Monday, 22 June 2020

High In The Heavens



1. High in the heavens eternal God
your goodness in full glory shines your truth shall break through every cloud that veils and darkens your designs. 2. Forever firm your justice stands, as mountains their foundations keep wise are the wonders of your hands your judgments are a mighty deep. 3. From the provisions of your house we shall be fed with sweet repast there mercy like a river flows and brings salvation to our taste. 4. Life, like a fountain, rich and free springs from the presence of the Lord and in your light our souls shall see the glories promised in your word.

Anathiyana Karthare அனாதியான கர்த்தரே





Anathiyana Karthare
1. அனாதியான கர்த்தரே தெய்வீக ஆசனத்திலே வானங்களுக்கு மேலாய் நீர் மகிமையோடிருக்கிறீர். 2. பிரதான தூதர் உம்முன்னே தம் முகம் பாதம் மூடியே சாஷ்டாங்கமாகப் பணிவார் நீர் தூய தூயர் என்னுவார். 3. அப்படியானால் தூசியும் சாம்பலுமான நாங்களும் எவ்வாறு உம்மை அண்டுவோம் எவ்விதமாய் ஆராதிப்போம் 4. நீரோ உயர்ந்த வானத்தில் நாங்களோ தாழ்ந்த பூமியில் இருப்பதால் வணங்குவோம் மா பயத்தோடு சேருவோம்.

Saturday, 20 June 2020

Yesuvin Irandam Varugai இயேசுவின் இரண்டாம் வருகை





Yesuvin Irandam Varugai
இயேசுவின் இரண்டாம் வருகை அதி வேகமாய் நெருங்கி வருதே ஆயத்தமாகிடுவோம் அன்பர் இயேசுவை சந்திக்கவே மாரநாதா அல்லேலூயா (4) 1. நித்திரையை விட்டு நாம் எழும்புவோம் நம் நீதியின் சூரியன் வருகிறார் இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம் இரட்சகர் வருகிறார் 2. பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம் பரிசுத்தர் இயேசு வருகிறார் நீதியாய் நியாயந்தீர்த்திடவே நியாயாதிபதியாக வருகிறார் 3. மரணத்தை வென்ற நம் ஆண்டவர் மணவாளனாகவே வருகிறார் கறைதிரையற்ற சபையினை தம்மோடு சேர்க்கவே வருகிறார்

Friday, 19 June 2020

Kaigalal Peyarka Padatha கைகளால் பெயர்க்கப் படாத





Kaigalal Peyarka Padatha
1. கைகளால் பெயர்க்கப் படாத பெரும் கல்லொன்று உருண்டோடுதே உலகத்தை நியாயம் தீர்க்க யூத சிங்கம் இறங்கினாரே ஆனந்தம் நான் பாடிடுவேன் உள்ளம் பொங்குதே பூரிப்பாலே ஆத்மநாதர் தேடி வந்தார் என்னை அழைத்து சென்றிடவே 2. பக்தன் நோவாவின் நாட்களிலே தேவன் மனுவுரு எடுத்தாரே பேழையின் கதவை அடைத்து அவ பக்தரை அழித்தாரே 3. மின்னலை போல கிழக்கிலே தோன்றி பிரகாசித்தார் மேற்கினிலே மேகம் சூழ அக்கினி கண்கள் இடி முழக்கத்துடன் வந்தார் 4. சந்திரனை மனிதன் அடைந்தான் மணவாட்டியை தேவன் சேர்த்தார் இக்கட்டில் நாம் தப்பிடுவோமே சாகாமை எனதுரிமை

Monday, 15 June 2020

Thoothar Thoni Ketkum தூதர் தொனி கேட்கும்


Thoothar Thoni Ketkum
1. தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப நாள்
தூயர் சேர்ந்து வானில் தோன்றிடும் அந்நாள் நேசர் இயேசு வானில் வந்திடும் அந்நாள் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம் செல்லுவோம் செல்லுவோம் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம் போற்றுவோம் புகழ்வோம் அன்பர் இயேசு நாமம் நாமும் போற்றுவோம் 2. பாவம் சாபம் யாவும் நீங்கிப் போகும் நாள் பாடும் சாவும் இல்லா நாட்டில் சேரும் நாள் மீட்பர் வாக்கை நம்பி வாழ்ந்தோர் கூடும் நாள் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம் 3. நீதன் இயேசு நியாயம் தீர்த்திடும் அந்நாள் பாரில் நேசர் இயேசு வந்திடும் அந்நாள் மீட்கப்பட்டோர் கூடி பாடிடும் அந்நாள் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம் 4. எந்தன் இயேசு என்னைக் காத்திடும் அந்நாள் சுதன் சுத்தரைப் பிரித்திடும் அந்நாள் நேசர் வலப்பக்கம் போய்ச் சேரும் அந்நாள் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம் 5. அன்பர் மீட்பை பெற்றோர் கூடிப் பாடும் நாள் அண்ணல் இயேசுவைக் கண்டு களிக்கும் நாள் அல்லேலூயா பாட்டில் ஓசை கேட்கும் நாள் இன்ப கானான் நாட்டின் நேராய் செல்லுவோம்

Rajathi Rajan Devathi இராஜாதி இராஜன் தேவாதி

Rajathi Rajan Devathi இராஜாதி இராஜன் தேவாதி தேவன் வேகம் வருகின்றாரே நம் இயேசு இராஜா வருவார் எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார் ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் (3) 1. முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும் வெள்ளங்கி தரித்தவராய் ஜெயக் கொடிகள் பிடித்திடுவார் மீட்பின் கீதங்கள் பாடிடுவார் ஆஹா என்ன பேரின்பம் அது (3) - இராஜாதி 2. தீட்டுள்ளதொன்றும் உள்ளே செல்லாத மேலோக ஆட்சி இது துக்கம் நோயும் அங்கில்லையே பசி தாகமும் அங்கே இல்லை பெரும் அல்லேலுயா முழக்கமே (3) - இராஜாதி 3. என்ன சந்தோஷம் நித்திய சந்தோஷம் மீட்பின் சந்தோஷம் இது சஞ்சலம் தவிப்பும் இல்லையே நித்திய மகிழ்ச்சி நம் தலை மேலே இயேசு இரத்தத்தின் புண்ணியமிது (3) - இராஜாதி 4. நம் மீட்பர் உயிரோடிருப்பதால் நாம் கண்ணால் அவரைக் காண்போம் நாம் தூசிகள் உதறியே தூய்மையை அணிந்திடுவோம் நம் தூய தேவனைக் காண (3) - இராஜாதி 5. பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும் காலம் இதுவே தானே நீதிமானே நீதி செய்வாய் பலனோடு வாரேன் என்றார் ஆமேன் இயேசுவே வாரும்மையா (3) - இராஜாதி

Sunday, 14 June 2020

We Three Kings





1. We three kings of Orient are
Bearing gifts we traverse afar Field and fountain moor and mountain following yonder star. O star of wonder star of night Star with royal beauty bright Westward leading still proceeding Guide us to thy perfect light. 2. Born a King on Bethlehem’s plain Gold I bring to crown Him again King forever ceasing never over us all to reign. 3. Frankincense to offer have I Incense owns a Deity nigh Prayer and praising voices raising Worshiping God on high. 4. Myrrh is mine its bitter perfume Breathes a life of gathering gloom Sorrowing sighing bleeding dying Sealed in the stone cold tomb. 5. Glorious now behold Him arise King and God and sacrifice Alleluia Alleluia Sounds through the earth and skies.