Arasanai Kanamal
அரசனைக் காணாமலிருப்போமோ – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ
அனுபல்லவி
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ – யூத
சரணங்கள்
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத — அரசனை
2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே - அவர்
பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே – யூத — அரசனை
3. அலங்காரமனை யொன்று தோணுது பார் – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் – யூத — அரசனை
4. அரமனையில் அவரைக் காணோமே – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே
மறைந்த உடு அதோ பார் திரும்பினதே – பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் – யூத — அரசனை
5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல் – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல் – யூத — அரசனை
En Inba Thunba Neram
என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னை தாங்கிடுவார் – என்
2. இவரே நல்ல நேசர் – என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் – என்
3. பார்போற்றும் ராஜன் – புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் – என்
Enakkai Jeevan Vittavare
1. எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே — இயேசு
3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் — இயேசு
4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் — இயேசு