Tuesday 4 August 2020

Anantha Thuthi Oli ஆனந்த துதி ஒலி

Anantha Thuthi Oli ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ ஆ 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு — ஆ ஆ 2. ஆதி நிலை ஏகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோமே பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் — ஆ ஆ 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் — ஆ ஆ 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் — ஆ ஆ 5. ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல்நாதர் போற்றியே பாதம் தரிப்போம் அனாதி தேவன் அடைக்கலம் பாரில் அனாதையாவதே இல்லை – ஆ ஆ 6. பார் போற்றும் தேவன் நம் தேவன் பாரினில் வேறில்லை பாக்கியம் நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே வேறென்ன வாழ்வினில் வேண்டும் பிள்ளைகளும் சபையும் பிதாமுன்னே நிலைக்கும் பரிசுத்தர் மாளிகை எழும்பும் – ஆ ஆ

Sunday 2 August 2020

En Inba Thunba Neram என் இன்ப துன்ப நேரம்

En Inba Thunba Neram என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே ராஜனே தேற்றி என்னை தாங்கிடுவார் – என் 2. இவரே நல்ல நேசர் – என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் – என் 3. பார்போற்றும் ராஜன் – புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன் – என்

Friday 31 July 2020

Enakkai Jeevan Vittavare எனக்காய் ஜீவன் விட்டவரே

Enakkai Jeevan Vittavare 1. எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே — இயேசு 3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் — இயேசு 4. மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் — இயேசு

Unnai Sirushtithavar உன்னை சிருஷ்டித்தவர்

Unnai Sirushtithavar உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ கலங்கிடும் மாந்தரே உன் கண்ணீரை துடைத்திடு கவலையை விட்டு விட்டு வா இயேசுவைப் பின்பற்றி வா 1. காற்றும் கடலும் எதற்காக கனிமரமெல்லாம் எதற்காக சூரிய சந்திரனும் எதற்காக அத்தனையும் அது உனக்காக 2. மலையும் மலர்களும் எதற்காக நிலமும் நீரும் எதற்காக பாடும் பறவைகள் எதற்காக அத்தனையும் அது உனக்காக 3. சிலுவை சுமந்தது எதற்காக சிந்தின இரத்தம் எதற்காக ஜீவனை கொடுத்தது எதற்காக அத்தனையும் அது உனக்காக

Itho Manusharin Mathiyil இதோ மனுஷரின் மத்தியில்

Itho Manusharin Mathiyil இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே 2. தேவ ஆலயமும் அவரே தூய ஒளிவிளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும் சுத்த ஜீவநதியும் அவரே 3. மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தலமதுவே என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே 4. சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உம்மையே 5. முன்னோடியாய் இயேசு பரன் மூலைக்கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

Wednesday 29 July 2020

Enthan Yesu Vallavar எந்தன் இயேசு வல்லவர்

Enthan Yesu Vallavar எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார் ஆ பேரின்பம் அவர் என் தஞ்சமே அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன் 1.அற்புதமாம் அவர் அன்பு அண்டினோர் காக்கும் தூய அன்பு இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு மாறாதவர் எந்தன் இயேசு என்றும் சார்ந்திடுவேன் 2.சர்வ வல்ல தேவனிவர் சாந்தமும் தாழ்மை உள்ளவராம் எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம் நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை 3.குற்றங்களை மன்னித்தவர் தம்மண்டை என்னைச் சேர்த்துக் கொண்டார் எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர் சார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர் 4.கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் சீரான பாதை நடத்திடுவார் எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார் எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன் 5.ஜெயங் கொண்ட வேந்தனிவர் பாதாளம் யாவும் வென்றவராம் வெற்றியுடன் முன்சென்றிட கிருபை நல்கிடுவார் முன்செல்லுவேன் இயேசுவுடன் என்றும் ஆனந்தமே

Yesu En Parigari இயேசு என் பரிகாரி

Yesu En Parigari இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப இராஜா என் பரிகாரி 1. என்ன துன்பங்கள் வந்தாலும் என்ன வாதைகள் நேர்ந்தாலும் என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப இராஜா என் பரிகாரி 2. சாத்தான் என்னை எதிர்த்தாலும் சத்துரு என்னை தொடர்ந்தாலும் சஞ்சலங்கள் வந்தபோது – இன்ப இராஜா என் பரிகாரி 3. பணக் கஷ்டங்கள் வந்தாலும் மனக்கஷ்டங்கள் நேர்ந்தாலும் ஜனம் என்னை வெறுத்தாலும் – இன்ப இராஜா என் பரிகாரி 4. பெரும் வியாதிகள் வந்தாலும் கடும் தோல்விகள் நேர்ந்தாலும் பல சோதனை சூழ்ந்தாலும் – இன்ப இராஜா என் பரிகாரி 5. எனக்கென்ன குறை உலகில் என் இராஜா துனை எனக்கு என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப இராஜா என் பரிகாரி