Sunday 30 August 2020

Unnathamanavarin உன்னதமானவரின்

Unnathamanavarin 1.உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் 2. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே 3. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் – இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் 4. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன்பக்கம் விழுந்தாலும் – அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே 5. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் 6. உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவர் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவர் 7. சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் 8. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர்

Wednesday 12 August 2020

Igathin Thukkam Thunbam இகத்தின் துக்கம் துன்பம்

Igathin Thukkam Thunbam 1. இகத்தின் துக்கம் துன்பம் கண்ணீரும் மாறிப்போம் முடிவில்லாத இன்பம் பரத்தில் பெறுவோம் 2. இதென்ன நல்ல ஈடு துன்பத்துக்கின்பமா பரத்தில் நிற்கும் வீடு மரிக்கும் பாவிக்கா 3. இப்போது விழிப்போடு போராட்டம் செய்குவோம் விண்ணில் மகிழ்ச்சியோடு பொற் கிரீடம் சூடுவோம் 4. இகத்தின் அந்தகார ராக்காலம் நீங்கிப்போம் சிறந்து ஜெயமாக பரத்தில் வாழுவோம் 5. நம் சொந்த ராஜாவான கர்த்தாவை நோக்குவோம் கடாட்ச ஜோதியான அவரில் பூரிப்போம்.

Tuesday 11 August 2020

Neerintri Vaalvethu Iraiva நீரின்றி வாழ்வேது இறைவா

Neerintri Vaalvethu Iraiva நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் (2) உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் 1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே (2) உம் வார்த்தையில் உண்டு அற்புதமே (2) — நீரின்றி 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர் உம்மையன்றி அணுவேதும் அசையாதையா (2) உம் துணையின்றி உயிர் வாழ முடியாதையா (2) — நீரின்றி 3. எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் (2) ஆயிரம் ஆண்டுகள் போதாதையா (2) — நீரின்றி

Sunday 9 August 2020

Aasirvathiyum Karthare ஆசீர்வதியும் கர்த்தரே

Aasirvathiyum Karthare ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 1. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே – வீசீரோ 2. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே – வீசீரோ 3. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவன் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ 4. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் – வீசீரோ 5. ஞான விவாகம் எப்போதும் ஞாபகமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாக தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ

Saturday 8 August 2020

Senaigalin Devan சேனைகளின் தேவன்

Senaigalin Devan சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர் 1. எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார் --- சேனை 2. சேனையின் கர்த்தரை நம்பிடுவாய் பாக்கியம் அடைந்திடுவாய் உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார் --- சேனை 3. எதிர்ப்பு ஏளனம் பெருகினாலும் ஜெய கர்த்தர் நமக்குண்டு ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம் ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம் --- சேனை 4. ஆவியின் வரத்தை தந்திடுவார் ஆவியை பொழிந்திடுவார் விரைந்திடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய் --- சேனை

Friday 7 August 2020

Arasanai Kanamal அரசனைக் காணாமல்

Arasanai Kanamal அரசனைக் காணாமலிருப்போமோ – நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ அனுபல்லவி பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ – யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ – யூத சரணங்கள் 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே – இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத — அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் – மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார் பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே - அவர் பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே – யூத — அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார் – அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார் இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் – நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் – யூத — அரசனை 4. அரமனையில் அவரைக் காணோமே – அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே மறைந்த உடு அதோ பார் திரும்பினதே – பெத்லேம் வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் – யூத — அரசனை 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே – ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே வன்கண்ணன் ஏரோதைப் பாராமல் – தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல் – யூத — அரசனை

Wednesday 5 August 2020

Karthar Unnai கர்த்தர் உன்னை

Karthar Unnai கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் நீ கலங்காதே மனமே 1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும் களங்களில் நிரம்பிடும் தானியமும் நிறைவான நன்மை உண்டாக கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார் வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார் தன் பெயரை உனக்கு வழங்கினாரே சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும் உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் பிறருக்கு நீயும் கடன் கொடுக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்