்லால் கல்வாரி இன்றி கதியில்லையே கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன் 5. உம்மோடல்லாது வாழ்வது ஏன் உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன் மனம் போன வாழ்கை வாழ்க்கையல்ல வாழ்வேனே என்றும் உமக்காக நான்

Ooivunaalathanai yaasarithiduveer ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர்


 Ooivunaalathanai yaasarithiduveer

1. ஓய்வுநாளதனை யாசரித்திடுவீர் உலகிலுள்ளோரே நீர் ஓது மெய்த்தேவன்றன் ஆதி விதியிதை உள்ளத்திற் கொள்வீரே 2. ஆறுதினங்களும் லௌகீகவேலையை ஆதரவாய்ப் புரிவீர் ஆன வேழாந்தினம் வைதீகலலுவலை அவசியம் பார்த்திடுவீர் 3. ஆசோதை யாவர்க்கும் அவசியம் வேண்டுமென்றாதியி லெம்பரனார் அடுத்த வேழா நாளைப் பரிசுத்தமாக்கினார் அப்பரிசறியீரோ 4. அருமையாமந்நாளை அவமாக்கித் திருடீர் அதைத் திருநாளாக்கி ஆரியர் போதகங் கேட்டிடவாலயம் அதற்கு நடந்திடுவீர் 5. மக்களுந் தாயரும் வீட்டுடைத் தலைவரும் மற்றுள மித்திரரும் வாருங்களாலாயம் சேருங்கள் தேவனை வாழ்த்தி வணங்குவீரே

Monday 9 November 2020

En Yesuve Naan Entrum என் இயேசுவே நான் என்றும்


 En Yesuve Naan Entrum

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழி நடத்தும் 1. உளையான சேற்றினின்று தூக்கியே நிறுத்தினீரே உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் --- என் 2. அலைந்தோடும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்யும் --- என் 3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின் செல்லுவேன் --- என் 4. அக்கினி சூளையிலே நின்ற எம் மெய் தேவனே விசுவாசம் திடமனதும் என்றென்றும் தந்தருளும் --- என் 5. ஆகாரின் அழுகுரலை அன்று நீர் கேட்டீரல்லோ கருத்துடன் ஜெபித்துமே நான் உந்தனைத் தேடுகிறேன் --- என்

Thursday 15 October 2020

viduthalai viduthalai விடுதலை விடுதலை


 viduthalai viduthalai

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தில் தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை (2) 1. தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை கெடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை என்ன சந்தோஷம் இந்த விடுதலை (2) எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் (2) – விடு 2. எரிக்கும் கோபப் பிடியினில் விடுதலை விதைக்கும் தீய பொறாமையில் விடுதலை அன்பர் இயேசுவே தந்த விடுதலை (2) இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே விடுதலை (2) – விடு 3. அடுக்காய் பேசும் பொய்யினில் விடுதலை மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே (2) தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் விடுதலை (2) – விடு 4. மாறிட்ட எந்தன் உள்ளத்தில் விடுதலை மாறிடா அன்பர் அடிமையாய் மாற்றிடுதே என்ன சந்தோஷம் இந்த அடிமைக்கு (2) மீட்கும் அன்பை ருசித்திடவே ஆவலில்லையே (2) – விடு

Sunday 4 October 2020

Unthan Sitham Pola Ennai உந்தன் சித்தம் போல என்னை


 Unthan Sitham Pola Ennai

உந்தன் சித்தம் போல என்னை ஒவ்வொரு நாளும் நடத்தும் எந்தன் சித்தம் போல அல்ல என் பிதாவே என் தேவனே 1. இன்பமுள்ள ஜீவியமோ அதிக செல்வம் மேன்மைகளோ துன்பமற்ற வாழ்வுகளோ தேடவில்லையே அடியான் 2. நேர் வழியோ நிரப்பானதோ நீண்டதுவோ குறுகியதோ பாரம் சுமந்தோடுவதோ பாரில் பாக்கியமானதுவே 3. அந்தகாரமோ பயமோ அப்பனே பிரகாசமோ எந்த நிலை நீரளிப்பீர் எல்லாம் எனக் காசீர்வாதம் 4. ஏது நலமென்றறிய இல்லை ஞானம் என்னில் நாதா தீதிலா நாமம் நிமித்தம் நீதி வழியில் திருப்பி 5. அக்கினி மேக ஸ்தம்பங்களில் அடியேனை என்றும் நடத்தி அனுதினமும் கூட இருந்து அப்பனே ஆசீர்வதிப்பீர்

Saturday 3 October 2020

Anbil Ennai Parisuthanaaka அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க


 Anbil Ennai Parisuthanaaka

1. அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன் 2. மரித்தோரில் முதல் எழுந்ததினால் புது சிருஷ்டியின் தலையானீரே சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை --- என் 3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே முதற்பேராய் நீர் இருக்க ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே உம் சாயலில் நான் வளர --- என் 4. வருங்காலங்களில் முதற்பேராய் நீர் இருக்க நாம் சோதரராய் உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி ஆளுவோம் புது சிருஷ்டியிலே --- என் 5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே நான் இதற்கென்ன பதில் செய்குவேன் உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட என்னை தந்தேன் நடத்திடுமே --- என்