Neerintri Vaalvethu Iraiva
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் (2)
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே (2)
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே (2) — நீரின்றி
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா (2)
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதையா (2) — நீரின்றி
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் (2)
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா (2) — நீரின்றி
Arasanai Kanamal
அரசனைக் காணாமலிருப்போமோ – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ
அனுபல்லவி
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ – யூத
சரணங்கள்
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத — அரசனை
2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே - அவர்
பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே – யூத — அரசனை
3. அலங்காரமனை யொன்று தோணுது பார் – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் – யூத — அரசனை
4. அரமனையில் அவரைக் காணோமே – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே
மறைந்த உடு அதோ பார் திரும்பினதே – பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் – யூத — அரசனை
5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல் – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல் – யூத — அரசனை
En Inba Thunba Neram
என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னை தாங்கிடுவார் – என்
2. இவரே நல்ல நேசர் – என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் – என்
3. பார்போற்றும் ராஜன் – புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் – என்